குடும்பஸ்தன் விமர்சனம்.. 3.5/5.. ஜீரோ பேலன்ஸ் ஹீரோ டா
குடும்பஸ்தன் விமர்சனம்.. 3.5/5.. ஜீரோ பேலன்ஸ் ஹீரோ டா
இந்த படத்தின் தலைப்பை பார்த்தாலே நம்மில் பலருக்கும் புரிந்திருக்கும் ஒரு குடும்பஸ்தன் படும் அவஸ்தைகள்.. அவனின் வாழ்க்கையில் எப்படி எல்லாம் திண்டாடுகிறான் என்பதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி..
ஸ்டோரி…
தன் குடும்ப உறவுகளின் சம்மதத்தை மீறி தன் காதலியை கரம் பிடிக்கிறார் நாயகன் மணிகண்டன்.. ஒரு கட்டத்தில் வேலையும் பறிபோக தன் குடும்பத்தை பல பிரச்சினைகளுக்கு மத்தியில் எப்படி சமாளித்து குடும்பஸ்தன் ஆகிறான் என்பதுதான் இந்த படத்தின் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
MANIKANDAN – NAVEEN
SAANVE MEGGHANA – VENNILA
R.SUNDARRAJAN – PALANISAMY
KUDASSANAD KANAKAM – SUBBULAKSHMI
NIVETHITHA RAJAPPAN – ANITHA
GURU SOMASUNDARAM – RAJENDRAN
SHANVIKA SREE – ANITHA RAJENDRAN’S DAUGHTER
MUTHAMIZH – SIMSON
PRASANNA BALACHANDRAN – MANOKARAN
JENSON DHIVAKAR – AMEER
ANIRUDH – KUTTY THAMBI
BALAJI SHAKTHIVEL – MOHAN RAM
ABILASH – MANIKCHAND
TSR SRINIVASAN – REGISTERER
GAYATHRI – HOUSE OWNER
VARGESE – RAJENDRAN’S MD
காதலியிடம் ரொமான்ஸ்.. மாமாவிடம் கெத்து.. குடும்ப கௌரவம் என பன்முக திறமை காட்டி நவீன் கேரக்டரை நவீன குடும்பஸ்தனாக மாற்றி இருக்கிறார் மணிகண்டன்.. பாத்ரூமில் தனியாக பேசிக்கொள்ளும் அந்த சீன் சிரிப்பலை..
போட்டித் தேர்வுக்குப் படிக்கும் சாந்வி மேக்கஹனா நடிப்பிலும் நாயகனுடன் போட்டி போட்டு நடித்திருக்கிறார்..
மனைவி மற்றும் மச்சானை மட்டம் தட்டும் கேரக்டரில் வெளுத்து கட்டி இருக்கிறார் மாமா குரு சோமசுந்தரம்.. இவரது மனைவியாக நடித்த நிவேதா ராஜப்பன், அப்பாவாக ஆர்.சுந்தராஜன் மற்றும் பிரசன்னா பாலச்சந்திரன், ஜென்சன் திவாகர் ஆகியோரும் நடிப்பில் அசத்தல்..
டெக்னீசியன்ஸ்…
Direction
RAJESHWAR KALISAMY
இயக்கம்
ராஜேஷ்வர் காளிசாமி
Director of Photography
Sujith N Subramaniam
ஒளிப்பதிவு இயக்குனர்
சுஜித் N சுப்ரமணியம்
Editor
Kannan Balu
படத்தொகுப்பு
கண்ணன் பாலு
Music Composer
Vaisagh
இசையமைப்பாளர்
வைசாக்
வைசாக் என்பவர் இசையமைக்க சுஜித் சுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. பெரும்பாலும் பல காட்சிகள் வீட்டை சுற்றியே நகர்ந்தாலும் அதையும் தன் கேமரா கண்களில் அழகாக படம் பிடித்திருக்கிறார்..
வைசாக் இசையில் ஷான் ரோல்டன் பாடிய ‘மானம் பறக்குது..’ பாட்டு கவனம் பெறுகிறது.. பின்னணி இசையும் ரசிக்கும் ரகம்..
பிரசன்னா பாலச்சந்திரனின் வசனங்கள் பல இடங்களில் மனதை தொடும் பதிவாக அமைந்திருக்கிறது.. கலை இயக்குனர்
சுரேஷ் கல்லேரியின் கலை பணி ஒவ்வொரு காட்சியிலும் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது..
ராஜேஷ்வர் காளிசாமி என்பவர் இயக்கியிருக்கிறார் ஒரு குடும்பஸ்தனின் சந்தோஷத்தையும் சங்கடத்தையும் அழகாக எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார்..
Kudumbasthan movie review
—–

