காந்தா விமர்சனம் 4.25/5.. ஹீரோ & டைரக்டர் ஈகோ மோதல்.. கவர்ந்த காந்தம் யார்.?
காந்தா விமர்சனம் 4.25/5.. ஹீரோ & டைரக்டர் ஈகோ மோதல்.. கவர்ந்த காந்தம் யார்.?
ஸ்டோரி…
1960 ஆண்டுகளில் தென்னிந்திய சினிமாவில் நடைபெற்ற சம்பவங்களை தொகுத்து இந்த படத்தில் வித்தியாசமான விருந்து வைத்திருக்கிறார் இயக்குனர்..
நடிப்பு திறமை இருக்கும் துல்கர் சல்மானை சந்திக்கிறார் இயக்குனர் சமுத்திரக்கனி.. எனவே அவரை ஒரு மிகப்பெரிய நடிகராக உயர்த்த அனைத்து பயிற்சிகளையும் கொடுத்து ஒரு கட்டத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்த்த துணை நிற்கிறார்.
இந்த சூழ்நிலையில் தன்னுடைய படத்தில் நாயகன் துல்கர் பல கரெக்ஷன் செய்ய இருவருக்கும் ஈகோ மோதல் முற்றுகிறது.
இதனால் இவர்கள் இணைந்து பணிபுரிந்த சாந்தா திரைப்படம் கைவிடப்படுகிறது.. அதன் தயாரிப்பாளர் சாந்தா படத்தை மீண்டும் எடுக்க வேண்டும்.. சமுத்திரக்கனி & துல்கர் இணைய வேண்டும் என விரும்புகிறார்.. அதன்படி சாந்தா படம் மீண்டும் படப்பிடிப்பு தளத்திற்கு வருகிறது.
அப்போது சமுத்திரக்கனி நாயகியை அறிமுகப்படுத்துகிறார்.. அந்த நாயகி இயக்குனர் சொல்வதை மட்டும் கேட்கிறார்.. இதனால் துல்கருக்கும் அவருக்கும் மோதல் வெடிக்கிறது… மோதல் வந்தாலும் அதன் பிறகு காதலாக மலர்கிறது.
இதனால் சமுத்திரக்கனி துல்கரின் மோதல் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறது.. படத்தின் தலைப்பு கூட சாந்தா என்பதை காந்தா என மாற்றுகிறார்..
அதன் பிறகு என்ன நடந்தது.? ஈகோ மோதலில் ஜெயித்தது ஹீரோவா இயக்குனரா என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
துல்கர் சல்மான், சமுத்திரக்கனி, பாக்யஸ்ரீ, ராணா டகுபதி
நாயகன் துல்கர் என்றாலும் அவருக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத நடிப்பை கொடுத்து ஒரு இயக்குனராக தன் இமேஜை உயர்த்தி இருக்கிறார் சமுத்திரக்கனி.. இருவரும் ஒவ்வொரு காட்சியிலும் ஈகோ மோதலில் நம்மை காந்தமாய் ஈர்த்து விடுகிறார்கள்.. இடைவேளைக்குப் பிறகு போலீஸ் விசாரணைக்கு வரும் அதிகாரி ரானா டகுபதியும் அவரது நடிப்பில் மிரட்டி இருக்கிறார்..
ஆண்களுக்கு மட்டும் போட்டி இல்லை.. இந்த களத்தில் நானும் இருக்கிறேன் என நடிப்பில் மிரட்டி இருக்கிறார் நாயகி பாக்யஸ்ரீ.. பல காட்சிகளில் கீர்த்தி சுரேஷ் சாயலில் இருக்கிறார்.. பெரும்பாலும் சாவித்திரி & பத்மினி நடிப்பை பார்த்த மாதிரியே இருக்கிறது..

ஆக இந்த நால்வரின் ஈகோ மோதல் தான் இந்த காந்தா.. இந்த படத்தில் இவர்கள் நால்வருக்கும் விருது கிடைத்தாலும் ஆச்சரியம் இல்லை..
முழுக்க முழுக்க ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் ஒரு கதையை ஈகோ மோதலை அழகாக உணர்வுபூர்வமாக திரைக்கதை வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர்
1960 ஆண்டுகளில் எம் ஜி ஆர் சிவாஜி பத்மினி சாவித்திரி சரோஜாதேவி ஜெயலலிதா என்டிஆர் ராஜ்குமார் எம் ஆர் ராதா முதல் இன்று இளம் நடிகர்கள் வரை இருக்கும் ஈகோ பிரச்சனையை கதைக்களமாக கொடுத்திருக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…
இசை : ஜானு சந்தர்
ஒளிப்பதிவு : டேனி சஞ்சஸ் லோபஸ்
இயக்கம் : செல்வமணி செல்வராஜ்
படத்தின் ஒளிப்பதிவு கலை காஸ்டியூம் பாராட்டாமல் இந்த விமர்சனத்தை முடிக்க முடியாது.. 1950 – 70களில் இருந்த காலகட்ட சினிமாவை அப்படியே அழகாக காட்டியிருக்கிறார்கள்..
முக்கியமாக துணை இயக்குனராக வரும் பாபுவின் கேரக்டரும் சிறப்பு.. இயக்குனருக்கும் நாயகனுக்கும் நடுவில் சிக்கிக் கொண்டு பாபு படும் அவஸ்தைகள் சிறப்பு ரகம்.
படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் மனதை விட்டு நீங்காத ரகம்.. ஒரே அரங்கத்திற்குள் 95% காட்சிகளை படமாக்கி அதை போரடிக்காமல் கொடுத்திருப்பது சிறப்பு..

டைரக்டர் & ஹீரோ ஈகோ மோதலில் சூட்டிங் ஸ்பாட்டில் நடக்கும் பிரச்சினையை மையப்படுத்தி இப்படி ஒரு திரைக்கதை அமைக்க முடியுமா.? என வியக்க வைக்கிறார் செல்வமணி செல்வராஜ்..
இடைவேளைக்குப் பிறகு ஒரு கொலை சம்பவம் அதன் விசாரணை.. எந்த விதத்திலும் சோர்வாகாமல் திரைக்கதையை வடிவமைத்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனம்..
ஆக.. ஒரு சிறப்பான காந்தாவை கொடுத்து நம்மை காந்தமாக ஈர்த்திருக்கிறார்கள்.. தயாரிப்பு : ஸ்பிரிட் மீடியா, வேபேரர் பிலிம்ஸ்.. பாராட்டுக்கள்..
Kaantha movie review

