ரெட் பிளவர் விமர்சனம்..: கோலிவுட்டில் ஒரு ஹாலிவுட் முயற்சி

ரெட் பிளவர் விமர்சனம்..: கோலிவுட்டில் ஒரு ஹாலிவுட் முயற்சி

ரெட் பிளவர் விமர்சனம்..: கோலிவுட்டில் ஒரு ஹாலிவுட் முயற்சி

 

ரெட் பிளவர் இப்படத்தின் கதை விஜய்க்காக எழுதப்பட்டது என்றும் இதில் விஜய் நடிக்க முடியாமல் போனதாலும் அவர் அரசியலுக்கு சென்று விட்டதாலும் விக்னேஷுக்கு இந்த கதை சொல்லப்பட்டதாக ஒரு பேட்டியில் தெரிவித்து இருந்தனர்.. என்ற விளக்கத்துடன் இந்த விமர்சனத்தை தொடர்கிறோம்..

ஸ்டோரி…

இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் 1947 ஆம் ஆண்டில் நேதாஜி அவர்களால் நாட்டை பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஓர் இயக்கம் ‘ரெட் பிளவர்’.. அதன்படி 100 ஆண்டுகளுக்குப் பிறகு 2047 ஆம் ஆண்டில் ஒரு தீவிரவாத கும்பலால் (மால்கம் டைனஸ்டி) மீண்டும் ஆபத்து வருகிறது.. அப்போது இந்த ‘ரெட் பிளவர்’ இயக்கம் என்ன செய்தது.? ஹைடெக் கிராபிக்ஸ் காட்சிகளுடன் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஆண்ட்ரு பாண்டியன்..

கேரக்டர்ஸ்…

அண்ணன் – தம்பி என இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் விக்னேஷ்.. படம் முழுவதும் இவர் ஒரு காட்சியில் கூட தன் கூலர் கண்ணாடியை கழட்டவில்லை.. அண்ணன் தம்பிக்கு ஒரே ஒரு வித்தியாசம் ஹேர்ஸ்டைல் மட்டும்தான்..

அண்ணன் உளவு பிரிவு அதிகாரி.. தம்பி வில்லன்… அண்ணா காதலியை அடைய துடிக்கும் டேஞ்சர் பார்ட்டி.. படம் முழுவதும் ஆக்ஷன் என்பதால் ஒரு காட்சியில் கூட எமோஷன் இல்லை..

மனிஷா உள்ளிட்ட நிறைய மாடல் அழகிகள் நடித்துள்ளனர்..

மால்கம் டைனஸ்டி அமைப்பின் சர்வாதிகாரி தலைவாசல் விஜய்.. அதிக வரி போட்டு.. இந்தியாவையும் இந்திய பெண்களையும் அழிக்க நினைக்கிறார்..

இந்திய பிரதமராக இருப்பவர் ஒய்.ஜி.மகேந்திரன். ராணுவ தளபதியாக நாசர்… 2047-ல் ஓர் அழகிய இளம் பெண் ஜனாதிபதி ஆக வருகிறார்.. (ஆஹாங்.)

இவர்களுடன் ஜான் விஜய், சுரேஷ் மேனன், நிழல்கள் ரவி, மோகன்ராம், அஜய் ரத்னம், லீலா சாம்சன், யோக் ஜோபி என ஏகப்பட்ட தெரிந்த முகங்கள் உண்டு.. இவர்கள் சில வசனங்கள் பேசிவிட்டு சுட்டுக் கொல்லப்பட்டு விடுகின்றனர்..

ஒரு காட்சியில் நடிகர் சிவகுமார் போட்டோ வருகிறது.. அதனை சுட்டு தள்ளுவது போலவும் காட்சிகள் உள்ளது… அதெல்லாம் ஏன்.??

 

டெக்னீசியன்ஸ்…

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ்

இயக்கம் : ஆண்ட்ரு பாண்டியன்

ஒளிப்பதிவு : தேவசூர்யா
இசை : சந்தோஷ் ராம்
எடிட்டிர் : அரவிந்தன் ஆறுமுகம்

இந்தப் படத்தின் கதை 2047 ஆம் ஆண்டில் நடப்பதாக விவரிக்கப்பட்டுள்ளது.. அப்படி இருக்கையில் இன்றைய சூழ்நிலையை விட இன்னும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தொழில்நுட்ப வளர்ச்சி பெரிய அளவில் வளர்ந்திருக்கும்..

ஒவ்வொரு நாட்டுக்கும் அரசுக்கும் செக்யூரிட்டி பாதுகாப்புகள் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு வளர்ந்திருக்கும்.. அப்படி இருக்கையில் ஒருவர் ஒரு நாட்டை மிரட்டுவதும்.. அந்த நாட்டில் உள்ள பெண்களை எல்லாம் சித்திரவதை செய்து கொலை செய்வதும் முடியுமா.? அப்படி தலைமறைவாக இருக்கும் ஒரு ஹை கிளாஸ் வில்லனை ஒரு நபரை ஒரு சாதாரண போலீஸ் அதிகாரி எளிதில் சென்று சந்தித்து கொன்று விட முடியுமா என்ற பல கேள்விகளுக்கு விடை இல்லை..

இன்னும் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நாடு எப்படி இருக்கும் என்ற காட்சிகளை அழகுப்படுத்தி இருக்கலாம்.. அதை விடுத்து எப்பொழுதும் எங்கெங்கிலும் ஸ்மோக்.. கலர் கலராக புகையை மூட்ட விட்டு அதில் கிராபிக்ஸ் காட்சிகளுடன் துப்பாக்கி சத்தங்களுடன் காட்சி அமைத்திருக்கிறார் இயக்குனர்..

விமானங்கள், சாட்டிலைட், ஹை டெக் கட்டிடங்கள் எனப் பல காட்சிகளை செட்டுப் போட்டும் கிராபிக்ஸ் காட்டியும் வியக்க வைத்துள்ளார் இயக்குனர்… இதில் கேமராமேன் மற்றும் கலை இயக்குனர் பணியை பாராட்ட வேண்டும்..

முக்கியமாக பின்னனி இசையை பாராட்ட வேண்டும்.. காட்சிக்கு ஏற்ப இசையை கூட்டியும் குறைத்தும் உயிரூட்டி இருக்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் ராம்..

ஆனால் எல்லா பெண்களையும் ரத்தம் தெறிக்க தெறிக்க சுட்டுக் கொல்வதும் இப்படியாக காட்சிகளை நகர்த்தி இருக்கிறார்..

ஆக ஒரு வரியில் சொல்லப்போனால் பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக் என்பது போல படத்தின் ஸ்டோரி & மேக்கிங் பாராட்டப்பட்டாலும் திரைக்கதையில் வடிவமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்..

இந்திய பெண்களைக் கொன்று குவிப்பதாக காட்சிகள் இருந்தாலும் அது காட்டப்படும் பெண்கள் எவரும் இந்திய ஜாடையில் இல்லை.. அனைவரும் ஆங்கிலேய பெண்களைப் போலவே இருக்கிறார்கள்.. அதில் கூட இயக்குனர் கவனம் செலுத்தவில்லை..

இந்தியாவை அச்சுறுத்த நினைக்கும் சக்திகளுக்கு இந்த படம் ஒரு எச்சரிக்கையான பதிவையும் கொடுக்க முயற்சித்துள்ளது.

ஆக தமிழ் சினிமாவில் ஒரு ஹாலிவுட் லெவலில் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்த படக்குழுவினருக்கு கூடை நிறைய ரெட் ப்ளவர்கள் கொடுத்து பாராட்டலாம்.. 🌹

 

Red Flower movie review