சாத்தான் தி டார்க் விமர்சனம்…
சாத்தான் தி டார்க் விமர்சனம்…
தெய்வங்களை வழிபடும் மக்கள் இருப்பது போல தீய சக்தி சாத்தான்களை வழிபடும் மக்களும் இருக்கிறார்கள்.. அந்த தீய சக்திகளை வணங்கும் பழங்குடியின மக்களை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் தான் ‘சாத்தான்’ தி டார்க்..
இந்த மையக்கருவை வைத்து ஒரு த்ரில்லர் அனுபவத்தை கொடுத்துள்ளனர்.. தற்போது உள்ள தமிழ் சினிமாவில் பேய் படங்கள் காமெடியாக மாறிவிட்டது.. ஆனால் இதில் முழுக்க முழுக்க சீரியஸ் திரில்லர் ஆக கொடுத்திருக்கும் இயக்குனருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

ஸ்டோரி….
அஸ்தினாபுரத்தில் உள்ள பழங்குடியின மக்கள் காக்கை வடிவத்தில் உள்ள சாத்தானை வழிபடுகின்றனர்.. இந்த கதை காலமானது 1950 70 90 கால கட்டங்களில் நடப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது.
தங்கள் இஷ்ட தெய்வத்திற்கு நரபலி கொடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.. அந்த சடங்கில் ஒரு தவறு நடக்கவே அது சாத்தான் சாபமாக மாறிவிடுகிறது..
இப்படியான சூழலில் நாயகன் எப்.ஜே.. இவரின் காதலி ஐரா.. இவரின் அம்மா மோனா பத்ரே.. இவர் சாத்தானின் மீடியமாக செயல்படுகிறார்..
ஒரு கட்டத்தில் இந்த பகுதியில் பல கொலைகள் நடக்க இது சாத்தானின் செயல் என்பதை மக்கள் அறிந்து கொள்கின்றனர்.. இதனால் சாத்தானை எதிர்க்க ஊர் மக்கள் ஒன்று கூடுகின்றனர்..
அதன் பிறகு நடந்தது என்ன.? வென்றது மக்களா? சாத்தானா? என்பதெல்லாம் திரில்லர் கலந்த கதை.

கேரக்டர்ஸ்…
படத்தின் இயக்குனர் ஹிந்து மதத்தை சேர்ந்தவர்.. பட தயாரிப்பாளர் கிறிஸ்டின்.. ஆனாலும் இந்த படம் முழுக்க முழுக்க கிறிஸ்தவ மதத்திற்கு எதிராகவே உருவாக்கப்பட்ட சாத்தான் கதையாகும்..
பல படங்களில் அம்மா அக்கா வேடங்களில் நடித்தவர் மோனா பத்ரே.. கதைநாயகியாக மிரட்டி இருக்கிறார்.. தன்னைத்தானே கொடூரமாக தாக்கிக் கொள்வது.. பல்லை பிடுங்கிக் கொள்வது.. கண்களை குத்திக் கொள்வது.. நாக்கை அறுத்துக் கொள்வது என ஒரு ராட்சியாகவே வாழ்ந்திருக்கிறார்.. படத்திற்கு சென்சாரில் ஏ சர்டிபிகேட் கிடைத்திருப்பதால் பலவீனமானவர்கள் இந்த படத்தை காண வேண்டாம்..
நாயகனாக எஃப்.ஜெ.. தான் நேசிக்கும் பெண்ணுக்காக சாத்தானை எதற்கும் இவரது போராட்டம் ரசிக்க வைக்கிறது..
பள்ளி மாணவியாக ஐரா.. சாத்தான் பிடித்த அம்மாவிடம் மாட்டிக் கொண்டு தங்கையை போராடும் இவரது முயற்சி ரசிகர்களை ஈர்க்கும்..
சாந்தினி தமிழரசன்.. இவரது கேரக்டர் படத்தின் கிளைமாக்ஸ் நெருங்கி வரும் வேளையில் வருகிறது.. ஆனாலும் கொடுத்த பாத்திரத்தில் சபாஷ் போட வைக்கிறார் சாந்தினி.
ஸ்ரீஜா ரவியின் நடிப்பு பேசப்படும்.. எல்லாம் தெரிந்து கொண்டு இவர் ஏன் மறைக்கிறார் என்று எதிர்பார்ப்பை இவரது கேரக்டர் உருவாக்கும்..
ஐராவின் தோழி அழகில் கவர்கிறார்… கம்பீரமான தாடி வைத்த போலீஸ் அதிகாரி நடிப்பில் கவனிக்க வைக்கிறார்.. போஸ்ட்மார்ட்டம் செய்யும் ஊழியர்கள் அந்த அறை அந்த அறைக்குள் இருக்கும் பெட்டிகள் ஐராவின் வீடு அனைத்தும் கலை இயக்குனருக்கு பாராட்டு சேர்க்கும்..

டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவாளர் பாலா ஜி.ராமசாமி.. படத்தில் லைட்டிங் லோ பட்ஜெட் என்றாலும் ஒரு திரில்லர் படத்திற்கு ஏற்ப காட்சிகளை அமைத்திருக்கிறார..
அஷ்வின் கிருஷ்ணாவின் இசை பெரும் பலம்.. பேய் படங்கள் காமெடியாக விட்ட நிலையில் மீண்டும் திரில்லர் அனுபவத்தை தன் இசை மூலம் கொடுத்து ரசிகர்கள் சீட்டு நுனியில் உட்கார வைத்து அலற விட்டிருக்கிறார்..
ராஜேஷ் சிவனின் ஒலி வடிவமைப்பில் கொஞ்சம் இரைச்சல் என்றாலும் ரசிக்கலாம்..

மணிகண்டன் ராமலிங்கம் என்பவர் இயக்கியிருக்கிறார்.. பேய் பட ரசிகர்களுக்கு பேய் பிடிக்கும் என்ற வகையில் காட்சிகளையும் அமைத்து இருப்பது சிறப்பு.. இரண்டாம் பாகத்தை நோக்கி திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதால் காட்சிகளின் தெளிவான முடிவில்லை..
வழக்கமான பேய் படங்களில் இருந்து மாறுபட்டு ஒரு திரில்லர் அனுபவத்தை பெறலாம்..
Satan The Dark movie review
—

