ராகு கேது விமர்சனம்.. ராகு கேதுவின் வரலாறு

ராகு கேது விமர்சனம்.. ராகு கேதுவின் வரலாறு

 

ராகு கேது விமர்சனம்.. ராகு கேதுவின் வரலாறு

 

ஸ்டோரி..

ராகு கேது வழிபாட்டு முறையை வரலாற்றுப் பாடமாக சொல்லி இருக்கிறது இந்த படம்.. ராகு கேது உருவானது எப்படி? அதன் பின்னணி என்பதை விளக்குகிறது..

நவ கிரகங்களில் 9 என்றாலும் முதலில் உருவானது.. 7 கிரகங்கள் அதன் பின்னர் உருவான இரண்டு கிரகங்கள் ராகு கேது.. இந்த கிரகங்களுக்கு எதிர்த் திசையில் சுற்றி வரும் சாயா கிரகங்கள் என்றழைக்கப்படும் ராகுவும், கேதுவும் எப்படி உருவாகின என்பதை டி .பாலசுந்தரம் நடித்து இயக்கி இருக்கிறார்… இவர் மேடை நடனங்களில் நடத்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது..

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது.. ஒரு பக்கம் இழப்புகள் அதிகம் ஏற்படவே இதற்கு தீர்வு தான் என்ன என்ற ஆலோசனையில் ஈடுபடுகின்றனர்.. அப்போது நாரதர் ஒரு ஆலோசனை தருகிறார்..

அதன்படி.. மலையை மத்தாகவும், பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடைந்தால் அமுதம் உருவாகும் என்கிறார்.. அந்த அமுதத்தை அருந்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரணம் கிடையாது.. அவர்கள் நீண்ட ஆயுளை பெறலாம் என்கிறார்.

ஆனாலும் இதில் மகாவிஷ்ணுவின் தந்திரமும் இருக்கிறது.. அதாவது இதை அசுரர்களை மட்டுமே அருந்த முயற்சிக்கிறார்.. ஆனாலும் இதை தெரிந்து கொண்ட அசுரர்களில் ஒருவரான இளவரசர் சுபர்பானு தேவர் வேடமெட்டு அதை அருந்தி விடுகிறார்.

இதை அறிந்து கொண்ட மகாவிஷ்ணு அவரை பழிவாங்க திட்டமிடுகிறார்.. அதன் பிறகு நடந்தது என்ன.? ராகு கேது எப்படி உருவானார்கள்.? மகாவிஷ்ணுவின் திட்டம் என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…

ஆன்மீகத்தை விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த படம் ஒரு அமிர்தம் தான்.. இப்போதெல்லாம் ஒவ்வொரு வசனத்தையும் உதவி இயக்குனர் சொல்லவே நடிகர்கள் பேசுகிறார்கள்.. ஆனால் இந்த படத்தில் முழுக்க முழுக்க நாடக கலைஞர் இருப்பதால் அவர்களே வசனங்களை அழகாக மனப்பாடம் செய்து பேசி இருப்பது படத்தின் சிறப்பம்சமாகும்.

நாம் 1960களில் பார்த்த திரைப்படங்களைப் போல வசனங்கள் வந்தாலும் இடையிடையே இன்றைய வசனங்களும் வருவது கொஞ்சம் நெருடல் தான்..

படத்தில் சமுத்திரக்கனி சிவனாகவும் துர்க்கை அம்மன் ஆக கஸ்தூரியும் நடித்துள்ளனர்.. ஆனால் சிவனுக்கு காக்கி சட்டை போட்டது போல கம்பீரமாக பேசுகிறார் சமுத்திரக்கனி..

தலை வேறு உடல் வேறு ஆக சாகா வரம் பெற்றவர் சுபர் பானு.. துர்கா தேவி தன் கழுத்தில் இருக்கும் பாம்பால் தலையும் உடலும் கொடுத்து ராகு கேதுவாக மாற்றுகிறார் என்பது தான் ஹைலைட்.. இதில் கூடுதல் மெனக்கட்டு கிராபிக்ஸ் அமைத்திருக்கலாம்..

கதை, வசனம், பாடல்கள் எழுதியுள்ளார் கலைமாமணி கே.பி.அறிவானந்தம்..

நாரதர் – ரவிக்குமார் நாரதராகவும், கிரிஷ் வெங்கட் இந்திரனாகவும் , கௌஷிகா கோபிகிருஷ்ணன் பார்வதியாகவும், சாதனா சங்கர் லட்சுமியாகவும், பாலசுந்தரம் – சுபர்பானு மற்றும் ராகு, அர்ச்சனா காந்தன் மோகினியாகவும், சுபர் பானுவின் ஜோடியாக சந்தியா ஶ்ரீயும் நடித்துள்ளனர்.

கதை, வசனம், பாடல்கள் எழுதியுள்ளார் கலைமாமணி கே.பி.அறிவானந்தம். இயக்குந்ர தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கியுள்ளார். தயாரிப்பாளர் சாந்தி பாலசுந்தரம் தமிழரசன் தியேட்டர் சார்பில் தயாரிக்க, எஸ்.ஆனந்த், வி.உமாதேவி இணை தயாரிப்பு செய்துள்ளனர்..

படத்தொகுப்பாளர் : பி. லெனின்
ஒளிப்பதிவாளர் : மோகன் பிரசாந்த்
இசையமைப்பாளர் (பாடல்கள்) : சதா சுதர்சனம்
பின்னணி இசை : பரணி தரன்
கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் : கே.பி.அறிவானந்தம்
இயக்கம் : டி.பாலசுந்தரம்
மக்கள் தொடர்பு : ஆர்.மணி மதன்

நாடக கலைஞர்களின் ஒப்பனை அப்படியே படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது.. ஓவர் மேக்கப் உடம்புக்கு ஆகாது என்பது போல எல்லாரும் முகத்திலும் ஓவர் பவுடர்..

அழகான ஆன்மீகக் கதையை இன்னும் சுவாரசியமாக எடுத்து இருக்கலாம்.. ஆனால் திறமையான கலைஞர்கள் இருந்தும் படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் பட்ஜெட் பற்றாக்குறை ஆகியவற்றால் படத்தை முழுமையாக ரசிக்க முடியவில்லை..

 

Ragu Kethu movie review