அனோமி விமர்சனம்.. அசத்தல் திரில்லர்

அனோமி விமர்சனம்.. அசத்தல் திரில்லர்

அனோமி விமர்சனம்.. அசத்தல் திரில்லர்

 

ஸ்டோரி…

பாவனா இவரது தம்பி ஷெபின் பென்சன்.. பெற்றோர் இல்லாத காரணத்தினால் தம்பியை பாசமாக வளர்த்து வருகிறார் பாவனா.. ஒரு கட்டத்தில் மூன்று கொலைகள் நடக்கிறது.. பாவனாவின் தம்பியும் கொல்லப்படுகிறார்.. அதை போலீஸ் விசாரணையில் ரகுமான் தரப்பில் தற்கொலை என சொல்லப்படுகிறது..

மூன்று கொலைகளுக்கும் தொடர்பு இருப்பதால் தற்கொலை அல்ல அது யாரோ ஒருவரின் திட்டமிட்ட சதி என்பதை அறியும் பாவனா அது பற்றிய விசாரணையில் இறங்குகிறார்.. அதன் பின்னர் நடப்பது என்ன.? என்பதுதான் அதிர்ச்சியான சுவாரசியமான கிளைமாக்ஸ்..

கேரக்டர்ஸ்…

சீரியஸான நடிப்பில் சிறப்பான நடிப்பில் பளிச்சிடுகிறார் பாவனா.. இவரது கேரக்டர் எவரும் எதிர்பாராத வகையில் கிளைமாக்ஸ்சில் அதிரடி..

இடைவேளைக்கு முன்பு வரை வழக்கமான போலீசாக வரும் ரகுமான் இடைவேளைக்குப் பிறகு விசாரணையில் காட்டும் ஆர்வத்தின் மூலம் தன் கேரக்டரை ஜொலிக்க வைக்கிறார்..

பாவனாவின் தம்பியாக ஷெபின் பென்சன், நண்பனாக அர்ஜுன் லால், பினு பப்பு, விஷ்ணு அகஸ்தியா & பலரின் கேரக்டர்கள் படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்துள்ளது..

டெக்னீசியன்ஸ்…

ஹாலிவுட் படங்களை பார்ப்பது போன்ற ஒரு அழகான பிரேம் பை ஃப்ரேம் என முழுவதுமாக கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுஜித்சாரங்..

ஹர்ஷவர்தன் ராமேஸ்வரின் இசை இரைச்சலில்லாமல் இருப்பது சிறப்பு..

இயக்குநர் – ரியாஸ் மாரத்.. கொலை தற்கொலை இரண்டும் மாறுபட்டது.. ஆனால் தற்கொலை மன நிலையில் இருக்கும் ஒருவர் கொலை செய்யப்படுவதை வைத்து காட்சிகளை நகர்த்தி இருப்பது சிறப்பு..

கொலை சமயத்தில் மனிதனுக்கு ஏற்படும் உணர்வுகள்.. மரணிக்கும் தருவாயில் அவரது எண்ணங்களை காட்சியாக காட்டியிருப்பது இயக்குனரின் வித்தியாசமான சிந்தனை..

அனோமி.. அசத்தல் திரில்லர்..

 

Anomie movie review