நீளிரா விமர்சனம்… துப்பாக்கி முனையில் இரு மனங்களின் இதயத் து(வெ)டிப்பு

நீளிரா விமர்சனம்… துப்பாக்கி முனையில் இரு மனங்களின் இதயத் து(வெ)டிப்பு

நீளிரா விமர்சனம்… துப்பாக்கி முனையில் இரு மனங்களின் இதயத் து(வெ)டிப்பு

 

இலங்கை என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது.. ஈழத் தமிழர்கள் சிங்கள ராணுவ வீரர்கள் இவர்களின் போராட்டம் விடுதலைப் புலிகள்.. போர் பதட்டம் குண்டுவெடிப்பு இப்படி பல நிகழ்வுகளை நினைவில் பார்த்திருப்போம்..

இப்படியான சூழ்நிலையில் இலங்கையில் போர் இருக்கும் சூழ்நிலையில் அங்கு நடக்க இருந்த ஒரு திருமணம் எப்படி நடைபெற்றது நடைபெற்றதா என்பதை ஓர் உணர்வு காவியமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சோனி

ஸ்டோரி…

இலங்கை திரைப்படங்களை பார்த்திருப்போம். பெரும்பாலும் ஆவண படங்களாக இருக்கும.. ஆனால் இதில் இருந்து மாறுபட்டு உள்ளது நீளிரா..

1988 காலம்.. ஈழத் தமிழர்கள் வசிக்கும் ஒரு வீட்டில் திருமண நடைபெற உள்ளது.. உறவினர்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் அங்கு சில களப்போராளிகள் மறைந்திருப்பதாக ராணுவத்தினர் தகவல் கிடைக்கவே அவர்கள் அந்த வீட்டை சல்லடை போட்டு தேடுகின்றனர்..

இந்த சூழ்நிலையில் திருமணம் நடைபெற்றதா.? அந்த குடும்பத்தாரின் மனநிலை என்ன என்பதை திரைக் காவியமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்..

 


கேரக்டர்ஸ்..

நவீன் சந்திரா, சனத், கபிலா வேணு, ரூபா கொடுவாயூர், சித்து குமரேசன், விது, நவ யுகா, சுவாதி கிருஷ்ணன், நமச்சிவாயம் தம்பி பிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித்

இதில் நவீன் சந்திரா அமைதிப்படை கேப்டனாகவும், சனத் தமிழ் போராளியாகவும் நடித்திருக்கிறார்கள்..

இருவரும் அந்தந்த கேரக்டர்களுக்கு நியாயம் சேர்க்கும் வகையில் பாத்திரங்களில் ஜொலிக்கின்றனர்..

கர்ப்பிணியாக வரும் சுவாதி கிருஷ்ணன் ஒரு சூழ்நிலை கைதி போல பதட்டங்களுடன் முகபாவனையை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்..

கயல் வின்சென்ட் தன் கேரக்டரில் கச்சிதம்.. முன்னாள் ராணுவ வீரராக வரும் அந்த பெரியவர் அவரது பிளாஷ்பேக் தியாகிகளின் உணர்வை சொல்லும்..

திருமண குடும்பத்தினராக வேணு, ரூபா கொடுவாயூர், சுவாதி கிருஷ்ணன், சித்து குமரேசன், விது, நவ யுகா, சுவாதி கிருஷ்ணன், நமச்சிவாயம் தம்பி பிள்ளை, கயல் வின்சென்ட், ரோஹித் ஆகியோர் நடித்துள்ளனர்.. ராணுவ வீரர்களின் துப்பாக்கி முனையில் அவர்களின் பதட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர்..

டெக்னீசியன்ஸ்…

தயாரிப்பு: கார்த்திகேயன் எஸ், கார்த்திக் சுப்புராஜ்

இசை: கே

ஒளிப்பதிவு: செல்வரத்தினம் பார்த்திபன்

இயக்கம்: சோமீதரன்

பிஆர்ஓ : நிகில் முருகன்

ஒரு வீட்டைச் சுற்றியே நடக்கும் ஒரு திரை கதையை ஒரு புரட்சியை வித்தியாசமான கோணங்களில் படமாக்கி படத்திற்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர்..

அதற்கு ஏற்ப பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலம்..

கிட்டத்தட்ட 100 நிமிடங்களுக்குள் இந்த படம் முடிவதால் எந்த இடத்திலும் நமக்கு சோர்வு ஏற்படவில்லை..

எந்த ஒரு மோதலும் எந்த ஒரு போரும் பிரச்சனைக்கு தீர்வாகாது.. சமாதானம் மட்டுமே இரண்டு தரப்புக்கும் நீதி கிடைக்கச் செய்யும் ஒரு கருவியாகும் என்பதை வித்தியாசமான கோணத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் சோமீதரன்..

கிளைமாக்ஸ் எதிர்பாராத ஒன்று.. ஆனால் நிச்சயம் உங்களுக்கு ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தும்.. இன்று ஆன்லைன் திருமணங்கள் அதிகம் நடைபெற்றாலும் 1988 காலகட்டங்களில் நடந்த இந்த சம்பவம் நிச்சயம் ஒருவித புரட்சித் திருமணம் என்றும் சொல்லலாம்..

 

Neelira movie review