அரசியல் கீதை எழுதிய முதல்வர் விஜய்..; இயக்குநர் பாலா வாழ்த்து மழை
அரசியல் கீதை எழுதிய முதல்வர் விஜய்..; இயக்குநர் பாலா வாழ்த்து மழை
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களைப் பெற்று முதல் கட்சியாக வென்று ஆட்சி அமைத்துள்ளார் விஜய்..
அவரது முதல் தேர்தலிலேயே மகத்தான வெற்றி பெற்று வென்றதை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்..
மேலும் இந்திய அரசியல் வரலாற்றில் இது பெரும் வெற்றியாக பார்க்கப்படுகிறது..
தமிழ் திரைத்துறையிலும் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
முதலமைச்சர் ஆன பிறகு அடுத்த நாளே விஜய் அவர்கள் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி, நாம் தமிழர் கட்சி சீமான், பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்டவரை சந்தித்து ஆசி பெற்றார்..
இந்த அரசியல் நாகரீகம் விஜய்யின் பெருந்தன்மையை காட்டுவதாக பல்வேறு தரப்பிலும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிரபல இயக்குனர் பாலா விஜியின் வெற்றி குறித்தும் விஜயன் இந்த அரசியல் சந்திப்பு குறித்தும் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்..
உன் எதிரில் நிற்பவர்கள் சகோதரர்களே என்றாலும் போரிட்டு வென்றுவிடு.. – பகவத் கீதை
உன் வெற்றிக்குப் பிறகும் வென்றெடுத்தவர்களை சகோதரர்களாகவே பார்த்து விடு.. – அரசியல் கீதை
என்று தெரிவித்து விஜய்க்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் இயக்குனர் பாலா..

Director Bala wishes Tamilnadu Chief Minister Vijay

