காளிதாஸ் 2 விமர்சனம்… 4/5.. திகட்டாத திரில்லர்… தீராத பாகம்
காளிதாஸ் 2 விமர்சனம்… 4/5.. திகட்டாத திரில்லர்… தீராத பாகம்
ஸ்டோரி…
புத்தாண்டு பிறக்கிறது…. ஒரு அப்பார்ட்மெண்ட்டில் திருவிழா கோலம்.. வண்ண உடைகளில் பெண்கள்.. கையில் மது பாட்டிலுடன் ஆண்கள் பெண்கள்.. இப்படியான சூழ்நிலையில் அந்த அப்பார்ட்மெண்டில் மித்ரா என்ற சிறுமி காணாமல் போகிறார்… அடுத்த சில மணி நேரங்களில் அவள் கொல்லப்பட்டு கிடக்கிறார்..
அவளை யார் என்ன செய்தனர்.? என்று பரத் மற்றும் பவானி ஸ்ரீ மற்றும் காவல்துறையினர் விசாரணை இறங்குகின்றனர்… அதன் பின்னர் நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் தான் இந்த படத்தில் சுவாரஸ்யமான திரைக்கதை..
கேரக்டர்ஸ்…
பரத் – காளிதாஸ்
சங்கீதா – ரூபா சுந்தரி
பவானி ஸ்ரீ – ஏசி வைஷ்ணவி
ஸ்மார்ட்டான லுக்.. அலட்டிக் கொள்ளாத நடிப்பு.. எல்லை மீறாத இன்வெஸ்டிகேஷன் என பரத் பக்கா..
பரத் & பவானி ஸ்ரீ இருவரும் காக்கி உடையில் கம்பீரமான பொருத்தம்..
விடுதலை & ஹாட்ஸ்பாட் 2 என வெரைட்டியாக பவானி தன் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து பட்டையை கிளப்புகிறார்..
நீண்ட வருடங்களுக்குப் ‘பூவே உனக்காக’ சங்கீதா.. சொல்லாமலே என்ற பாடலுடன் அறிமுகமம்.. 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.. சாதாரண கேரக்டரை ஏற்றுக் கொள்வாரா.? வித்தியாசமான கேரக்டர் எடுத்து மீண்டும் சொல்லாமலே நம் மனங்களில் நுழைந்து விட்டார்..
ஸ்டீபன் கேரக்டரில் நடித்திருக்கும் அஜய் கார்த்திக்கு இதுதான் முதல் படம் என்றாலும் நடிப்பில் மெச்சூரிட்டி.. இவர்தான் கொலைகாரன் என்று நாம் நினைக்கும் சூழ்நிலையில் எதிர்பாராத திருப்பம் ரசிகர்களை கூட உறுத்தும்..
அழகான அளவான நடிப்பில் அபர்னதி..
அபர்ணதி – சஞ்சு
அனந்த் நாக் – கோகுல்
பிரகாஷ் ராஜ் – வழக்கறிஞர் நட்ராஜ்
கிஷோர் – பாண்டியா.. உள்ளிட்ட கேரக்டர்கள் ஒவ்வொன்றும் திரைக்கதையில் சுவாரசியத்தை ஏற்படுத்தும்..

டெக்னீசியன்ஸ்…
எழுத்து & இயக்கம் – ஸ்ரீ செந்தில்
திரைக்கதை – அரவிந்தன் ஆனந்த்
தயாரிப்பு – ஸ்கை பிக்சர்ஸ் (“ஃபைவ் ஸ்டார்” கே. செந்தில் மற்றும் டாக்டர். என். யோகேஸ்வரன்)
இசை – சாம் சி.எஸ்
ஒளிப்பதிவு – சுரேஷ் பாலா
எடிட்டிங் – புவன் ஸ்ரீனிவாசன்
தயாரிப்பு வடிவமைப்பாளர் – ஜி.துரைராஜ்
ஒலி வடிவமைப்பாளர் – தபஸ் நாயக்
கலை இயக்குனர் – கலியுக ஏ.ராஜா
சண்டை இயக்கம் – ஓம் பிரகாஷ்
ஆடை வடிவமைப்பாளர் – டோரதி ஜெய் (டிஜே)
பாடல் வரிகள் – மோகன்ராஜ்
நடனம் – பாபி
விளம்பர வடிவமைப்பு – தினேஷ் அசோக்
பேனர் – ஸ்கை பிக்சர்ஸ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்
சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. புத்தாண்டு பிறக்கும் அன்று மக்களின் மனநிலை அன்று அப்பார்ட்மெண்ட் சூழ்நிலை அதற்கு ஏற்ப லைட்டிங் அதற்கு ஏற்ப காட்சி என அனைத்தையும் சிறப்பாக இருக்கிறார்..
சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார்.. திரில்லருக்கு ஏற்ற சரவெடி இசை சபாஷ்..
பாலியல் தொல்லை.. கொலை என்ற தினம் தினம் செய்திகள் வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் பாலியல் குற்றச்சாட்டை சிலர் தவறாக முன் வைப்பதும்.. அதை பயன்படுத்தி நிரபராதியை குற்றவாளி ஆக்கும் சமூகம் என்பதையும் அப்பட்டமாக சொல்லி இருக்கிறார்.. இது ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் என நம்பலாம்..
(சமீபத்தில் கூட கேரளாவில் தன்னுடைய youtube ரீல்ஸ்க்காக ஒரு நிரபராதியை குற்றவாளி ஆக்கிய பெண்ணின் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது..)
இதுதான் திரைக்கதை இப்படிதான் பயணிக்க வேண்டும் என எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாமல் கதையை விறுவிறுப்பாக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ செந்தில்..
காளிதாஸ் பாகம் மூன்று வரும் என்ற திருப்புமுனைக் காட்சியுடன் படத்தை முடித்து இருக்கிறார்.. எனவே தான் இந்த தீராத பாகம் தொடரும்…..
Kaalidas 2 movie review

