மாரீசன் விமர்சனம்.. கருப்பு நாகேஷாக மாறிய வடிவேலு.!

மாரீசன் விமர்சனம்.. கருப்பு நாகேஷாக மாறிய வடிவேலு.!

மாரீசன் விமர்சனம்.. கருப்பு நாகேஷாக மாறிய வடிவேலு.!

 

ஸ்டோரி…

பாளையங்கோட்டை சிறையில் இருந்து விடுதலை ஆகிறார் பகத் பாசில்.. ஆனாலும் திருட்டு தொழிலை கைவிடாத இவர் ஒரு டூவீலர் பைக் திருடிக் கொண்டு வடிவேல் வீட்டுக்கு கொள்ளையடிக்க செல்கிறார்..

அங்கு அவரோ தனக்கு ஞாபக மறதி வியாதி உள்ளது என்பதும் என்னை இங்கிருந்து அழைத்துக் கொண்டு செல் என்றும் கேட்கிறார்… அப்படி செய்தால் உனக்கு 25 ஆயிரம் பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுத்து தருகிறேன் என்கிறார்.

அதனை நம்பி அவரை அழைத்துக்கொண்டு பைக்கில் சுற்றுகிறார் பகத்.. அப்போது வடிவேலு வங்கிக் கணக்கில் ₹:25 லட்சம் இருப்பதை ஏடிஎம் ஸ்கிரீனில் பார்த்து விடுகிறார்.. இதனையடுத்து வடிவேலுவை மடக்கி எப்படியாவது அந்த 25 லட்சத்தை அபகரிக்க திட்டமிடுகிறார்.

அதன்படி இருவரும் பைக்கில் பயணிக்கும் போது என்ன நடந்தது.? பகத் பாஸில் நினைத்ததை சாதித்தாரா? வடிவேலு இவரிடம் ஏமாந்தாரா அல்லது இவரை ஏமாற்றினாரா என்பதை சுவாரசியமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் சுதீஷ்..

கேரக்டர்ஸ்…

வடிவேலு, பகத் பாசில், கோவை சரளா, சித்தாரா, விவேக் பிரசன்னா, லிவிங்ஸ்டண், தேனப்பன் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒரு சிறிய கருவை வைத்து படத்தை படத்தை சுவாரசியமாக நகர்த்தி செல்வது மலையாள கலைஞர்களின் கலையாகும்.. எனவே மலையாளத்தில் சிறந்த நடிகரான பஹத்தை நாயகனாக்கி இருக்கிறார் இயக்குனர் சுதீஷ் சங்கர்..

திருடன்.. பாசமான பையன்.. நண்பன் என பல்வேறு பரிணாமங்களில் ஜொலிக்கிறார் பகத் பாசில்.. ஆனால் ஒரு திருடன் சில விஷயங்களில் இரக்கப்பட்டு நண்பனை குறை சொல்வது நம்பும்படியாக இல்லை..

நாகேஷ் ஒரு காமெடி நடிகர் என்றாலும் அவர் பலராலும் குணச்சித்திர நடிகராக பாராட்டு பெற்றவர்.. அவரைப் போல் வடிவேலுக்கும் இந்த படம் சிறந்த பெயரை பெற்றுத் தரும்.. எங்கும் காமெடி கலந்து விடாதபடி கவனமாக கையாண்டிருக்கிறார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு.. சித்தாரா, கோவை சரளா,தேனப்பன், லிவிங்ஸ்டண்ட் உள்ளிட்ட பலரும் தங்கள் கேரக்டரை நடிப்பால் கவனிக்க வைக்கின்றனர்..

இடைவேளை வரை விவேக் பிரசன்னா கேரக்டர் வலுவில்லாத இருந்த போதும் கிளைமாக்சில் தன் கேரக்டரை சிறப்பாக செய்து கைதட்டல் வாங்குகிறார்..

 

டெக்னீசியன்ஸ்…

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் சார்பில் ஆர்.பி. சவுத்ரி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மாரீசன்.

வி கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுத மலையாள இயக்குனர் சுதீஷ் சங்கர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

கலை செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு, யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்..

சாலை வழி பயணம் என்பதால் பல காட்சிகளில் ட்ரோன் பறக்கவிட்டு படமாக்கி இருக்கிறார் ஒளிப்பதிவாளர்..

யுவன் இசையில் வடிவேலு பாடிய பாடல்கள் ரசிக்க வைக்கிறது.. அதைவிட மேலாக யுவன் தன் தந்தை இளையராஜா படத்தில் உள்ள ஒரு பாடலையும் போட்டு இருக்கிறார்.. நேத்து ஒருத்தர ஒருத்தர பார்த்தோம்.. என்ற ராமராஜனின் பாடல் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.. அந்தப் பாடலுக்கு ராமராஜன் கெட்டப்பில் வந்தவரும் அந்த பெண்ணும் ஆட்டம் போட வைக்கின்றனர்.

வடிவேலு பகத் என இரண்டு சிறந்த கலைஞர்கள் இருந்தும் படத்தில் ஒரு நாயகி இல்லாமல் படத்தை இயக்க முடிவு செய்த இயக்குனர் சுதீஷ் பாராட்டுக்குரியவர்..

இடைவேளை வரை சாலையில் மட்டுமே படத்தை நகர்த்தி அதன் பிறகு ஒரு திரில்லர் பாணியில் படத்தை சீட்டு நுனியில் உட்கார வைத்து விட்டார் இயக்குனர்.. வழக்கமான சினிமா வகை இல்லாமல் கிளைமாக்ஸில் ஒரு சோசியல் மெசேஜ் கொடுத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தந்துள்ளார் டைரக்டர்..

Maareesan movie review