முஸ்தபா முஸ்தபா விமர்சனம்…

முஸ்தபா முஸ்தபா விமர்சனம்…

முஸ்தபா முஸ்தபா விமர்சனம்…

 

 

கதை…

சதீஷ் மற்றும் சுரேஷ் ரவி இருவரும் நெருங்கிய நண்பர்கள்.. சதீஷ் & மோனிகா காதலர்கள்..

இவர்களின் திருமணத்திற்கு சில தினங்கள் இருக்கும் நிலையில் திடீரென இணையத்தில் சதீஷ் நடித்த A பிட்டு படம் வெளியாகிறது..

இந்தப் படம் வருங்கால மனைவி மற்றும் குடும்பத்தினரை சென்றடைந்தால் தன் வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதால் அந்த வீடியோவை டெலிட் செய்ய நினைக்கிறார்..

இதற்கு தன் நண்பர்களின் உதவியை நாடுகிறார்.. அதன் பிறகு நடப்பது எல்லாம் காமெடி கலாட்டா..


நடிகர்கள்…

நாயகன் சதீஷ்.. சில இடங்களில் கவுண்டர் காமெடி கொடுத்து கலக்கியிருக்கிறார் ஆனால் ஹீரோயிசம் நடிப்பு போதவில்லை.. மெச்சூரிட்டி தேவையோ..?

மோனிகா முறை மாமனாக வரும் நடிகர் புகழ் கடுப்பேத்துகிறார்..

மோனிகா அழகிலும் நடிப்பிலும் கவருகிறார்.. இரண்டாவது நாயகனாக சுரேஷ் ரவி.. நண்பனுக்கு உதவும் கேரக்டரில் வருகிறார்.. சில அழகான பெண்களிடம் நண்பனின் பிட்டு கதை சொல்லி படத்தை நகர்த்தி இருக்கிறார்..

ஐஸ்வர்யா தாராள கவர்ச்சி காட்டியிருக்கிறார்.. வடநாட்டு இந்தியராக வரும் பாவல் நவநீதன் கேரக்டர் எடுபடவில்லை..

சாம்ஸ், லிவிங்ஸ்டன், உமா, புகழ், சூப்பர் குட் சுப்ரமணி உள்ளிட்டோரும் உண்டு..

தொழில்நுட்ப கலைஞர்கள்…

ஒளிப்பதிவாளர் கே.எஸ்.விஷ்ணு ஸ்ரீ.. கலர்ஃபுல்லாக்கி இருக்கிறார்..

இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட்டின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்..

படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ்.. ஓரிரு பாடல்களை கட்டிங் போட்டு இருக்கலாம்..

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பாக சக்தி வழங்க இந்த படத்தை வெளியிடுகிறார்..

இயக்குனர் – பிரவீன் சரவணன்.. நண்பனுக்கு நண்பன் உதவியை வைத்து முஸ்தபா முஸ்தபா என்ற நண்பர்கள் பாடலை வைத்திருக்கிறார்..

ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை என்ற பழமொழிக்கு ஏற்ப நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர்..

Mustafa Mustafa movie review