BP100 விமர்சனம் 4.25/5.. எந்த சூழ்நிலையிலும் நேர்மை தவறாத அரசு அதிகாரிகளுக்கு சல்யூட்

BP100 விமர்சனம் 4.25/5.. எந்த சூழ்நிலையிலும் நேர்மை தவறாத அரசு அதிகாரிகளுக்கு சல்யூட்

BP100 விமர்சனம் 4.25/5.. எந்த சூழ்நிலையிலும் நேர்மை தவறாத அரசு அதிகாரிகளுக்கு சல்யூட்

 

ஸ்டோரி…

செல்வாக்குமிக்க ஜாதி சங்க தலைவர் பாக்யராஜ்.. இவரது மகள் ஒரு விபத்தில் மரணம் அடைகிறார்.. தனது செல்ல மகளை உடல் கூறாய்வு செய்யாமல் (அதாவது போஸ்ட் மார்டம்) செய்யாமல் உடலை தரவேண்டும் என்கிறார் பாக்யராஜ்..

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவிக்கிறார் அரசு டாக்டர் தான்யா ரவிச்சந்திரன்.. இது கொலையா.? விபத்தா.? தற்கொலையா? என்பதை அறிய வேண்டும் என்கிறார்..

எனவே தன் சிஷ்யன் டேனியல் பாலாஜியை அனுப்பி போஸ்ட்மாடம் செய்யாமல் உடலை எடுத்து வர சொல்கிறார்.. இதன் பிறகு ரவுடிக்கும் மருத்துவருக்கும் நடக்கும் பிரச்சனைதான் இந்த BP180

கேரக்டர்ஸ்…

நடிகர் டேனியல் பாலாஜி மறைந்துவிட்டார்.. ஒருவேளை அவர் உயிரோடு இருந்தால் அவருக்கு கிடைத்த பாராட்டுக்கள் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சி ஆயுளை கொடுத்து இருக்கும்.. மிரட்டல் நடிப்பை கொடுத்திருக்கிறார்.. ரியலி மிஸ் யூ டேனியல்.

நயன்தாரா.. கீர்த்தி, திரிஷா உள்ளிட்ட ஹீரோயின்கள் மட்டுமே கதையின் நாயகியாக நடித்திருப்பார்கள்.. இதில் அந்த பாத்திரத்தை சவாலாக ஏற்று தான்யா மிரட்டி இருக்கிறார்.. இப்படி ஒரு அரசு மருத்துவர் இருக்க வேண்டும் என மருத்துவர்களையும் வியக்க வைப்பார்.

எந்த சூழ்நிலையிலும் நேர்மை தவறாத அரசு மருத்துவர்களுக்கு சமர்ப்பணம் என்று சொன்னால் அது மிகையல்ல..

பல படங்களில் கலகலப்பான பாக்யராஜ் பார்த்திருப்போம்.. இதில் கலங்க வைக்கும் நடிப்பை போஸ்ட் மாடம் செய்யும் காட்சியில் கொடுத்து மிரள வைத்திருக்கிறார்..

டேனியல் பாலாஜிக்கு பக்கபலமாக இருக்கும் அருள் தாஸ் நடிப்பில் மிரட்டல்.. இவரை போலீஸ் கமிஷனர் தமிழ் மிரட்டும் காட்சியில் நம்மை பதபதக்க வைக்கும்..

கமிஷனர் தமிழ், நயனா, ஸ்வேதா டோரத்தி, ஜாக் அருணாசலம், ரங்கா என அனைவருமே அசத்தல்..

டெக்னீசியன்ஸ்…

ராமலிங்கத்தின் ஒளிப்பதிவும், ஜிப்ரானின் இசையும் படத்துக்கு பக்கா பொருத்தம்..

கார் சேஸிங் சீன்… போலீஸ் பட்டாளம் ஆஸ்பத்திரியில் திரளும் காட்சி.. கார் கண்ணாடியில் ஆடு ரத்தம் தெறிக்கும் காட்சி… கடற்கரையில் பலூன்கள் ஒட்டுமொத்தமாக பறக்கும் காட்சி என பல காட்சிகளை அடுக்கிக் கொண்டே போகலாம்… அத்தனையும் ஒளிப்பதிவாளருக்கு பாராட்டுக்களை குவிக்கும்..

JP என்பவர் இந்த படத்த இயக்கியிருக்கிறார்.. இவர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.. எனவே பல காட்சிகளில் அவரின் சாயல்.. ஆனாலும் எந்த சமரசம் செய்து கொள்ளாமல் அதிரடியாக பல காட்சிகளை அமைத்து நம்மை டென்சன் (BP) எகிற வைத்துவிட்டார்..

தமிழ் சினிமாவில் போன் பேசும் இடைவெளி காட்சிகள் நிறைய இருக்கும்.. இனி BP 100 INTERVAL இணையும்.. அந்த அளவிற்கு தான்யாவின் நடிப்பு பேசப்படும்..

முக்கியமாக டேனியல் பாலாஜி மனைவியாக நடித்தவரின் முதுகு மட்டுமே காட்டி இருக்கிறார்கள்.. ஒரு காட்சி கூட முகம் காட்டப்படவில்லை…. மனைவி கேரக்டர் வேறு ஒரு மனைவி இவரிடம் வந்துவிட்டார். ஆனால் அவருக்கு தன் மகளை காண வேண்டும் என்ற நோக்கம்.. மீண்டும் மகளுடன் சேர நினைக்கும் அந்த தாயின் முகத்தை காட்ட விரும்பவில்லை.. ” என சொன்ன இயக்குனர் ஜே பி க்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்..

 

BP 100 movie review

—–