பனை விமர்சனம்.. பஞ்சத்தைப் போக்கும் பனை.. அரசு வரி விலக்கு அளிக்கலாம்.!
பனை விமர்சனம்.. பஞ்சத்தைப் போக்கும் பனை.. அரசு வரி விலக்கு அளிக்கலாம்.!
ஸ்டோரி…
பனை மர தொழிலை நம்பி உடன்குடி என்ற கிராமம் வளர்ந்து வருகிறது.. ஆனால் அங்குள்ள மக்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கி தன் அதிகாரம் திமிரால் அனைவரையும் அடிமையாக்கி வதைக்கிறார் வில்லன் ராஜேந்திரன்..
(ஆனால் இவரது மனைவி அனுபமா அவருக்கு கட்டுப்படாமல் பேசாமல் 15 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்.)
இதில் நாயகன் ஹரிஷ் பிரபாகரனும் அவரது பாட்டி வடிவுக்கரசியும் விதிவிலக்கு.. ஒரு கட்டத்தில் தன்னுடைய அதிகார வர்க்கத்திற்குள் கட்டுப்படாத வடிவுக்கரசியை பழிவாங்குகிறார் ராஜேந்திரன்.
இதனால் நாயகன் எடுக்கும் முடிவு தான் இந்த பனை மரத்தின் கிளைமாக்ஸ்..

கேரக்டர்ஸ்…
ஹரிஷ் பிரபாகரன் நடிக்க நாயகியாக மேக்னா எலன்.
ஹரிஷ் பிரபாகரன் சாந்தமான கேரக்டரில் ஜொலிக்கிறார்.. ஆக்சன் காட்சிகளில் இன்னும் ஆக்ரோஷம் தேவை..
நாயகி மேக்னா படத்தின் மிகப்பெரிய பிளஸ் இவரது கண்கள் கவிதை பேசும்.. பாப்பு என்ற இவரது கேரக்டர் பார்ப்பவரை மயங்க வைக்கும்.. இன்றைய பெண்கள் மறந்து போன பாவாடை சட்டையில் நம்மை கிறங்கடிக்கிறார்.. மேக்னாவின் ஒட்டிய புருவங்களை கண்டால் நம் ரசனையும் இவருடன் ஒட்டிக்கொள்ளும்..
அனுபவமிக்க நடிகை அனுபமா கேரக்டர் வீணடிக்கப்பட்டது என்று நினைத்தால் கிளைமாக்ஸ் எதிர்பாராத முடிவு கொடுத்து பனை (பட) மரத்தை தாங்கி நிற்கிறார்..
இவர்களுடன் வடிவுக்கரசி, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, டி.எஸ்.ஆர், லாலா கடை ரிஷா, ஜேக்கப், எம்.ராஜேந்திரன் & பலர்.. இந்தப் பனை படத்திற்கு ஆணிவேராக நிற்கின்றனர்
டெக்னீசியன்ஸ்…
மீரா லால் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதியிருக்கிறார்.
ஒத்த பனை மரமாய் ஒத்தையில நிக்குறேன்… (ஒரு வார்த்தை கேட்க ஒரு வருஷம்..) பாடல் போல அழகாக படமாக்கப்பட்டுள்ளது..
10 வயசு ரவிக்கை பத்தலை.. என் பேரு ஜீஞ்சினக்கா… இது தேவையற்ற பாடலாக இருந்தாலும் பாடல் வரிகள் இளைஞர்களை சூடேற்றம்..
மேலும் வைரமுத்து வரிகளில் ”பனைமரம் பனைமரம் பணம் காய்க்கும் பனைமரம் பசி தீர்க்கும் மரமய்யா பனைமரம்…’ உள்ளிட்ட பாடலும் முத்தாக அமைந்துள்ளது..
சிவக்குமார் ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய, தினா நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். மக்கள் தொடர்பாளராக வெங்கட் பணியாற்ற இணைத் தயாரிப்பை ஜெ.பிரபகரன் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.ராஜேந்திரன் தயாரித்திருக்கிறார். ஆதி பி.ஆறுமுகம் இயக்கியிருக்கிறார்.
சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு விருந்தளிக்கிறது..

ராஜா அண்ணாச்சி என்ற கேரக்டரில் தயாரிப்பாளர் வில்லன் மாஸ்.. சொல்லப்போனால் இவருக்கு பெரிய வசனங்கள் கிடையாது.. ஆனால் கண் பார்வையால் மிரட்டி இருக்கிறார்.. இவருக்கு ஒரு பெரிய வில்லன் கேரக்டரை தமிழ் சினிமா கொடுத்து வரவேற்கலாம்..
பனை மரத்தின் பலன்களை எளிய மக்களும் சிட்டி மக்களும் உணர்ந்து கொள்ளும் வகையில் அழகாக காட்சிப்படுத்தி இருப்பது சிறப்பு.. அதில் வடிவுக்கரசி கேரக்டர் வலுவாக அமைந்திருக்கிறது.. பனைச் சிறப்புகளை சொன்ன உடன்குடி கிராமமும் கூடுதல் அழகு..
பனை மரத்தால் அந்த விவசாய வாழ்க்கை மட்டுமல்ல தமிழகமும் செழிக்கும் என்ற அழகான சமூக கருத்தை இந்த படம் வலியுறுத்துகிறது.. எனவே இந்த படத்திற்கு தமிழக அரசு வரிவிலக்கு அளிக்கலாம்.. மானியம் கொடுத்து உதவலாம்..
செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி ‘பனை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது..
Panai movie review

