ரஹ்மான் இசையில் தனுஷ் நடித்த ‘தேரே இஷ்க் மேன்’ ஹிந்தி பட விமர்சனம்
ரஹ்மான் இசையில் தனுஷ் நடித்த ‘தேரே இஷ்க் மேன்’ ஹிந்தி பட விமர்சனம்
ஸ்டோரி…
டெல்லி பல்கலைக்கழகத்தில் படிக்கும் தனுஷ் ஒரு ரவுடி மாணவன்.. இவரை காதலிக்கிறார் ஹீரோயின் கீர்த்தி.
ஒரு கட்டத்தில் இவரின் காதலை நம்பி கீர்த்தியின் தந்தையிடம் பெண் கேட்கிறார் தனுஷ்.. ஆனால் தகுதியை காரணம் காட்டி அவமானப்படுத்தி அனுப்பி விடுகிறார்..
இதனையடுத்து தன் தகுதியை வளர்த்துக் கொள்ள தனஷ் முயற்சி எடுக்கிறார்.. அவரது முயற்சி பலித்ததா.? அதன் பின்னணியில் நடந்தது என்ன.? என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
தனுஷ், கீர்த்தி சனோன், பிரகாஷ்ராஜ், டோட்டாராய் சவுத்ரி
தமிழ் சினிமாவில் ஆக்சன் களத்தில் குதித்து விட்டார் தனுஷ்.. ஆனால் ஹிந்தியில் ஓர் அருமையான காதல் கதையில் நடித்திருக்கிறார்.. கிளைமாக்ஸ் இல் தனுஷ் பேசும் லவ் டயலாக் ரசிக்க வைக்கிறது..
“காதலுக்காக எதையும் செய்யும் கடைசி தலைமுறை நாங்கள் தான்.. இன்றைய தலைமுறை எல்லாம் செய்கிறார்கள் காதலை (விட) தவிர.. ”
ரொமான்டிக் பாய் முதல் ஆக்சன் பைலட் வரை இரு மாறுபட்ட நடிப்பை உடல் மொழியில் கொடுத்திருக்கிறார் தனுஷ்..
தனுஷின் தந்தையாக பிரகாஷ்ராஜ்.. மகனுக்காக காலில் விழுந்து கெஞ்சும் காட்சியில் கலங்க வைக்கிறார்..
கீர்த்தி சனோன்.. குறும்புக்கார மாணவி பொறுப்பான மனைவி என அசத்திருக்கிறார்.. படத்தில் இவருக்கு ஏகப்பட்ட புகைப்பிடிக்கும் காட்சிகள்.. கிளைமாக்சில் குடிகார கர்ப்பிணியாக மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார்..
ஹீரோயின் அப்பா டோட்டாராய் சவுத்ரி.. ஸ்மார்ட் ஸ்டைலிஷ் ஐஏஎஸ் வில்லன்.. கத்தி பேசாமல் சைலன்டாக பேசி நடிப்பில் மிரட்டி இருக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு : துஷார் காந்தி ராய்
ஹிந்தி படம் என்றாலும் தமிழிலும் வெளியாகி இருக்கிறது.. தமிழில் பெரிய அளவில் பாடல் கவரவில்லை ஆனால் பின்னணி இசையை உணர்வுப்பூர்வமாக கொடுத்திருக்கிறார் ரகுமான்..
துஷார் காந்தி ராய் ஒளிப்பதிவில் கல்லூரி காட்சிகள் கலர்புல்..
தயாரிப்பு: டி.சீரிஸ், கலர் யெல்லா புரடக்ஷன்
இயக்கம்: ஆனந்த் எல் ராய்
ஏற்கனவே தனுஷை வைத்து 2 ஹிந்தி படங்களை இயக்கியவர் ஆனந்த் எல் ராய்..
கல்லூரி காட்சிகள் விமான பைலட் காட்சிகள் ஆக்சன் காட்சிகள் என அனைத்தும் ரசிக்கக்தக்கது.. ஆனால் காசி சாமியார் காட்சிகள் படத்தின் நீளத்தை கருதி குறைத்து இருக்கலாம்..
ஆக்ஷன் கதையாக ஆரம்பித்து காதலில் நுழைந்து பின்னர் மீண்டும் ஆக்ஷனுக்கு மாறி இருக்கிறார் டைரக்டர் ஆனந்த்..
Tere ishk Mein movie review

