நீ FOR EVER விமர்சனம்..
நீ FOR EVER விமர்சனம்..
ஸ்டோரி…
சுதர்சன் கோவிந்த் – நாயகன்
அர்ச்சனா ரவி – நாயகி
தாத்தா ஒய் ஜி மகேந்திரன் கண்டிப்பில் வளர்கிறார் நாயகன் சுதர்சன்.. இவர் ஒரு Tech Developer.. Mobile App Creator..
நீ பார் எவர் என்ற ஒரு டேட்டிங் ஆப் டெவலப் செய்கிறார்.. இவரது ஆப் டெவலப்புக்கு போதுமான ஆதரவு இல்லாத நிலையில் காதல் அனுபவம் எதிர்பார்க்கிறார்.. எனவே ஒரு காதலியை தேடுகிறார்..
இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம்.. சினிமா இயக்குனராக ஆசைப்படுகிறார் நாயகி அர்ச்சனா.. அப்போது ஒரு காதல் கதையை எடுத்து வர சொல்கிறார் தயாரிப்பாளர்… தனக்கு காதல் அனுபவம் இருந்தால் காதல் கதையை எழுதலாம் என நினைக்கும் நாயகி ஒரு டேட்டிங் ஆப் நாயகனை சந்திக்கிறார்..
இருவரும் ஏதோ ஒரு காரணத்திற்காக காதலிக்க நினைக்கிறார்கள்.. ஆனால் நாயகன் உண்மையாகவே காதலிக்க தொடங்குகிறார்.. ஆனால் நாயகியோ பொய்யான காதலுடன் இணைகிறார்..
அதன் பிறகு நடந்தது என்ன.? காதல் கை கூடியதா.? இவர்களின் லட்சியம் நிறைவேறியதா என்பதெல்லாம் மீதிக்கதை..


கேரக்டர்ஸ்…
Sudharsan Govind as Ajay
Archenaa Ravi as Mathi
Prathu (Prathosh) as Rocky
Noble james as Cooky
Vidya as Revathy
Y Gee Mahendran as Arumugam
Nizhalgal Ravi as Yogi
MJ sriram as Prabhakar
Rethika Srinivas as Mahalakshmi
அம்மாவின் சூழ்நிலையால் தாத்தாவிற்கு கட்டுப்பட்டு வளரும் அப்பாவி இளைஞராக சுதர்சன் கோவிந்த்.. காதலியை தேடி அலைந்த பின் அவருக்கு ஏற்படும் மாற்றங்களை அழகாக முகபாவனைகளில் காட்டியிருக்கிறார்.. ஒரு கட்டத்தில் அவளின் காதல் பொய்யானது என்பது தெரிந்து கொள்ளும்போது அடடா இவருக்கு இப்படி ஒரு நிலைமையா என ஏங்க வைக்கிறார்..
நாயகி அர்ச்சனா ரவி.. துரு துருப்பான நடிப்பில் இளமை துள்ளலுடன் கவர்கிறார்.. உடைகளில் நேர்த்தி.. அர்ச்சனாவின் தோழியாக வருபவர் இரண்டாவது நாயகி போல மனம் கவர்கிறார்..
கொஞ்ச நேரமே வந்தாலும் ஸ்ரீஜா ரவி நடிப்பின் மூலம் மனதில் நிறைகிறார்.. இவரது குரல் இவருக்கு கூடுதல் பிளஸ்.. ( ஸ்ரீஜா ரவியின் இன்னொரு படம் சாத்தான் என்ற படமும் இன்று திரைக்கு வந்துள்ளது)
நாயகனின் நண்பர்களாக வருபவர்கள் கொஞ்சம் ஓவர் ஆக்டிங்…
கண்டிப்பான தாத்தா ஒய் ஜி மகேந்திரன் இவரது மருமகன் நிழல்கள் ரவி.. அனுபவ நடிப்பில் கவர்கின்றனர்.. ஆனால் தாத்தாவை விட மகன் கம்பு வைத்து நடப்பது வயதான தோற்றம் கொஞ்சம் ஓவர்..

டெக்னீசியன்ஸ்…
Production: Zhen Studios
Producer: Pugaz & Eden
Writer & Director : Ashokkumar Kalaivani
Music : Ashwin Hemanth
DOP : Raja Bhattacharjee
Editor : S.A.Nagarjun
Art Director: Varnaalayaa Jagadeesan
Costume Designer : Sindhuja Ashok
Makeup : Kalaivani Balan
Lyricist: Ku.Karthick
அஸ்வின் ஹேமந்த் இசையமைத்திருக்கிறார்.. பாடல்கள் ஓகே..
ராஜா பட்டாச்சாரி ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்..
அசோக் குமார் கலைவாணி என்பவர் படத்தை இயக்கியிருக்கிறார்..
கடந்த காலத்தில் இழந்த உறவுகளை திரும்ப பெற முடியாது.. ஆனால் நிகழ்காலத்தில் எந்த காரணத்திற்காக நமக்காக நிற்கும் உறவுகளை இழக்கக் கூடாது என்ற வசனம் சிறப்பு.. இந்த ஒன்லைன் தான் இந்த படத்தின் ஒட்டுமொத்த திரைக்கதையும்..
நாயகியின் தயாரிப்பாளர் விவகாரத்து… நிழல்கள் ரவி விவகாரத்து.. இரண்டிற்கும் போதுமான வலுவான காரணம் இல்லை.. சின்ன விஷயங்களுக்காக டைவர்ஸ் நம்ப முடியாத ஒன்று..
முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் திரைக்கதையில் விறுவிறுப்பு.. குடும்ப பாசத்துடன் காதலும் சேரும் போது அதன் வலிமையை உணர வைத்திருக்கிறார் இயக்குனர் அசோக் குமார் கலைவாணி..
Nee Forever movie review
———

