நூறு சாமி விமர்சனம்… நாற்பதிலும் காதல் வரும்… நல் வாழ்க்கை தொடங்கும்..!

நூறு சாமி விமர்சனம்… நாற்பதிலும் காதல் வரும்… நல் வாழ்க்கை தொடங்கும்..!

 

நூறு சாமி விமர்சனம்… நாற்பதிலும் காதல் வரும்… நல் வாழ்க்கை தொடங்கும்..!

 

 

ஸ்டோரி…

25 வயதிலேயே தன் கணவரை இழந்த ஸ்வாசிகா தன் இரு மகனுடன் வசித்து வருகிறார்.. மூத்தவர் அஜய்.. இரண்டாவது மகன் சக்தி..

கணவன் இல்லாமல் கஷ்டப்படுவதால் பெற்றோர் மற்றும் அண்ணன் உதவியை கேட்கிறார் ஸ்வாசிகா.. தந்தையை விட்டு தன்னால் வர முடியாது என்கிறார் அம்மா..

ஒரு கட்டத்தில் இவரே கிடைத்து வேலைகள் எல்லாம் செய்து ட்ராவல்சில் பணிபுரிந்து கஷ்டப்பட்டு நல்ல முறையில் தன் மகன்களை நன்றாக படிக்க வைக்கிறார்..

இவருக்கு அறிமுகமான ஒரு நபர் விதவை பணத்திற்கு எழுதிப் போடட்டுமா.? என்கிறார்..

கடைசி வரை விதவையாக இருக்க வேண்டுமா மறுமணம் செய்து கொள்ளக் கூடாதா என்கிறார்.. இதன் மூலம் அம்மாவின் ஆசை மகன்களுக்கு தெரிகிறது.. ஆனால் அம்மாவின் ஆசைக்கு அந்த வயதில் அவர்கள் ஓகே சொல்லவில்லை..

அம்மாவுக்கு 42 ஆன வயதில் மகன்களுக்கு அம்மாவின் தனிமை உணர்வுகள் உணர்ச்சிகள் புரிகிறது எனவே மறுமணம் செய்து கொள்ள ஓகே சொல்கின்றனர்..

அந்த கட்டத்தில் ஸ்வாசிகா மறுத்து விடுகிறார்.. அதன் பிறகு என்ன நடந்தது.? இப்போது மகன்களுக்கே திருமண வயது வந்து விட்டதால் அம்மா ஓகே சொல்ல மறுக்கிறாரா.? அல்லது மகன்களுக்கு பார்க்கும் வரன் பிரச்சனையாகுமா.? என்பதை உணர்ச்சி குவியலாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் சசி..

கேரக்டர்ஸ்…

ஸ்வாசிகா – பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் லப்பர் பந்து மூலம் ரசிகர்கள் மனதில் ஒட்டிக் கொண்டவர் ஸ்வாசிகா.. இந்த நூறு சாமி படத்தில் செல்வியாக தமிழர்களின் செல்ல அம்மாவாக மாறிவிட்டார்.. எந்த இடத்திலும் மிகைப்படுத்தாத நடிப்பை எதார்த்தமான உணர்வுகளை கொடுத்து செல்வி கேரக்டரை செதுக்கியிருக்கிறார்..

மூத்த மகனாக அஜய் அசத்தியிருக்கிறார்.. உனக்கு திருமணம் இல்லை என்றால் எனக்கும் திருமணம் கிடையாது என்று மகன் சொல்லும் போது பாசத்தில் பளிச்செடுகிறார்..

துருதுருவென சக்தி.. இரு மகன்களும் நன்றாக ஸ்கோர் செய்திருக்கின்றனர்..

ஆனால் தங்கள் லவ்வர் லைப் ஸ்டைல் என மாறிய இவர்கள் அம்மாவை பெரிதாக கண்டு கொள்வதில்லை போல.. அம்மாவின் உடை வீடும் அனைத்தும் ஏழ்மையிலே இருப்பதாகவே காட்சிப்படுத்தப்பட்டுள்ளது…

இவர்களுடன் நடிகர்கள் கருணாஸ், பாலாஜி சக்திவேல் வில்லத்தனம் கலந்த நடிப்பில் கலக்கியுள்ளனர்..

