ரஜினிகாந்த் – முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு..; நடந்தது என்ன¿
ரஜினிகாந்த் – முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் சந்திப்பு..; நடந்தது என்ன¿
இன்று ஜனவரி 1 தேதி 2025 ஆம் ஆண்டு பிறந்தது.. வழக்கம்போல தன் ரசிகர்களை தனது போயஸ் கார்டன் இல்லத்தில் வீட்டிற்கு வெளியே வந்து ரசிகர்களை பார்த்து கை அசைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
இந்த வரவேற்புக்கு பின் சில நிமிடங்களுக்குப் பிறகு.. “நல்லவர்களை ஆண்டவன் சோதிப்பான் கைவிடமாட்டான்.. ஆனால் கெட்டவர்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான் ஆனால் கைவிட்டு விடுவான்.. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வெல்கம் 2025″ என ரஜினிகாந்த் பதிவிட்டு இருந்தார்.
பொதுவாக புத்தாண்டு தினத்தில் புத்தாண்டு வாழ்த்துக்களை மட்டுமே தெரிவிப்பார் ரஜினிகாந்த்.. ஆனால் இந்த முறை அவரது புத்தாண்டு வாழ்த்தில் சூசகமாக எதையோ பதிவிட்டார் என அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இந்த நிலையில் ஜனவரி 1 மாலை முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்..
இச்சந்திப்பிற்கு பிறகு நிருபர்களை சந்தித்த பன்னீர்செல்வம்..: புத்தாண்டை முன்னிட்டு மரியாதை நிமித்தமாக ரஜினியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். அவர் ஆரோக்கியத்துடன் உள்ளார். அரசியல் ரீதியில் எதுவும் விவாதிக்கவில்லை.” இவ்வாறு ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Tn Ex Cm O Paneer Selvam met Rajinikanth

