ரேகை வெப் சீரிஸ் விமர்சனம் 4/5.. ராஜேஷ் குமாரின் த்ரில்லிங் நாவல்

ரேகை வெப் சீரிஸ் விமர்சனம் 4/5.. ராஜேஷ் குமாரின் த்ரில்லிங் நாவல்

 

ரேகை வெப் சீரிஸ் விமர்சனம் 4/5.. ராஜேஷ் குமாரின் த்ரில்லிங் நாவல்

 

ராஜேஷ் குமார் எழுதிய ஒரு நாவலின் மையக் கதையிலிருந்து ஈர்க்கப்பட்டு ஒரு கருவை எடுத்து ஒரு வெப் சீரிஸை தந்துள்ளார் இயக்குனர் தினகரன்.

 

ஸ்டோரி…

நான்கு கொலைகள் வெவ்வேறு இடத்தில் நடக்கிறது.. நான்கும் ஒரே மாதிரியான கொலை.. ஆனால் ஒரே நேரத்தில் நடப்பதால் இதை ஒருவர் மட்டுமே செய்திருக்க முடியுமா என்ற விசாரணையில் இறங்குகிறது காவல்துறை

ஒரு வாலிபர் இறந்து கிடக்க வெட்டப்பட்ட கைகள் வேறொரு இடத்தில் கிடைக்க ஆனால் அது இவரின் கை இல்லை என்று தெரிய வருகிறது..

இப்படியான குழப்பமான சூழ்நிலையில் சப் இன்ஸ்பெக்டர் பாலஹாசன் மற்றும் கான்ஸ்டபிள் பவித்ரா ஜனனி இருவரும் விசாரிக்கின்றனர்.. இதனிடையில் இவர்களுக்குள் சின்ன காதலும் மோதலும் தொடர்கிறது..

இந்த பரபரப்பான விசாரணையில் பல சுவாரசியமான ட்விஸ்ட் ஏற்படுகிறது.. இதை அழகாக தன்னுடைய வழக்கமான திரில்லர் பாணியில் திரைக்கதை அமைத்திருக்கிறார் பிரபல எழுத்தாளர் ராஜேஷ் குமார்..

கேரக்டர்ஸ்…

பாலஹாசன், பவித்ரா ஜனனி, அஞ்சலி ராவ், வினோதினி வைத்தியநாதன், ராகேஷ் கார்த்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.

விடுதலை படத்தில் ஒரு போலிஸ் கான்ஸ்டபிள் ஆக நடித்த பாலஹாசன் தான் இந்தப்பட கதை நாயகன்.. கம்பீரமான தோற்றத்துடன் முறுக்கேறி நம்மையும் அந்த விசாரணையில் இறக்கியிருக்கிறார்.

நாயகி பவித்ரா ஜனனி.. இவரது உடல் மொழி.. இவரது உதட்டு மொழி அனைத்தும் கவர்கிறது.. நெல்லை தமிழ் பேசி நம் மனதிற்கு நெருக்கமாகிறார்..

போஸ்ட்மார்ட்டம் செய்யும் டாக்டர் வினோதினி எதார்த்தமான நடிப்பில் கவர்கிறார்..

நான்காவது எபிசோடு முதல் வரும் ராகேஷ் கார்த்திக்.. அவரது தோற்றமும் அவரது நடிப்பும் நம்மை யாருப்பா இந்த ஸ்மார்ட் பையன் என்று கவனிக்க வைக்கிறது..

டெக்னீசியன்ஸ்…

இசையமைப்பாளர் ஆர்.எஸ்.ராஜ் பிரதாப்.. பின்னணி இசையில் திரில்லர் கதைக்கு உயிரூட்டிருக்கிறார்..

ஒளிப்பதிவாளர் மகேந்திரா எம்.ஹெண்ட்ரி.. இந்த திரில்லர் கதை பக்கபலமாக அமைந்திருக்கிறார்..

படத்தொகுப்பாளர் துரை பிரகாஷ், ஒவ்வொரு எப்பிசோட் முடிவிலும் ஒரு எதிர்பார்ப்பை எகிற வைக்கிறார்..

பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார் நாவலை தழுவி இத்தொடரை இயக்கியிருக்கிறார் எம்.தினகரன்.. எவரும் எதிர்பார்க்காத யூகிக்க முடியாத திரைக்கதையை அமைத்து நம்மை ஆச்சரியப்பட வைக்கிறார்..

ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளாக இருந்தாலும் கூட அவர்களது கைரேகை வேறாக இருக்கும்.. அப்படியான சூழ்நிலையில் ஒரே மாதிரி கைரேகை ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.. அந்த குழப்பம் என்ன என்பதுதான் சுவாரஸ்யமான திரைக்கதை..

ரேகை – 7 எபிசோடுகள் கொண்ட கிரைம் திரில்லர் சீரீஸ் Zee5-ல் நவம்பர் 28ல் வெளியாகிறது.

 

Regai web series review