சரீரம் விமர்சனம்… காதலுக்காக சரீரத்தை மாற்றிய காதலர்கள்

சரீரம் விமர்சனம்… காதலுக்காக சரீரத்தை மாற்றிய காதலர்கள்

சரீரம் விமர்சனம்… காதலுக்காக சரீரத்தை மாற்றிய காதலர்கள்

 

தர்ஷன் & ஷார்மி இருவரும் காதலிக்கின்றனர்.. இவர்களுக்கு ஷார்மியின் தந்தையும் தாய்மாமனும் இந்த காதலை கடுமையாக எதிர்க்கின்றனர்..

இதனை எடுத்து தர்ஷனை கொல்ல முயற்சிக்கின்றனர்..ஒருமுறை அல்ல இருமுறை அல்ல ஒவ்வொரு முறையும் கொல்ல முயற்சிக்கின்றனர்.. ஷார்மியும் தற்கொலைக்கு முயன்று அதிலிருந்து தப்பிக்கிறார்.

இப்படியாக இவர்கள் பயந்து பயந்து காதலுக்காக போராடுகின்றனர.. இனி தப்பிக்கவே முடியாது என்ற சூழ்நிலை உருவாகும் போது ஒரு திருநங்கையிடம் தஞ்சம் அடைகின்றனர்.. அப்போது அவர்களின் வாழ்க்கை முறையை பார்க்கும் இவர்கள் அவர்களைப் போல நாமும் திருநங்கை திருநம்பியாக மாறிவிடலாம்..

அப்படி என்றால் தங்கள் மாமன் தங்களை துரத்த மாட்டார்.. நம்மை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது என்று நம்புகின்றனர்.. அதன் பிறகு என்ன நடந்தது.? அவர்கள் நினைத்தது போல சரீர சிகிச்சை எளிதாக முடிந்ததா.? தங்கள் சரீரத்தை மாற்றிக் கொண்டார்களா என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

தர்ஷன், சார்மி இருவரும் பாலின மாற்ற வாழ்க்கையை ஏற்கும் சவாலான கேரக்ட்டர்களை ஏற்றி இருப்பது பாராட்டுக்குரியது.. பெரும்பாலும் இது போன்ற கதைகளில் நடிக்க எந்த நடிகர்களும் உடனே ஓகே சொல்ல மாட்டார்கள்..

அதுபோல இவர்கள் ஒப்பனைகளும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.. பெண்ணுக்கு மீசையை ஒட்ட வைத்திடலாம் அதை விடுத்து கண் மை வரைந்து இருப்பதெல்லாம் ரொம்பவே ஓவர்.

துணை நடிகர்கள் – ஜே. மனோஜ், பாய்ஸ் ராஜன், ஷகீலா, புதுப்பேட்டை சுரேஷ் ஆகியோர் தங்களால் முயன்ற பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

இதில் பாய்ஸ் ராஜின் நீதிபதியாக நடித்திருக்கிறார்.. ஆனால் அவர் ஏதோ சராசரி மனிதனைப் போல நீதிமன்றத்தில் பேசும் காட்சிகள் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை..

இசை : பாரதிராஜா

ஒளிப்பதிவு: டோர்னலா பாஸ்கர், பரணி குமார்

எடிட்டிங்: லக்ஷ்மன்

ஸ்டண்ட்: தவசி ராஜ்

ஒளிப்பதிவு இசை சொல்லும் படியாக இல்லை..

ஜிவி பெருமாள் என்பவர் இயக்கியிருக்கிறார்..

காதலுக்காக உயிரை விட்டவர்கள் பார்த்திருக்கிறோம்.. நாக்கை அறுத்துக் கொண்டவர்களை பார்த்து இருக்கிறோம்.. இதயத்தை கொடுத்தவர்களை பார்த்து இருக்கிறோம்.. இப்படி பல காவியக் காதல்களை தமிழ் சினிமா நமக்கு சொல்லி இருக்கிறது..

இதில் சரீரத்தை மாற்றி காதல் என்று வித்தியாசமாக புதிதாக சொல்லப்பட்டாலும் திரைக்கதை மற்றும் தரமற்ற மேக்கிங் நம்மை சோதிக்கிறது..

 

Sareeram movie review