குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ் விமர்சனம்
குற்றம் புரிந்தவன் வெப் சீரிஸ் விமர்சனம்
ஸ்டோரி…
அரசு ஆஸ்பத்திரியில் மருந்தளராக பணிபுரிகிறார் பசுபதி.. இவருக்கு ஒரு அழகான குடும்பம்.. இவருக்கு பனிக்காலத்தில் ஓய்வு பெறும் வயதும் எட்டுகிறது..
இந்த சூழ்நிலையில் இவருக்கு கிடைக்கும் பென்ஷன் பணத்தை தன் பேரனின் சிகிச்சைக்காக பயன்படுத்த நினைக்கிறார்.. அந்த சமயத்தில் இவருக்கு வேறொரு பிரச்சனை தொற்றிக் கொள்கிறது.. ஓய்வு காலத்தில் பிரச்சினையில் சிக்கிக்கொண்டால் பென்ஷன் கிடைப்பது பிரச்சனை.. பேரனுக்கு சிகிச்சை செய்ய முடியாது என்பதால் அந்த பிரச்சனையை மறைக்க முயல்கிறார்..
அதிலிருந்து தப்பிக்க இவர் முயற்சிகள் மேற்கொள்ளும் சூழ்நிலையில் போலீஸ் டிரைவர் விதார்த் தனக்கான ஒரு பிரச்சனையின் தீர்வை கண்டறிய முயல்கிறார்..
இந்த இரண்டு பிரச்சனைகளும் ஒரு இடத்தில் சந்திக்க சூழ்நிலை உருவாகிறது.. அது என்ன.? இருவரும் எப்படி அந்த பிரச்சனையை கையாண்டார்கள்.? என்பதுதான் இந்த எபிசோடின் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
பசுபதி & விதார்த் இருவரும் எதார்த்த நாயகர்கள்.. தங்களுக்கு எந்த கேரக்டர் கிடைத்தாலும் அசால்டாக அலட்டிக் கொள்ளாமல் அதில் தங்களைப் பொருத்திப் பார்ப்பது இவர்களின் நடிப்பு.. பதைபதைப்பு கோபம் டென்ஷன் என அனைத்தையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளனர்..
உயரதிகாரிகளுக்கு கட்டுப்பட்ட கடமை தவறாத காவல் அதிகாரியாக விதார்த்..
லிசி ஆண்டனி அவரின் பயத்துடனும் நம்மையும் பயம் கொள்ள வைக்கிறார்..
லக்ஷ்மி ப்ரியா சந்திரமௌலி அழுத்தமான கேரக்டரில் தன் அழுத்தமான திறமையை பதித்திருக்கிறார்..
தர்மராஜ் மாணிக்கம், ஜெயக்குமார், மூணார் ரமேஷ், அஜித் கோஷி, சூப்பர் குட் சுப்ரமணி என அனைவரும் சிறப்பு..

டெக்னீசியன்ஸ்….
ஒளிப்பதிவாளர் – ஃபரூக் பாட்ஷா
இசையமைப்பாளர் – பிரசாத் எஸ்.என்..
இருவரும் ஒரு திரில்லரான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்க தங்களின் உச்சகட்ட உழைப்பை கொடுத்துள்ளது ஒவ்வொரு காட்சியிலும் தெரிகிறது..
ஒரு திரில்லர் கதைக்கு உண்டான ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் என அழகாக எடிட்டிங் செய்து படபடப்பை உண்டாக்கி இருக்கிறார் எடிட்டர் கதிரேஷ் அழகேசன்..
இயக்குநர் – செல்வமணி முனியப்பன்..
ஒரு த்ரில்லிங் எக்ஸ்பீரியன்ஸ் ஒவ்வொரு எபிசோடிலும் இயக்குனர் கொடுத்து இருக்கிறார்.. ஆனால் அதே சமயம் சில லாஜிக் மீறல்கள் கேள்விகள் நமக்கு எழாமல் இல்லை.. குற்றவாளி அடுத்தடுத்த குற்றங்கள் செய்கிறார்.. ஆனால் அவருக்கு பசுபதி பற்றி எப்படி தெரிய வருகிறது.?
பிளாஷ் பேக் காட்சிகளில் திரைக்கதையில் சொன்ன விதம் ரசிக்க வைக்கிறது..
குற்றம் நடந்தது சூழ்நிலை.. குற்றவாளிகளை தேடும் ஒரு விசாரணை வளையத்துக்குள் நம்மையும் கடத்தி ரசிகர்களை ஒன்றை வைத்து விடுகிறார் இயக்குனர் செல்வமணி முனியப்பன்..
Kuttram Purindhavan Review

