மெல்லிசை விமர்சனம்.. மனைவியா.? மகளா.? என்ன செய்தார் நாயகன்.!?
மெல்லிசை விமர்சனம்.. மனைவியா.? மகளா.? என்ன செய்தார் நாயகன்.!?
கதை…
நல்ல பாட தெரிந்த திறமையான பி டி மாஸ்டர் கிஷோர்.. இவர் பணிபுரியும் அதே பள்ளியில் இவரது மனைவி சுபத்ராவும் பணிபுரிகிறார்.. இவரின் திறமை அறிந்த மகள் யாழினி.. அப்பா நீங்கள் டிவி ரியாலிட்டி ஷோகளில் பாட வேண்டும் என அன்பு வேண்டுகோள் வைக்கிறார்.
அதன்படி இவரும் கலந்து கொள்ள புகழ் பெறுகிறார்.. ஆனால் அடிக்கடி நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதால் ஒழுங்காக பிடி மாஸ்டர் வேலையை கவனிக்க முடியவில்லை.. இதனால் இவருக்கும் பிரின்சிபாலுக்கும் பல கட்ட பிரச்சனைகள் வருகிறது..
ஒரு கட்டத்தில் மனைவியும் அந்த வருமானத்தை விட மாஸ்டர் வருமானமே முக்கியம் என்கிறார்..
இந்த சூழ்நிலையில் கிஷோர் என்ன செய்தார்.? பிடி மாஸ்டராக பணி புரிந்தாரா.? மகளின் ஆசையை நிறைவேற்றினாரா.? மனைவியின் ஆசையை நிறைவேற்றினாரா.? என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
கிஷோர், சுபத்ரா, ஜார்ஜ் மரியான், தான்யா, ஜஸ்வந்த் மணிகண்டன், தனன்யா
மகள் யாழினி… மகன் தீபக்.. இருவரும் அவர்கள் பார்வையில் இருந்து இந்த கதையை சொல்வதாக படம் பயணிக்கிறது… ஒரு தந்தையானவர் தன் பாசத்தை மகன் மீது ஆகட்டும்.. மகள் மீது ஆகட்டும் எப்படி கொடுக்கிறார் எப்படி வாழ்கிறார் என்பதை உணர்வுப்பூர்வமாக கொடுத்திருக்கின்றனர் கிஷோர் & சுபத்ரா..
சிறுமி யாழினியாக நடித்தவரே… வளர்ந்து குமரியாகவும் நடித்திருக்கிறார்.. இரண்டிலும் அழகான மெச்சூரிட்டனின் நடிப்பை கொடுத்து ரசிகர்களின் செல்ல மகளாகவே மாறிவிட்டார்..
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவு : தேவராஜ் புகழேந்தி
இசை : சங்கர் ரங்கராஜன்
நீதான் மெல்லிசையே…
கண்ணம்மா… செல்லம்மா…
School Culturas song… Nice
மெல்லிசையாய் பிறந்து இலையாய் உதிர்ந்து…
மெல்லிசை என்ற தலைப்பு வைத்தால் மென்மையான உணர்வுகளை கொண்ட பாடலை கொடுக்க வேண்டாமா? அதற்கு ஏற்ப அனைத்து பாடல்களையும் மெல்லிசையாகவே கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் சங்கர் ரங்கராஜன்..
தயாரிப்பு & இயக்கம் : திரவ்
எவ்வளவுதான் திறமைகள் இருந்தாலும் தன் குடும்ப சூழ்நிலை.. பொருளாதாரம் ஆகியவற்றால் எத்தனை திறமைகள் திரைக்கு தெரியாமல் திணறி கொண்டிருக்கிறது என்பதை இயக்குனர் திரவ் இந்தப் படத்தின் மூலம் திரை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார்..
Mellisai movie review

