ONE ஒன் மேன் விமர்சனம்.. எல்லா புகழும் சங்ககிரி ராஜ்குமார் ஒருவருக்கே..!
ONE ஒன் மேன் விமர்சனம்.. எல்லா புகழும் சங்ககிரி ராஜ்குமார் ஒருவருக்கே..!
இதுவரை எத்தனையோ திரைப் படங்களில் எத்தனையோ கேரக்டர்களை தொழில்நுட்ப கலைஞர்களை நாம் பார்த்திருப்போம்..
ஆனால் இதில் முழுக்க முழுக்க எல்லா கேரக்டர்களுமே ஒரே ஆள்… அதுமட்டுமின்றி எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் ஒரே ஆளாக இருந்து செய்திருக்கிறார்.. அவர் தான் சங்ககிரி ராஜ்குமார்.. ஒன் மேன்.. அப்படி என்ன கதை இதுதான் அந்த விமர்சனம்..
ஸ்டோரி…
ஆசைப்படலாம் பேராசைப்படக் கூடாது என்பது மனித இனத்திற்கான எச்சரிக்கை சொல் ஒருவேளை அவர்கள் பேராசை பட்டால் அதுவும் பெரிய பேராசை பட்டால் என்னவாகும் என்பதுதான் இந்த ஒன் மேன்..
ஐந்து நண்பர்கள் ஒரு காரில் பயணிக்கின்றனர்.. அப்போது வழி தவறி ஒரு காட்டுப் பகுதியில் அந்த கார் சென்று விடுகிறது… அங்கே இருக்கும் ஆய்வகத்தில் இவர்கள் செல்கின்றனர். அங்கு ஒரு விஞ்ஞான பரிசோதனையை இவர்கள் முயற்சிக்கும் போது அதன்படி உலகத்தில் இவர்கள் 5 பேர தவிர எல்லாரும் மறைந்துவிடுகின்றனர்..
இப்படியான சூழ்நிலையில் அந்த ஐந்து பேர் என்ன செய்தனர்.? அவர்களின் பேராசை அவர்களை எப்படி தடுமாற வைத்தது என்பதுதான் மீதிக்கதை..
ஐந்து கேரக்டர்கள் கொஞ்சம் வேறுபாடு காட்டி இருக்கலாம்.. உடல் மொழியில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. அல்லது ஒவ்வொரு உடலை கேரக்டரையும் மாற்றி அமைத்திருக்கலாம்…

நடிகர்கள் & தொழில்நுட்ப கலைஞர்…
இந்தப் படத்தில் உள்ள அனைத்து கேரக்டர்களையும் அனைத்து தொழில்நுட்ப பணிகளையும் ஒருவரே செய்திருக்கிறார் அந்த சங்ககிரி ராஜ்குமார் க்கு முயற்சிக்கு கோடான கோடி பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.. இதற்கு முன்பே இவர் வெங்காயம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் என்பதும் இங்கே கூடுதல் தகவல்..
உலக சினிமாவில் இப்படி ஒரு படம் கூட வந்திருக்குமா என்று தெரியவில்லை.. ஒரு ஹீரோ ஒரு வில்லன் ஒரு டிரைவர் ஒரு அப்பாவி ஒரு குறும்புக்காரன் என ஐந்து கேரக்டர்களை இவரே செய்திருக்கிறார்..
தசாவதாரம் படத்தில் 10 கேரக்டர்களை கமல் செய்து இருப்பார்.. ஆனால் பல விதமான மேக்கப் தொழில்நுட்ப கலைஞர்கள் அதில் பணிபுரிந்து இருந்தனர்.. ஆனால் இதில் எடிட்டிங் கேமரா இசை வசனம் மேக்கப் கலை காஸ்ட்யூம் என அனைத்தையும் சங்ககிரி ராஜ்குமார் ஒருவரே செய்திருக்கிறார்..
இதற்கு வெறுமனே நாடகம் போல் காட்சிகளை அமைக்காமல் ரயில் விபத்து, ஹெலிகாப்டர் பறப்பது, அமெரிக்க செல்வது.. சாகசம் செய்வது என பல வியப்பூட்டும் காட்சிகளையும் அமைத்திருக்கிறார்..
தரம் இல்லை.. தொழில்நுட்பத்தில் உயர்வு இல்லை.. கிராபிக்ஸ் சரியாக இல்லை என சில காட்சிகளை விமர்சனம் செய்யலாம்..
ஒரு தனி மனிதனால் இத்தனை உழைப்புகளை செய்ய முடியாது.. கிட்டத்தட்ட 5 வருடங்கள் இதற்காக அவர் ஒருவரே முயற்சி செய்து அனைத்தையும் செய்து இருக்கிறார்.. படத்தின் இறுதியில் மேக்கிங் வீடியோ காட்டப்படுகிறது..
அதில் அவர் பட்ட கஷ்டங்களை அனைத்தையும் கண் முன் நிறுத்தி இருக்கிறார்கள்.. எனவே ONE MAN உழைப்புக்கு சங்ககிரி ராஜ்குமார் அவர்களுக்கு பாராட்டுக்கள்..
Sangagiri Rajkumar One Man movie review
—-