லிஜுமோல் கேரக்டர் வீணடிக்கப்பட்டுள்ளது ஆனால் இவர் கன்னியாஸ்திரிக்கும் சாதாரண பெண்மணிக்கு உள்ள வேறுபாட்டை சொல்லும் காட்சியில் உயர்ந்து நிற்கிறார்..

காவியா அனில், பகவதி பெருமாள், வினோதினி, பாடினி குமா,ர் ஜென்சன் திவாகர், தாமரைச்செல்வி ஆகியோர் நடித்துள்ளனர்… கிளைமாக்ஸ் இல் youtube நண்பர்கள் கொடுக்கும் என்ட்ரி வித்தியாசமான நம்பும் படியான அதிரடி காமெடி கலாட்டா..

டெக்னீசியன்ஸ்…

தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்… காட்சிகளை நேர்த்தியாக படம் பிடித்து நூறு சாமியை சிறப்பு தரிசனமாக கொடுத்துள்ளார்..

இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீ ராமின் பின்னணி இசை படத்திற்கு பலமாக உள்ளது… மாயக்கனவோ மற்றும் அம்மா அம்மா என்ற பாடல்கள் மனதை வருடுகிறது..

புருஷனை கொன்னு இருந்தா கூட 10 வருஷம் தான் ஜெயில்.. ஆனா அவரு இறந்து எனக்கு ஆயுசுக்குமான ஜெயில்” என்ற வசனத்தை சுவாஷிகா பேசும் போது கண் கலங்கும்..

43 வயதில் உனக்கு ஆசை அடங்கலையா என்ற சஸ்வாசிக்காவை பார்த்து அம்மா கேட்கும் போது.. 60 வயசில் உனக்கு அடங்காம நீ அப்பா கூட தானே இருக்கே.. என்று அவர் கேட்கும் போது தியேட்டரில் விசில் சத்தம் பறக்கிறது..

கணவனை இழந்த இளம் விதவைகள் அவர்கள் பெற்றோர்கள் நிச்சயம் காண வேண்டும்… அம்மாவை கடவுளாக பார்ப்பதை விட்டு ஒரு சக மனுசியாக உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தாலே அது பிள்ளைகளுக்கான கடமை..

2019 கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை இயக்கியிருக்கிறார்.. அதற்காக அங்கேயே படம் எடுத்திருக்கிறார்..

படம் முடிவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்புதான் விஜய் ஆண்டனி வருகிறார்..
நான் நாயகன் அல்ல.. கதைக்கு தேவைப்பட்ட கேரக்டர் என்பது போல வந்து நம் மனதை கொள்ளையடிக்கிறார் விஜய் ஆண்டனி.. அவருடைய வெள்ளந்தியான நடிப்பு வெகு சிறப்பு..

அவரும் மனைவியை இழந்து மகளுக்கு திருமணம் செய்து வைத்த ஒரு தந்தையாக வருகிறார்.. ஆக காதல் எப்போது வேண்டுமானாலும் மலரும் அது மனங்களை பொறுத்தே..

சமூகத்தின் சம்மதத்தை விட நம் மனங்களின் சம்மதமே சரியானது என்பதை சுவாசிக்கா – விஜய் ஆண்டனி கேரக்டர் மூலம் பிரதிபலிக்கிறார் இயக்குனர் சசி.

தர்பார் படத்தில் கூட தன் அப்பா ரஜினிக்கு மறுமணம் செய்து வைக்க ஆசைப்படுவார் மகள்.. இந்த நூறு சாமி படத்தில் அம்மாவுக்கு மறுமணம் செய்து வைக்க மகன்கள் ஆசைப்படுகின்றனர்..

அப்பாவுக்கு மறுமணம் என்பதை எளிதாக எடுத்துக் கொள்ளும் சமூகம் அம்மாவுக்கு மறுமணம் என்பதை ஏற்க மறுக்கிறது.. அந்த சமூக சனியன்களை வசனங்கள் மூலம் 100 தூளாக்கி இருக்கிறார் ‘நூறு சாமி’ இயக்குனர் சசி..

 

கிளைமாக்ஸ் காட்சியில் 2019 ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஒன்று சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் எடுக்கப்பட்டது என்பதையும் அதற்கு காரணமானவர்களையும் திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர் சசி..

 

Nooru Sami movie review

 

—–