கார் மேனி செல்வம் விமர்சனம் 3.25/5.. பணம் தேடும் பாதையில் வேக பயணம்
கார் மேனி செல்வம் விமர்சனம் 3.25/5.. பணம் தேடும் பாதையில் வேக பயணம்
ஸ்டோரி…
சமுத்திரக்கனி & லட்சுமி பிரியா தம்பதி.. இவர்களுக்கு ஒரு மகன்.. இருப்பதை வைத்து இயல்பான வாழ்க்கை வாழும் கார் டிரைவர் சமுத்திரகனி..
கௌதம் வாசுதேவ் & அபிநயா தம்பதி இவர்களுக்கு ஒரு மகள்.. மனைவி மகளுக்காக நேரம் செலவழிக்க கூட முடியாத ஒரு பிசினஸ் மேன் கௌதம்..
கௌதம் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்க்கிறார் சமுத்திரக்கனி.. இந்த சூழ்நிலையில் தன் டிரைவர் கனியிடம் காரை கொடுத்துவிட்டு வெளிநாட்டுக்கு ஒரு மாதம் குடும்ப சுற்றுலா செல்கிறார் கௌதம்..
அப்போ சில தவறான நபர்களால் தவறான வழிகாட்டுதல்படி பேராசைப்படுகிறார் சமுத்திரக்கனி.. அதன்படி கௌதமுக்கு தெரியாமல் காரை வாடகை டாக்ஸிக்கு விடுகிறார்.. அதன் பின்னர் நடக்கும் பிரச்சனைகளை அவர் எப்படி சமாளித்தார்? வாழ்வில் மீண்டு வந்தாரா.? என்பதெல்லாம் மீதிக்கதை.

கேரக்டர்ஸ்…
P. SAMUTHIRAKANI – SELVAM
LAKSHMI PRIYA CHANDRMOULI – SHANTHI
KARAN CHAKARAVARTHI – BALU
GAUTHAM VASUDEV MENON – SAMPATH
ABHINAYA – DEVI
வெகுளித்தனம்… எளிமையான தந்தை… யதார்த்த மனிதர்.. நேர்மையான கணவர்.. இந்த கேரக்டர்கள் எப்போதுமே ரெடிமேட் சட்டை போல சமுத்திரக்கனிக்கு பக்கா பொருத்தம்.. இதிலும் செல்வம் கேரக்டராகவே செட்டில் ஆகிவிட்டார்..
குடும்பத்தை பிரிந்து குற்ற உணர்ச்சியில் வெளிநாட்டில் வசிக்கும் போது அங்கு சக மனிதர்களுடன் சகஜமாக பழக முடியாமல் தவிக்கும் உணர்வை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார் சமுத்திரக்கனி..

கதை நாயகியாக லட்சுமி பிரியா.. அன்பான அம்மா… தெளிவான துணைவி.. கணவனை கண்டித்தாலும் உறவினரிடம் விட்டுக் கொடுக்காத இல்லத்தரசியாகவே வாழ்ந்திருக்கிறார்…
இவர்களின் மகனாக நடித்த கரண்.. நடிப்பில் கவர்கிறார்.. அப்பா நீ அறிவாளி என்று இவன் சொல்லும் காட்சிகள் அழகு..
கௌதம் மேனன் & அபிநயா.. ஸ்டைலிஷ் தம்பதிகள்.. இப்படி ஒரு அன்பான முதலாளி அழகான முதலாளியம்மா கிடைக்க மாட்டாரா என ஏங்க வைக்கின்றனர்.. காது கேட்காது.. பேச முடியாது.. ஆனாலும் ஒவ்வொரு வசனங்களையும் அழகாக தன் உதட்டில் உச்சரித்து அபிநயா அசத்தல் நாயகி.. ஹாட்ஸ் ஆப்..
BADAVA GOPI – BALAN
KARTHIK KUMAR – VASANTH
KOTHANDAM – PLOT SUNDARAM
MADHUMITHA – PREETHI
ARJUNAN – PANDIAN
HARITHA PARAKOD – REENA
JAYANTHI – ABIRAMI
BABY K LAYA – DURGA
ஆகியோரின் கேரக்டர்கள் கதை ஓட்டத்திற்கு பெரிய பங்களிப்பை கொடுத்துள்ளது..

டெக்னீசியன்ஸ்…
Producer Arun Rangrajulu
Director Ram Chakri
Creative Producer Shree Saravanan
Dop Yuvaraj Dakshan
Music as a Service Musicloud Studio & Technology
Edit Jagan R V – Dinesh S
Production Designer Shankar
Audiography Raghav Ramesh
Sound Designer Raghav Ramesh – Hari Prasad MA
Executive Manager Mani Dhamodharan
PRODUCTION MANAGER VR RAMBARATH
COSTUME DESIGNER SWEDHULEKSHMI S
PRO NIKIL MURUKAN
PUBLICITY DESIGNER SHABEER SIDDIQ
LYRICS MANI AMUTHAVAN, UMA DEVI K
CHOREOGRAPHER HARISH KARTHIK
யுவராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. சீற்றமில்லாத கடற்கரை.. பாறாங்கல் கொட்டிய கடற்கரை.. அதன் அருகே வீடு.. அதை ஒட்டி மரத்தில் ஒரு கூடு என ஒவ்வொன்றையும் அழகாக படமாக்கி கலை இயக்குனருடன் கரம் கோர்த்து சிறப்பாக்கி இருக்கிறார்..
அழகான மெலோடி பின்னணி இசை படத்துடன் ஒன்றி பயணிக்கிறது..

நேர்மையாக வாழ ஆசைப்படும் கணவன்.. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்படும் குரங்கு மனம்.. கடன் வாங்கி பணக்காரனாகும் எண்ணங்கள் இப்படி இப்படியான ஒவ்வொன்றையும் அழகாகவே காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர்..
ராம் சக்ரி இயக்கியிருக்கிறார்.. லட்ச லட்சமாக பணம் இருந்தாலும் அமைதி இல்லாத டென்ஷன் வாழ்க்கை.. அளவான பணத்தோடு அழகான வாழ்க்கை என இரண்டு மனிதர்களின் வாழ்க்கையை கண்முன் நிறுத்தி இருக்கிறார்..
Carmeni Selvam movie review

