IPL Indian Penal Law விமர்சனம் 3.5/5

IPL Indian Penal Law விமர்சனம் 3.5/5

IPL Indian Penal Law விமர்சனம் 3.5/5

 

ஸ்டோரி…

கிஷோர் & அபிராமி இவர்கள் தம்பதி.. கிஷோரின் தங்கை குஷிதா.. இவரின் காதலன் டிடிஎஃப் வாசன்.. நாயகன் & நாயகி இருவரும் காதலிக்கின்றனர்.

ஒரு கட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் போஸ் வெங்கட் லஞ்சம் வாங்கிக் கொண்டு மாட்டிக் கொள்கிறார்.. இதிலிருந்து தப்பிக்க வீடியோ எடுத்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று அவனை அடித்துக்கொண்டு கொன்று விடுகிறார்.. இந்த வழக்கிலிருந்து தப்பிக்க எந்த தவறும் செய்யாத கிஷோரை இந்த வழக்கில் மாட்டி விடுகின்றார்..

சிறைக்குள் அடைக்கப்பட்ட தன் காதலியின் அண்ணனை விடுவிக்க போராடுகிறார் நாயகன் டிடிஎஃப் வாசன்..

இந்தப் பொய்யான குற்ற வழக்கிலிருந்து இருந்து கிஷோர் தப்பித்தாரா.? அவருக்கு டிடிஎஃப் வாசன் எப்படி உதவி செய்தார்.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்….

கிஷோர், டி டி எஃப் வாசன், அபிராமி, குஷிதா, நரேன், திலீபன், ஜான் விஜய், போஸ் வெங்கட், ஹரிஷ் பெராடி, சிங்கம் புலி

முதல் படம் என்றாலும் டிடிஎஃப் வாசன் தன்னுடைய நடிப்பில் கவர முயற்சித்துள்ளார்.. ஆக்ஷனிலும் முக்கியமாக பைக் ஓட்டும் காட்சியில் அசத்திருக்கிறார்..

குஷிதா குஷி மூட்டில் நம்மை கவர்கிறார்.. கிஷோர் – அபிராமியின் நடிப்பு ரசிக்க வைக்கிறது..

வழக்கம்போல ஜான்விஜய் நடிப்பில் மிரட்டி இருக்கிறார்.. ஆனால் சில இடங்களில் ஓவர் ஆக்டிங்கை தவிர்க்கலாம்.. அபிராமிக்கு எரிச்சலை உண்டு செய்வதற்காகவே நம்மையும் கடுப்பேற்றுகிறார்..

முதலமைச்சர் நரேன் & காவலர் திலீபன் ஆகியோரின் பாத்திரங்கள் சிறப்பு.. போஸ் வெங்கட், ஹரிஷ் பெராடி, சிங்கம் புலி ஆகிய வரும் நடிப்பில் கவனிக்க வைக்கின்றனர்..

டெக்னீசியன்ஸ்…

தயாரிப்பு: ஜி ஆர் மதன் கிருஷ்ணன்

இசை: அஸ்வின் விநாயகமூர்த்தி

ஒளிப்பதிவு: எஸ் பிச்சுமணி

இயக்கம்: கருணாநிதி

பாடல்களும் ஒளிப்பதிவும் சிறப்பாக அமைந்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம்..

இந்திய காவல் துறையில் பேசும் பொருளாக இருக்கும் லாக்கப் டெத்தை (சிறை மரணங்கள்) பற்றி இந்த படம் பேசியிருக்கிறது.. ஆனால் அதற்கான காட்சி இல்லை என்றாலும் அது தொடர்பான காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர்.

சாலைகளில் பெரும்பாலும் வாகனங்களை சோதனை போடுவது டிராபிக் போலீஸ் தான்.. ஆனால் இதில் சிவில் போலீஸ் சோதனை போடுவது ஏன்.?

 

IPL Indian Penal Law movie review