துடக்கம்… மகளின் சினிமா பயணத்தை தொடங்கி வைத்த  மோகன்லால்

துடக்கம்… மகளின் சினிமா பயணத்தை தொடங்கி வைத்த  மோகன்லால்

 

துடக்கம்… மகளின் சினிமா பயணத்தை தொடங்கி வைத்த  மோகன்லால்

 

 

மலையாள சினிமாவில் கடந்த 40+ ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழ்பவர் மோகன்லால்..

இவர் நேரடியாக பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.. பிரபுவுடன் சிறைச்சாலை, கமலுடன் உன்னைப் போல் ஒருவன், ரஜினியுடன் ஜெயிலர், விஜய்யுடன் ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்..

மோகன்லாலுக்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் உண்டு..

இவரின் மகன் பிரணவ் இவரும் மலையாள படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.. இந்த நிலையில் தற்போது மோகன்லாலின் மகளும் சினிமாவில் என்ட்ரி கொடுத்திருக்கிறார்..

அவரின் மகள் விஸ்மயாவும் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.

மோகன்லாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.. எனவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2018 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப், விஸ்மயா அறிமுகம் ஆகும் முதல் படத்தை இயக்குகிறார்.. மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 2018 படத்தை இயக்கியவர் இவர்..

இந்தப் படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 7ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

 

Mohanlal daughter Vishmaya entry in Malayalam cinema