கமல் & ரஜினி இணையும் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி..; அடுத்த இயக்குனர் இவரா.?

கமல் & ரஜினி இணையும் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி..; அடுத்த இயக்குனர் இவரா.?

கமல் & ரஜினி இணையும் படத்திலிருந்து விலகிய சுந்தர்.சி..; அடுத்த இயக்குனர் இவரா.?

 

 

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த படத்தை இயக்குவதில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர். சி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்…

“தனிப்பட்ட காரணங்களுக்காக ரஜினியின் Thalaivar 173வது படத்தில் இருந்து விலகுகிறேன். பெருமைமிகு இப்படைப்பில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன்” என கூறியுள்ளார்..

 

திரைத்துறையில் நுழையும் ஒவ்வொரு இயக்குனருக்கும்.. அதிகபட்ச ஆசையாக ரஜினி படத்தை இயக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் கனவாக இருக்கும்.. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பை ஏற்கனவே அருணாச்சலம் படத்தில் சுந்தர் சிக்கு கிடைத்திருந்தாலும் தற்போது ரஜினியை இரண்டாவது முறையாக இயக்கும் வாய்ப்பை சுந்தர்சி நழுவ விட்டது ஏன்.? என்பது தான் தற்போது கோலிவுட்டில் பேசும் பொருளாக உலா வருகிறது..

 

சுந்தர் சி விலகியது ஏன் என பல்வேறு தரப்பிலிருந்து பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது..

இந்த நிலையில் இந்தப் படத்தை இயக்கப் போகும் இயக்குனர் யார் என்ற பேச்சு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் எழுந்துள்ளது.. கேஎஸ் ரவிக்குமார் அல்லது கார்த்திக் சுப்புராஜ் இயக்கலாம் எனவும் தகவல் தெரிவிக்கின்றன..

 

Sundar C quit from Rajini and Kamal movie

Sundar C statement was posted in kushboo’s handle and deleted within few minutes