ஆழி விமர்சனம்… நடுக்கடலில் ஆழமான காதல்

ஆழி விமர்சனம்… நடுக்கடலில் ஆழமான காதல்

ஆழி விமர்சனம்… நடுக்கடலில் ஆழமான காதல்

 

கதை…

சரத்குமார் – அப்பா..
தேவிகா – மகள்
இந்திரஜித் – மகளின் காதலன்

மகளின் காதலை எதிர்க்கும் தகப்பன் அவளின் காதலனை கடத்தி சித்திரவதை செய்யும் கொடூரம்தான் இந்த படம்.

சரத்குமார் படகுகளை ரிப்பேர் செய்பவர் போட் மெக்கானிக்.. எனவே காதலனை கடத்திக் கொண்டு ஆழ் கடலின் நடுவே வைத்து சித்திரவதை செய்கிறார்.. எனவே இதற்கு ஆழி..

காதலர்கள் இணைந்தார்களா.? என்பதெல்லாம் மீதிக்கதை..

நடிகர்கள்…

சரத்குமார் – தேவிகா சதீஷ் – இந்திரஜித்.. இவர்கள் மூவரை சுற்றியே முழு படத்தையும் கொடுத்திருக்கிறார் இயக்குனர்..

நீண்ட தலை முடி.. நீண்ட தாடி என வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார் சரத்குமார்.. மிரட்டலான வில்லன் தோற்றம்..

அழகிய கண்களாலும் நடிப்பாலும் ரசிகர்களை காந்தமாய் கவர்ந்து விடுகிறார் தேவிகா சதீஷ்.. இடைவேளைக்குப் பிறகு தேவிகா கால்ஷீட் கிடைக்கவில்லையா.? திரையில் அவரை காணவில்லையே..

அப்பாவி இளைஞனாக இந்திரஜித்.. அப்பாவின் நடிப்பில் ரசிகர்களின் அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார்..

வையாபுரி உள்ளிட்ட ஒரு சில கேரக்டர்களும் வந்து செல்கின்றன..

தொழில் நுட்ப கலைஞர்கள்…

ஜாஸி கிப்ட் இசையில் உருவான.. ‘அழகே உயிர் நீயடி.. உயிரில் கலந்தாயடி..’ என்ற காதலர்களின் ரிங் டோனாக மாறும்.. காதலின் ஆழத்தை சொல்லும் வரிகள் அழகு..

ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் பணிகளை கவனித்திருக்கிறார்.. ஆழ்கடல் சத்தம்.. இரவில் கடலின் ஓசை கூட இசை தான் என்பதை அருமையாக பதிவு செய்து இருக்கிறார்..

மாதவ் ராமதாசன் இயக்கி இருக்கிறார்.. மலையாள பட பாணியில் திரைக்கதை வடிவம் கொடுத்திருக்கிறார்.. ஆனால் இதை பார்க்கும் தமிழ் ரசிகர்களுக்கு பொறுமை இருக்குமா.? என்பதே கேள்வி.

சரத்குமார் போன்ற ஆக்சன் ஹீரோ இருக்கும்போது ஆக்ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்..

காதலனை கடத்திக் கொண்டு சென்று சித்திரவதை என்பதை இவ்வளவு நீளமாக சொல்லி இருக்க வேண்டியது இல்லை.. ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் ரத்தத்தால் காதலர்கள் பெயரை எழுதும் காட்சி ரசிக்க வைக்கிறது..

 

Aazhi movie review