வடம் விமர்சனம்.. கிராமத்து மண்புழுதி பறக்க சீறிய காளை
வடம் விமர்சனம்.. கிராமத்து மண்புழுதி பறக்க சீறிய காளை
ஸ்டோரி…
வழக்கமான கிராமத்து மண் சார்ந்த ஜல்லிக்கட்டு கதை.. பாண்டி முனி என்ற காளை.. இந்த மாடு யாருக்கு சொந்தம்.? அதனை தொடர்ந்து விமலுக்கும் நட்டி நடராஜுக்கும் நடக்கும் மோதல் தான் இந்த படத்தின் கதை..
அதன் பின் நடக்கும் சம்பவங்களே கதை..

கேரக்டர்ஸ்…
விமல், நட்டி நடராஜ், சனக்ஷா ஸ்ரீ, முனிஷ்காந்த், நரேன், இந்துமதி, பால சரவணன், மது சூதனன், தீபா சங்கர்..
ஒரு சில ஹீரோக்களுக்கு மட்டும் எப்போதும் பக்காவாக செட்டாகும் கிராமத்து கதை.. இதில் விமல் விதிவிலக்கல்ல.. அவருக்கு ஏற்ற கதையை தேர்ந்தெடுத்து நன்றாக ஸ்கோர் செய்திருக்கிறார்.. மாடு மீது காட்டும் பாசமாகட்டும்.. எதிரி மீது காட்டும் ஆவேசமாகட்டும் என விமல் விளாசி இருக்கிறார்..
நெளிந்த தேகம்.. நல்ல உயரம் என கிராமத்து மனிதராகவே நட்டி தன் கேரக்டரில் நிமிர்ந்து நிற்கிறார்..
நாயகி சனாஸ்ரீ கதைக்கும் கேரக்டருக்கும் பக்காவாக பொருந்தி போகிறார்..
பால சரவணன் காமெடி ரசிக்க வைக்கிறது.. ட்ரெய்லரில் காட்டப்படாத முனீஸ்காந்த் கேரக்டர் இதில் நல்ல பெயரை அவருக்கு பெற்றுத்தரும்.. மதுசூதனன் மற்றும் தீபா உள்ளிட்டோரும் உண்டு..

டெக்னீசியன்ஸ்…
இசை: டி இமான்
ஒளிப்பதிவு : பிரசன்னா எஸ் குமார்
கிராமத்து பின்னணி இசையில் பாடல்கள் செம.. பாண்டி முனி பாடல் இனி பல கிராமத்து திருவிழாக்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பட்டைய கிளப்பும்.. ஜல்லிக்கட்டு காட்சிகளில் இமானின் இசை இடி முழக்கம்..

படத்தின் ஒளிப்பதிவு நேர்த்தி.. கிராமத்து சிவப்பு மண் புழுதி பறக்க.. சிறப்பு..
இயக்கம்: கேந்திரன் வி
தயாரிப்பு: ராஜசேகர் ஆர்
கேந்திரன் இயக்கி இருக்கிறார்.. வழக்கமான தமிழக மக்களின் வாழ்வியல் சார்ந்த கிராமத்து கதையை படமாக்கி இருக்கிறார்.. அதிலும் மாடுகளின் பெருமையை போற்றி மாடுகளுக்கும் தமிழர்களுக்கும் உள்ள வீரத்தையும் பறைசாற்றி இந்த வடம் படத்தை வளமாக்கி இருக்கிறார்..
Vadam movie review

