ரீவால்வர் ரீட்டா விமர்சனம்.. 3.25/5
ரீவால்வர் ரீட்டா விமர்சனம்.. 3.25/5
ஸ்டோரி…
மது போதையில் ஒரு பெண்ணை தேடி செல்லும் ரவுடி சூப்பர் சுப்புராயன் தவறுதலாக கீர்த்தி வீட்டிற்கு வந்துவிடுகிறார்.. அவர்கள் வெளியே போக சொல்ல அந்த கோபத்தில் துப்பாக்கி எடுத்து மிரட்டுகிறார்.. எனவே தற்காத்துக் கொள்ள இவரை அடிக்கும்போது சூப்பர் சுப்பராயன் இறந்து விடுகிறார்..
இதனை எடுத்து உடலை மறைக்க கீர்த்தி சுரேஷ் குடும்பம் போடும் திட்டம்தான் இந்த ரிவால்வர் ரீட்டா.
இதனிடையில் சூப்பர் சுப்புராயன் தலையைக் கொண்டு வந்தால் ₹5 கோடி தருவதாக ஆந்திரா ரவுடி சொல்ல.. தன் தந்தையின் உடலை தேடி அலைகிறார் சுனில்.. இதற்கிடையில் போலீஸ் ஜான்விஜய் டார்ச்சர் ஒரு பக்கம்.. இதனை எல்லாம் எப்படி கீர்த்தி & ராதிகா எப்படி சமாளித்தனர் என்பதுதான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
கீர்த்தி சுரேஷ், ராதிகா, சுனில், ஜான் விஜய்
ஹீரோயினாக இருந்தாலும் டார்க் காமெடியில் ஏற்கனவே ரகு தாத்தா படத்தில் கலக்கி இருந்தார் கீர்த்தி சுரேஷ்.. இதிலும் காமெடியில் அசத்தியிருக்கிறார்.. இவருக்கு போட்டியாக ராதிகாவும் களத்தில் இறங்கி இருக்கிறார்.. இருவரின் கெமிஸ்ட்ரி செம..
எமோஷன் காமெடி எதுவாக இருந்தாலும் ராதிகா பட்டைய கிளப்புவர்.. இதிலும் அப்பாவியாக அசத்தியிருக்கிறார்.
படம் முழுக்க சீரியஸ் முகத்துடன் வருகிறார் சுனில்.. இவரது காட்சி இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி இருக்கலாம்.. ஜான் விஜய் ஓவர் ஆக்டிங்..
டெக்னீசியன்ஸ்…
தயாரிப்பு : பேஷன் ஸ்டூடியோஸ், ரூட்
இயக்கம் : ஜே.கே.சந்துரு
இசை : ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு : தினேஷ்கிருஷ்ணன்

நம்மை தற்காத்துக் கொள்ள தெரியாமல் ஒரு கொலை செய்து விட்டால் அந்த உடலை பிரிட்ஜில் வைப்பது.. பின்னர் பெட்டியில் வைப்பது.. அதை கொண்டு போக ஒரு கார் ஏற்பாடு செய்வது.. இப்படியாக பல கதைகளை பல படங்களில் பார்த்திருக்கிறோம்.. எனவே இந்த படமும் அதேதான்.. ஆனால் கடைசி அரை மணி நேரம் காட்சியில் நிறைய சுவாரசியங்கள் மற்றும் ஆக்சன் கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் சந்துரு..
Revolver Rita movie review

