HMM – Hug Me More விமர்சனம்

HMM – Hug Me More விமர்சனம்

 

 

HMM – Hug Me More விமர்சனம்

 

பிரைட் என்டர்டெயின்மென்ட் டைம்ஸ் தயாரிப்பில் நரசிம்மன், சுமிரா,சிவா , ஷர்மிளா மற்றும் அனுராக் ஆகியோர் நடிப்பில் உருவானது ’ஹெச்.எம்.எம்’ (HMM – Hug Me More)

நடிகர்கள் : நரசிம்மன், சுமிரா,சிவா , ஷர்மிளா மற்றும் அனுராக்

பின்னணி இசை :: புரூஷ்

இயக்கம் : நரசிம்மன் பக்கிரி சாமி

மக்கள் தொடர்பு : வெங்கட்

ஸ்டோரி…

ஆராய்ச்சியாளராக இருக்கும் நாயகன் நரசிம்மன் லேப்டாப்பில் தீவிரமாக பணிபுரித்துக் கொண்டிருக்கிறார்.. அப்போது அவருடைய தகவல்கள் திருடப்பட்டதை அறிகிறார்.. இதனை அடுத்து அதிர்ச்சி உள்ளாகும் அவர் நண்பனிடம் இது பற்றியும் சொல்கிறார்..

இதை யார் செய்திருப்பார்கள் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார் நரசிம்மன்

ஊட்டி பங்களாவில் தங்கியிருக்கிறார் நாயகி சுமிரா. அவர்க்கு பிறந்தநாள் என்பதால் தோழி ஷர்மிளா பங்களாவிற்கு வருகிறார். பிறகு வீட்டை விட்டு வெளியே வரும் ஷர்மிளாவை மர்ம நபர் கொலை செய்து விடுகிறார்.

இதனையடுத்து ஷர்மிளா கணவர் மனைவியை தேடி பங்களாவிற்கு வர மனைவி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

அப்போது அந்த மர்ம நபர் பங்களாவை சுற்றி இருப்பதை அறிந்து கொள்கிறார்.

அடுத்தது என்ன நடந்தது? முகமூடி மனிதர் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பதே ’ஹெச்.எம்.எம்’ (HMM – Hug Me More)

படம் எப்படி?

நாயகனாக நரசிம்மன்.. அமைதியாக வந்து ஆக்ரோஷமான நடிப்பை கொடுக்க முயற்சித்து இருக்கிறார்.. சுமிரா கவர்ச்சியான உடைகளில் கலக்குகிறார்.. ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் பகல் நேர காட்சிகளில் நாயகிகள் இருவரும் கவர்கின்றனர்

நாயகியின் தோழியாக வரும் ஷர்மிளா மற்றும் அனுராக் படத்தில் காட்சிகள் குறைவாக இருந்தாலும் நிறைவு..

பின்னணி இசையை கொஞ்சம் திரில்லராக கொடுக்க முயற்சித்திருக்கிறார் புரூஷ்.. கிரண் ஒளிப்பதிவு மோசம்..

20 நிமிடத்தில் முடிக்க வேண்டிய கதையை 2 மணி நேரமாகக் கொண்டு சென்று நம்மை சோதித்து விட்டார்கள் படக்குழுவினர்..

ஒரு த்ரில்லர் கதையை இன்னும் காட்சிகள் நீடித்து திறமையான நடிகர்களை தேர்ந்தெடுத்து இந்த படத்தை கொடுத்திருந்தால் பாராட்டப்பட வேண்டிய படமாக இருக்கும்.

முக்கியமாக ஹக் மீ மோர் ஹக் மீ மோர் என்று படத்தின் டைட்டிலேயே பாடலாக வைத்திருக்கிறார்கள்.. அது ஒரு முறை இரு முறை வந்தால் பரவாயில்லை.. படம் முழுக்க வந்து நம்மை நோகடிக்கிறது.

இயக்குனர் நரசிம்மன் பக்கிரி சாமி இறுதிவரை எதிர்பார்ப்போடு கதையை நகர்த்தி செல்கிறார் .

பொதுவாக தமிழ் படங்களுக்கு ஆங்கிலத்தில் சப் டைட்டில் போடுவார்கள்.. ஆனால் முதல்முறையாக நடிகர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசுவதால் தமிழில் சப்டைட்டில் போடுவதாக உள்ளது.. என்ன கொடுமை சரவணா இது??

Hug me more movie review