கேரளாவில் எஸ்பி பாலசுப்ரமணியம் சிலை & இசை விழா.; ரஜினி பங்கேற்பு.?
கேரளாவில் எஸ்பி பாலசுப்ரமணியம் சிலை & இசை விழா.; ரஜினி பங்கேற்பு.?
கேரளா – பாலக்காடு மாவட்டத்திலுள்ள வி.டி. பட்டதிரிபாட் நினைவிடத்தில் (V.T. Bhattathiripad Cultural Complex) எஸ்பிபி-யின் 10 அடி உயர முழு உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது..
ஏற்கனவே ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் எஸ்பிபி-க்கு சிலை திறக்கப்பட்டுள்ளது., தற்போது கேரளாவிலும் உருவச்சிலை நிறுவப்பட்டுள்ளது.. இதற்கான விழா மார்ச் 31ஆம் தேதி நடைபெற உள்ளது..
மலையாள பாடகர்களின் சங்கமான ‘சமம்’ (SAMAM – Singers Association of Malayalam Movies) மற்றும் பாலக்காடு ஸ்வரலயா அமைப்பு இணைந்து இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளன.
விழாவைத் தொடர்ந்து, “சமம் சங்கீத மேகம்” என்ற பெயரில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது… இதில் எஸ் பி பாலசுப்ரமணியம் பாடிய அனைத்து மொழிகளிலும் உள்ள பாடல்களும் பாடப்பட உள்ளது..
இந்தச் சிலை திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொள்ளுமாறு, நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சமீபத்தில் சந்தித்து பாடகர் விஜய் யேசுதாஸ் நேரில் அழைப்பு விடுத்துள்ளார்..

சிற்பி உன்னி கனாயி இந்தச் சிலையை மிக நுணுக்கமாக வடிவமைத்துள்ளார்.
ரஜினியின் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியவர் எஸ் பி பாலசுப்ரமணியம்.. ரஜினியின் திரைப்படங்களில் அறிமுக பாடல்கள் எப்போதும் எஸ்பிபி குரல் தான் இடம் பெற்றிருக்கும்.. கடைசியாக அண்ணாத்த படத்திலும் எஸ்.பி பாலசுப்ரமணியம் குரல் பாடல் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது..
Late Singer S.P. Balasubramanyam statue (SPB) will be inaugurated in Kerala
A 10-foot bronze statue of legendary singer S.P. Balasubrahmanyam (SPB) will be inaugurated in Kerala on March 31, 2026, at the V.T. Bhattathiripad Cultural Complex in Palakkad, near the Government Medical College. The statue, crafted by sculptor Unni Kanayi, will be unveiled by musician M.M. Keeravani alongside the inauguration of an SPB Memorial Park.

