அனிருத்தை மணந்தார் ‘சன் பிக்சர்ஸ்’ காவ்யா..; ரஜினி – ஸ்டாலின் உறவினரானார்

அனிருத்தை மணந்தார் ‘சன் பிக்சர்ஸ்’ காவ்யா..; ரஜினி – ஸ்டாலின் உறவினரானார்

 

 

அனிருத்தை மணந்தார் ‘சன் பிக்சர்ஸ்’ காவ்யா..; ரஜினி – ஸ்டாலின் உறவினரானார்

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – திமுக தலைவர் ஸ்டாலின் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.. இதனால்தான் கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோற்றபோது உடனே அவருக்கு ஆறுதல் சொல்ல ரஜினிகாந்த் சென்று பார்த்து வந்தார் என்பதும் தங்களுக்கு நினைவிருக்கலாம்.

இந்த நிலையில் ரஜினி – ஸ்டாலின் இருவரும் நண்பர்கள் வட்டாரத்திலிருந்து தற்போது உறவினர் ஆகியுள்ளனர்…

இன்று நவம்பர் 11ஆம் தேதி இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதி மாறனின் ஒரே மகள் காவியா இருவரும் திருமணம் செய்துள்ளனர்.. இவர்களின் திருமணம் சுவிஸ் நாட்டில் நடைபெற்றது..

இதற்காக அனிருத் குடும்பத்தினர் மற்றும் காவியா குடும்பத்தினர் தனி விமானத்தில் சுவிஸ் நாட்டிற்கு பறந்து இருந்தனர்.. மிக மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற அனிருத் – காவியா திருமண புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது..

ரஜினிகாந்தின் மனைவி லதாவின் சகோதரர் ரவிச்சந்திரன் மகன் தான் அனிருத்..

தமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்துள்ளவர் ரவி.. அனிருத்தின் அம்மாவும் பாரம்பரிய சினிமா குடும்பத்தை சேர்ந்த நடன கலைஞரும் கூட.. அனிருத்தின் ஒரே சகோதரி தற்போது லண்டனில் வசிக்கிறார்..

அனிருத், காவியா மாறனின் திருமண வரவேற்பு, சென்னையில் நவம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது..

 

 

Music Composer Anirudh and Sun Pictures Kavya wedding

——