Balan The Boy 4.25/5.. பாலன் விமர்சனம்… சிறைப் பறவைக்கு சிறகடிக்க ஆசை…

Balan The Boy 4.25/5.. பாலன் விமர்சனம்… சிறைப் பறவைக்கு சிறகடிக்க ஆசை…

 

Balan The Boy 4.25/5.. பாலன் விமர்சனம்… சிறைப் பறவைக்கு சிறகடிக்க ஆசை…

 

ஸ்டோரி…

ஜெயிலிலிருந்து தன் மகன் ஐந்து வயது சிறுவனுடன் விடுதலை ஆகிறார் நாயகி.. அவர் சீக்கிரம் வெளியே வர அங்கிருக்க ஒரு விபச்சாரி பெண் உதவுகிறார்..

சிறையில் இருந்து வந்தேன் என்று சொன்னால் எவரும் வேலை தர மாட்டார்கள் என்பதற்காக சின்ன சின்ன பொய்கள் சொல்லி பெயரை மாற்றி மாற்றி வாழ ஆரம்பிக்கிறார்..

கணவன் துணை இல்லாத காரணத்தினால் பல இன்னல்களை சந்திக்கிறார்.. ஒரு கட்டத்தில் ஒரு பாட்டியை பார்த்துக் கொள்ளும் பணியில் சேர்கிறார்.. அவரின் மகன் வெளிநாட்டில் இருக்கும்போது போன் மட்டுமே செய்வார்.. பாட்டி வீட்டில் தங்கியிருந்து தன் மகனை படிக்க வைக்கிறார்..

ஒரு கட்டத்தில் பாட்டியும் இறந்து போகிறார்… இப்படியான சூழ்நிலையில் வெளிநாட்டில் இருந்து அந்த நபரும் வருகிறார்.. சிறையில் சந்தித்த விபச்சாரியம் வருகிறார்..

அதற்குப் பிறகு என்ன நடந்தது.? இவரின் வாழ்க்கை என்ன ஆனது.? மகனுக்கு எப்படியான வாழ்க்கை அமைத்துக் கொடுத்தார் தாய்.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

சிறுவன் பாலனாக ஆதிசேஷன் கே.ஆர்.. அம்மாவுக்கு கட்டுப்பட்டு அம்மா செல்லும் பொய்களை எல்லாம் அழகாக இவன் ஒப்புவிக்கும் காட்சியில் கூட ஸ்கோர் செய்கிறான்.. ஸ்கூல் சென்ற பிறகு ஏற்படும் மாற்றங்களை அழகாக முகத்தில் காட்டி இருக்கிறான்.. கொஞ்சம் வார்த்தைகளை மட்டும் பேசி கொஞ்சும் மொழியில் கலக்கி இருக்கிறான்..

துப்பாக்கி வைத்திருக்கும் பாட்டியிடம் எங்க அம்மா உனக்கு விஷம் வைத்து விடுவார்கள் என்று சொல்லும் காட்சியில் சிரிக்காமல் இருக்க முடியவில்லை…

வளர்ந்த பாலனாக ஜினன்.. எங்கோ சென்று யாரால் வழி நடத்தப்பட்டு வாழ்க்கை தட்டு தடுமாறி திசை மாறிய ஒரு இளைஞன் மீண்டும் தன் அம்மாவை தேடி வரும் உணர்வுகளை அழகாக காட்டியிருக்கிறார்… ஒரு கட்டத்தில் இன்ஸ்பெக்டர் தன் அம்மாவை மறைத்து வைத்திருக்கிறார் என்ற யோசணையில் அவரை எதிர்த்து மல்லுக்கட்டும்போது ஒரு பாசம் மிகுந்த மகனாக பளிச்சிடுகிறார்..

கதையின் நாயகியாக ஃபர்சானா பலதிங்கல்.. உருண்ட கண்கள் அதிலே பயம் வேஷம் பாசம் பதட்டம் என அனைத்தையும் பர்ஃபெக்ட்டாக காட்டியிருக்கிறார் பர்சானா.. அம்மா வர வரைக்கும் அங்கேயே தான் இருக்கணும் என்று அம்மா சொல்லும் அந்த வார்த்தையின் வலிமை ஒரு குழந்தையின் நம்பிக்கையை காட்டும் செயல்..

சிறப்பு தோற்றத்தில் டோவினோ தாமஸ்.. அடர்ந்த தாடி அழுக்கான உடை என வித்தியாசமான தோற்றத்தில் வருகிறார்.. சிறப்பான நடிப்பையும் கொடுத்திருக்கிறார்… ஆனால் இந்த கெஸ்ட் ரோல் கேரக்டர் இவர் தேவையா? ஒருவேளை படத்தின் பப்ளிசிட்டிக்கா.?

இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பவித்ரன் என்ற கேரக்டர் படத்திற்கு ஆணிவேர்.. இப்படி எல்லாம் போலீஸ்காரர்கள் இருப்பார்களா என்ற கேள்வி நிச்சயம் எழும்.. அதுபோல தனக்கு பிரச்சனை என்றால் காதலியை கூட காட்டிக் கொடுத்து விடுவார்.. காரியவாதி கேரக்டருக்கு கனகச்சிதமாக பொருந்தி இருக்கிறார்..

அதே சமயம் காவல் துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்ற மற்றொரு போலீசையும் அடையாளப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித்.. ஜெயில் வாழ்க்கை அழகான காடு அழகான வீடு அழகான பள்ளி என ஒவ்வொன்றையும் கண்களுக்கு காட்சி ஆக்கியிருக்கிறார்…

சுஷின் ஷாம் இசையில் பயம் பதட்டம் பாசம் என அனைத்தும் நம்முடன் ஒட்டிக் கொள்கிறது..

எளிமையான கதையில் எளியவர்களை சாமானிய ரசிகர்களை கவர்ந்து விடலாம் என்ற முனைப்பில் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர்.. அதில் முழு வெற்றி பெற்று இருக்கிறார்.. இதுதான் கதை என்று நாம் யூகிக்க முடிந்தாலும் இதை எப்படி எடுத்து செல்ல முடியும் என்ற எதிர்பார்ப்பை நம்மில் விதைத்து படம் முழுவதும் ஆச்சரியமான திருப்பங்களுடன் கொண்டு சென்று இருக்கிறார்..

கதையாசிரியர் ஜித்து மாதவன்.. சிறையில் இருந்து தன் குழந்தையுடன் வெளிவரும் ஒரு பெண் சமூகத்தில் தன்னை மறைத்துக் கொள்ள என்னெல்லாம் செய்வாள் என்பதை தன் திரைக்கதை மூலம் ஜில்லென்று சொல்லி இருக்கிறார் ஜித்து மாதவன்…

’மஞ்சுமல் பாய்ஸ்’.. என்ற மாபெரும் வெற்றியை கொடுத்த சிதம்பரம் இந்த படத்தின் இயக்குனர் ஆவார்.. அந்த வெற்றியை இதிலும் தக்க வைத்திருக்கிறார்.. கிட்டத்தட்ட ஐந்து கேரக்டர்களை மட்டுமே மெயின் ஆக வைத்து சிறந்த கலைஞர்கள் மூலம் தன் இயக்கத்தை சிறப்பாக்கி இருக்கிறார் சிதம்பரம்..

சிறைப் பறவைக்கு சிறகடிக்க ஆசை…

 

Balan The Boy movie review