லப்பர் பந்து விமர்சனம் 4.25/5.. எல்லாமே சிக்ஸர்
லப்பர் பந்து விமர்சனம் 4.25/5.. எல்லாமே சிக்ஸர்
ஸ்டோரி…
கேப்டன் விஜயகாந்தின் தீவிரமான ரசிகர் தினேஷ்.. இவருக்கு ஜோடி ஸ்வஸ்விகா… ஹரிஷ் கல்யாண் இவருக்கு ஜோடி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி..
20 வயது ஆவதற்கு முன்பே தன் காதலி ஸ்வஸ்விகாவை மணம் முடித்தவர் தினேஷ்.. இவருக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் அதிகம்.. திருமணமானாலும் கிரிக்கெட்டை விடவில்லை.. இதனால் மனைவி இவரை கண்மூடித்தனமாக கண்டிப்பதும் உண்டு. ஆனாலும் 45 வயது எட்டிய போதும் கிரிக்கெட்டை மனைவிக்கு தெரியாமல் விளையாடுவது தினேஷின் வழக்கம்.
இந்த நிலையில் தினேஷின் மகள் சஞ்சனாவை காதலித்து வருகிறார் ஹரிஷ்.. இருவரும் நெருக்கமாகும் சூழ்நிலையில் ஹரிஷும் ஒரு கிரிக்கெட் பைத்தியம் என்பது சஞ்சனாவின் அம்மாவுக்கு தெரிய வருகிறது.
மேலும் தினேஷும் ஹரிஷும் எதிர் எதிர் கிரிக்கெட் அணியில் இருப்பதால் இவர்களுக்குள் எப்போதும் ஈகோ மோதல் வெடித்து வருகிறது
இதன் பிறகு என்ன நடந்தது.? ஏற்கனவே கணவனை கண்டிக்கும் மாமி கிரிக்கெட் மருமகனை ஏற்றுக் கொண்டாரா.? என்பதெல்லாம் மீதிக்கதை..
கேரக்டர்ஸ்…
Harish Kalyan, Attakathi Dinesh, Swaswika , Sanjana Krishnamoorthy, Kaali venkat, Bala Saravanan, Geetha Kailasham, Devadharshini, Jenson divakar, TSK, Aditya Kathir
தினேஷ் ஹரிஷ் கல்யாண் ஸ்வஸ்விகா சஞ்சனா, காளி வெங்கட், பாலசரவணன் ஜன்சன் தேவதர்ஷினி கீதா கைலாசம், ஆதித்யா கதிர் டி எஸ் கே என யாரையும் விட முடியாமல் ஒவ்வொருவரையும் வெகுவாக பாராட்டலாம்..
இளம் வயது நடிகருக்கு மாமனராக நடித்த தினேஷ் நிச்சயம் பாராட்ட வேண்டும்.. அதற்கு ஏற்ப உடல் மொழியும் மாற்றி நடித்திருப்பது சிறப்பு..
அப்பாவை விட்டுக் கொடுக்க முடியாமல் காதலனை விட்டுக் கொடுக்க முடியாமல் சஞ்சனா தவிக்கும் காட்சிகளில் நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார்.
கிரிக்கெட் ஆர்வம் இல்லாமல் விளையாடாமல் நடிப்பில் சிக்சர் அடித்தவர் ஸ்வஸ்விகா தான்.. தினேஷின் இள மனைவி வயது முதிர்ந்த பின் அம்மா என இரண்டு பக்குவப்பட்ட நடிப்பை கொடுத்திருக்கிறார்.
தினேஷின் நண்பனாக ஜென்சன் ஹரிஷின் நண்பனாக பால சரவணன் இருவரும் அடித்து பிரிந்து மேய்ந்திருக்கிறார்கள்.. அதுபோல கிரிக்கெட் கமெண்ட்ரி கொடுக்கும் ஆதித்யா கதிரும் பின்னி எடுத்திருக்கிறார்.
சீனியர் கேப்டன் காளி வெங்கட்டும் தன் பங்கிற்கு கலக்கல் வெங்கட் ஆக மாறி இருக்கிறார்..
டெக்னீசியன்ஸ்…
Directed by : Tamizharasan Pachamuthu
Music Director : Sean Roldan
Director of photography : Dinesh Purushothaman
Editor : Madan G
Art director : Veeramani Ganesan
Lyrics : Mohan Rajan
Costume designer : Dinesh Manoharan
Stunt: Abishek srinivas
Sound design : T Udayakumar
Colorist : Prasath Somasekar
Associate Directors : Vijay Prabhakaran Chella , Mamtha MK
Associate Editor :Vinayagamoorthy Thennarasu
PRO : A. John
Production executive : AP Paalpandi
Executive producer : Shravanthi Sainath
Co – producer : A Venkatesh Producer : S Lakshmankumar
ஷான் ரோல்டன் இசையில் சில்லாச் சிறுக்கி பாடல் ஆட்டம் போட வைக்கிறது.. அதுபோல பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் பலம்.. ஆனால் பின்னணி இசை விட இளையராஜா இசையில் விஜயகாந்த் பாடல்கள் தான் படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறது.. விஜயகாந்த் உயிரோடு இருந்தால் இந்த படத்தை பார்த்து நிச்சயம் ரசித்து இருப்பார்..
மதன் எடிட்டிங் செய்ய தினேஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. படம் யாருக்கும் எங்குமே போர் அடித்து விடக்கூடாது என இருவரும் தங்கள் பணிகளில் விளையாடி இருப்பதை ஒவ்வொரு ஃபிரேமிலும் காண முடிகிறது..
சமீபகாலமாக எத்தனையோ கிரிக்கெட் படங்களை பார்த்து விட்டோம்.. இதில் கிரிக்கெட் மையப்படுத்தி கதைக்களம் அமைப்பட்டிருந்தாலும் மாமியார் மருமகள்… அம்மா மகள் சண்டை, ஆத்தா பேத்தி செல்ல சண்டை, மாமனார் மருமகன் ஈகோ… நண்பர்களின் நெருக்கம்.. மாமன் மச்சான் உறவு என அனைத்தையும் கலந்து ஒவ்வொரு பாலிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து.
படம் தொடங்கிய முதல் காட்சியிலேயே நம்ம சிரிக்க வைத்தவர் படம் முடியும் வரை அதே வேகத்தில் கொண்டு சென்று இருப்பது சிறப்பு… இறுதியில் சாதிப்பிரிவினைக்கும் சாட்டையடி கொடுத்து படத்தை முடித்து இருப்பது படத்தை கொண்டாட வைக்கும்..
படத்தில் பல கிரிக்கெட் மேட்ச்கள் இடையிடையே அமைக்கப்பட்டிருந்தாலும் ஹீரோக்கள் ஜெயிக்காமல் அவர்களை தோற்க வைத்து கதையை நகர்த்திருப்பது இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது.
தினேஷுக்கு விஜயகாந்த் பாட்டு ஹரிஷிக்கு விஜய் பாட்டு இரண்டையும் கொடுத்து கேப்டன் & தளபதி ரசிகர்களையும் கொண்டாட வைத்துவிட்டார்…
20 வருடங்களுக்கு முன்பு பின்பு என காட்டாமல் கிரிக்கெட் பந்து விலை.. 20 வருடங்களுக்குப் பிறகு பந்தின் விலை என்ன என காட்டி காலகட்டங்களை காட்டியிருப்பது சிறப்பு
ஆக லப்பர் பந்து… எல்லாமே சிக்ஸர்
Lubber Pandhu movie review

