ரஜினி கேங் விமர்சனம்… 2.5/5.. பவர்ஃபுல் ரஜினி பிராண்ட் இப்படியாச்சே..

ரஜினி கேங் விமர்சனம்… 2.5/5.. பவர்ஃபுல் ரஜினி பிராண்ட் இப்படியாச்சே..

ரஜினி கேங் விமர்சனம்… 2.5/5.. பவர்ஃபுல் ரஜினி பிராண்ட் இப்படியாச்சே..

 

ஸ்டோரி…

ரஜினி கிஷன் – த்வ்விவிகா இருவரும் காதலிக்கின்றனர்.. வீட்டில் எதிர்ப்பு உள்ளதால் ஓடிப்போய் திருமணம் செய்ய முயற்சிக்கின்றனர்.. அப்போது வழியில் ஒரு திருட்டு காரில் பயணிக்கும் முனீஸ் காந்தியின் காரில் இவர்கள் ஏறி கொள்கின்றனர்..

நாயகியின் முறை மாமன் கூல் சுரேஷ் இவர்களை வேறொரு ஜிப்பில் துரத்திக் கொண்டு வருகிறார்.. இதனிடையில் முனிஷ்காந்த் திருடிய கார் ஒரு அமைச்சருக்கு சொந்தமானது என்பதால் அவரும் காரை பிடிக்க காவல்துறைக்கு கட்டளையிடுகிறார்..

இதனிடையில் நாயகன் நாயகிக்கு கட்டும் தாலியால் வேறு ஒரு பேய் பிரச்சனை வருகிறது..

அதன் பிறகு என்ன நடந்தது.? அந்த பேய்க்கும் இவர்களுக்கு என்ன சம்பந்தம்.? காரை கண்டுபிடித்தார்களா.? கூல் சுரேஷ் என்ன செய்தார்.? நாயகன் ரஜினி என்ன செய்தார்.? என்பதெல்லாம் மீதிக்கதை..

 

கேரக்டர்ஸ்…

நாயகன் ரஜினி கிஷன் இந்த படத்தின் தயாரிப்பாளர்.. எனவே அவருக்கான பாட்டு ஃபைட் ரொமான்ஸ் காமெடி எல்லாமே வைத்திருக்கிறார்..

நாயகியாக த்விவிகா.. இடைவேளை வரை ரொமாண்டிக்காக இருந்த இவர் பிறகு பேயாக வந்து மிரட்ட முயற்சித்துள்ளார்..

நான் தான் செகண்ட் ஹீரோ என்ற அளவுக்கு கூல் சுரேஷ் காமெடி அதகளம் செய்திருக்கிறார்..

பேய் ஓட்டும் சாமியாராக மொட்ட ராஜேந்திரன்.. காமெடி என்ற பெயரில் கடுப்பேற்றி விட்டார்.. ஆனால் பல கெட்டப்புகளில் வந்து கலகலப்பு ஊட்டி இருக்கிறார்..

முனீஸ்காந்த் மற்றும் கல்கி ஆகியோரும் உண்டு.. ஆனால் சிரிப்பு வரவில்லை..

டெக்னீசியன்ஸ்…

இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட்டின் இசையில் பாடல்கள் & பின்னணி இசை ஓகே ரகம்..

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.சதீஷ் குமார்.. – கலகலப்பாக கலர்ஃபுல்லாக படமாக்கி இருக்கிறார்..

இயக்குநர் எம்.எஸ்.ரமேஷ் பாரதி.. பேய் காமெடி சொல்ல முயற்சித்து திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார்..

இடைவேளை வரை கலகலப்பாக சென்ற கார் சேஸிங் & கூல் சுரேஷ் காமெடி என பயணித்தது சிறப்பு.. ஆனால் இடைவேளைக்குப் பிறகு பேய் கதையாக மாறி நம்மை பயமுறுத்தி விட்டது..

ரஜினி என்ற பவர்ஃபுல் பிராண்ட் பயன்படுத்தி இருக்கும் படக்குழுவினர் ரஜினிக்கான ரெஃபரன்ஸ் சீன்ஸ் வைத்திருக்கலாம்…

Rajini Gang movie review