உடையிலும் உள்ளத்திலும் வெண்மையானவர் AVM சரவணன்.; சிவாஜி போல அடுத்த படம் திட்டமிட்டோம்.. – ரஜினி
உடையிலும் உள்ளத்திலும் வெண்மையானவர் AVM சரவணன்.; சிவாஜி போல அடுத்த படம் திட்டமிட்டோம்.. – ரஜினி
இந்திய சினிமாவில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் இன்று டிசம்பர் 4 வயது மூப்பு காரணமாக காலமானார். வயது 86..).
(நேற்று டிசம்பர் 3 தேதி தன் பிறந்த நாளை கொண்டாடினார் ஏவிஎம் சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது.)

அவரின் மறைவையொட்டி, முதல்வர் ஸ்டாலின், வைகோ மற்றும் நடிகர்கள் சிவக்குமார், ரஜினிகாந்த், சூர்யா, விஷால் உள்ளிட்டோர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்..

அஞ்சலி செலுத்திய பின்னர் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது.. “ தயாரிப்பாளர் சரவணன் ஒரு ஜெண்டில்மேன். சினிமாவை உயிராக நேசித்தவர்.
என் மீது மிகுந்த அன்பு கொண்டவர். என் நலன்விரும்பி அவர்.. என்னுடைய கஷ்ட காலங்களில் எனக்குத் துணையாக இருந்தார்.
உடையிலும் உள்ளத்திலும் வெண்மையானவர்.
நான் ஏவிஎம் தயாரிப்பில் 9 திரைப்படங்களில் நடித்துள்ளேன். எல்லாமே ஹிட். அதில்.. சிவாஜி படம் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது.
அதுபோல இன்னொரு படத்தை எடுக்கத் திட்டமிட்டோம். ஆனால், அதற்குள் இப்படியாகிவிட்டது. அவரது மறைவு என் மனதை ரொம்ப பாதிக்கிறது. அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்” என பேசினார் ரஜினிகாந்த்..
கூடுதல் தகவல்.. ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு டிசம்பர் 12ஆம் தேதி ஏவிஎம் நிறுவனம் தயாரித்த எஜமான் திரைப்படம் சில தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Rajini condolence message for Producer AVM Saravanan

