’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ விமர்சனம்

’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ விமர்சனம்

 

’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ விமர்சனம்

ஸ்டோரி…

இந்திய நாட்டின் இதிகாசங்களில் மகாபாரதம் ராமாயணம் இரண்டுக்கும் எப்போதும் குறையாத மதிப்பு இருக்கும்.. எத்தனை படங்கள் மகாபாரதம் & ராமாயணம் பற்றி வந்தாலும் அதை பார்க்க ரசிகர் கூட்டமும் எப்போதும் ஆர்வத்துடன் காத்திருக்கும்.. அந்த வரிசையில் இப்போது இந்த ராமாயணம் நவீன தொழில்நுட்பத்துடன் அனிமேஷன் வரிசையில் அனைவரையும் கவர வந்திருக்கிறது இந்த ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’.

கேரக்டர்ஸ் & டெக்னீசியன்ஸ்…

இது அனிமேஷன் படம் என்பதால் டப்பிங் குரல் கொடுத்த கலைஞர்களை நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.. ராமர் கதாபாத்திரத்திற்கு செந்தில் குமார், சீதாவுக்கு குரல் கொடுத்த டி.மகேஷ்வரி, ராவணனுக்கு குரல் கொடுத்த பிரவீன் குமார், லக்‌ஷ்மனனுக்கு குரல் கொடுத்த தியாகராஜன், ஹனுமானுக்கு குரல் கொடுத்த லோகேஷ் அனைவரும் அவரது பணியில் சிறப்பு..

ராமாயண கதையை வாய்ஸ் ஓவரில் விவரிக்கும் விவரிக்கும் ரவூரி ஹரிதா வெகு சிறப்பு..

2டி அனிமேஷன் போர்க் காட்சிகள்.. கும்பகர்ணனிடம் இருந்து தப்பிக்கும் வானரப் படை காட்சிகள், இந்திரஜித் மற்றும் லக்‌ஷ்மன் இடையே நடக்கும் வான் சண்டை உள்ளிட்ட கிராபிக்ஸ் காட்சிகள் சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் ரசிக்க செய்கிறது..

 

Raamayana movie review