மதறாஸ் மாஃபியா கம்பெனி விமர்சனம்.. காமெடி மாஃபியா கம்பெனி

மதறாஸ் மாஃபியா கம்பெனி விமர்சனம்.. காமெடி மாஃபியா கம்பெனி

 

மதறாஸ் மாஃபியா கம்பெனி விமர்சனம்.. காமெடி மாஃபியா கம்பெனி

 

ஸ்டோரி…

மதராஸ் மாஃபியா கம்பெனி என்ற நிறுவனத்தை 1999 முதல் நடத்தி வருகிறார் ஆனந்தராஜ்.. வேலைக்கு வரும் அடியாள்களை கூட குற்றங்கள் செய்வதற்கு தகுதியானவரா என்று இன்டர்வியூ எடுத்து தான் வேலைக்கு அமர்த்துகிறார்

பல குற்ற செயல்கள் செய்தாலும் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் ஒரு வழக்கு கூட போட முடியாமல் கைது செய்ய முடியாமல் தவிக்கிறது காவல்துறை இந்த நிலையில் இந்த வழக்கு பொறுப்பை ஏற்கிறார் நாயகி

அவரால் ஆனந்தராஜ் மீது வழக்கு போட முடிந்ததா.? காவல்துறை கைது செய்ததா.? என்பதுதான் படத்தின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

ஆனந்தராஜ், சம்யுக்தா, தீபா சங்கர், முனிஸ்காந்த், லயா மற்றும் பலர்..

தன் சினிமா பயணத்தை ஆனந்தராஜ் ஆரம்பித்த போது வில்லனாக நடித்து பின்னர் சிறு சிறு வேடங்களில் நடித்து நாயகனாக உயர்ந்தார்.. ஆனால் மீண்டும் வில்லன் காமெடி என தன்னுடைய பயணத்தை மாற்றிக் கொண்டார்..

ஆனால் இந்த படத்தில் மீண்டும் நாயகனாக உருவெடுத்து படம் முழுக்க தன்னுடைய நடிப்பால் மதராஸ் மாஃபியா கம்பெனிக்கு மகுடம் சூட்டி இருக்கிறார்..

அலட்டிக் கொள்ளாத நடிப்பு.. வசனங்கள் உடல் மொழியால்.. நானே வில்லன் நானே ஹீரோ என ஆனந்தராஜ் அசத்தியிருக்கிறார்..

மாஃபியா கம்பெனியில் மீண்டும் இணைய முனீஸ்காந்த் எடுக்கும் முயற்சிகள் ஒவ்வொன்றும் சிரிப்பு ரகம்..

ஹைடெக் முறையில் ரவுடி தொழில் செய்து இன்டர்வியூ எடுக்கும் விதம் சிரிப்பு ரகம்..

மனைவி தீபா, துணைவி லயா.. வாழும் வாழ்க்கை முறை ரசிக்க வைக்கிறது.. இவர்களின் மகள் மகன் கேரக்டர்களும் சிறப்பு..

போலீஸ் அதிகாரி சம்யுக்தா.. கம்பீரமான நடிப்பில் கலக்கல்.. போலீஸ் உடைக்கு பக்கவாக பொருந்தி போகிறார்.. ஆனால் ஒரு குற்றவாளியை கைது செய்ய இவரும் போலி ஆதாரங்களை சேர்ப்பது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை..

டெக்னீசியன்ஸ்…

ஒளிப்பதிவு : அசோக்ராஜ்.. அசத்தல்..

இசை : ஸ்ரீகாந்த் தேவா –

பின்னணி இசை செம… தெலுங்கு குத்து பாட்டு கவர்ச்சி ஆட்டம்..

தயாரிப்பு : அண்ணா புரடக்ஷன்ஸ்
இயக்கம் : ஏ.எஸ்.முகுந்தன்

ரவுடி கும்பல் கூட்டம், ஆனந்த்ராஜ் குடும்ப பிரச்னைகள், வில்லன்களுடன் சண்டை ஆகியவை ரசிக்கும் ரகம்..

ஆனால் காமெடியும் கொஞ்சம் சண்டையும் கலந்த இருக்கிறது மதறாஸ் மாஃபியா கம்பெனி..

 

Madras Maafia Company movie review

—-