எல்லோரையும் திருப்திப்படுத்திய ‘அஞ்சான்’ ரீ-ரிலீஸ்..; என்ன செய்தார் லிங்குசாமி.?
எல்லோரையும் திருப்திப்படுத்திய ‘அஞ்சான்’ ரீ-ரிலீஸ்..; என்ன செய்தார் லிங்குசாமி.?
திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா & சமந்தா நடிப்பில் உருவான திரைப்படம் ‘அஞ்சான்’.
யுவன் இசையில் பின்னணி இசையும் பாடல்களும் அப்போது பட்டையை கிளப்பியது..
11 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த இந்தப் படம் அந்த சமயத்தில் படு பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது.. லிங்குசாமி பேசிய.. ‘மொத்த வித்தையை இதில் இறக்கி இருக்கேன்..’ என்ற வசனம் அவருக்கு எதிர் விமர்சனங்களை கொடுத்தது..
இப்படி மோசமான விமர்சனங்களை சந்தித்த இந்த ‘அஞ்சான்’ படைத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்து இருக்கிறார்.. முக்கியமாக படத்தில் நிறைய காட்சிகளை மாற்றி இருக்கிறார்..

அதாவது..
தன் சகோதரன் ராஜுவை தேடி கிருஷ்ணா கேரக்டர் மும்பை செல்வார் சூர்யா.. இதுதான் படத்தின் ஆரம்பக் காட்சியாக இருக்கும்.. ஆனால் இந்த முறை… கேங்ஸ்டர் கதையை இடைவேளைக்கு முன்பு வைத்து கிருஷ்ணா கேரக்டரை இடைவேளைக்குப் பிறகு வைத்து Re Editing செய்திருக்கிறார்..
முக்கியமாக 36 நிமிடங்களை கட் செய்து இரண்டு மணி நேரத்துக்குள் முடித்து விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார்..
டிரைவர் சூரி காட்சி ஒன்று கூட இல்லை.. சூர்யாவை முன்னிலைப்படுத்தி இருக்கிறார்.. இந்த முறை இந்த அஞ்சான் படத்தை சூர்யா ரசிகர்கள் மட்டுமல்லாமல் எல்லா ரசிகர்களும் கொண்டாடும் வகையில் இருப்பது சிறப்பு.. இந்த அஞ்சான் இந்த முறை ஜெயித்து விட்டான்..
Anjaan re edited movie review

