தாய் கிழவி விமர்சனம்… வற்றாத தாயுள்ளம் கொண்ட கில்லாடி கிழவி

தாய் கிழவி விமர்சனம்… வற்றாத தாயுள்ளம் கொண்ட கில்லாடி கிழவி

தாய் கிழவி விமர்சனம்… வற்றாத தாயுள்ளம் கொண்ட கில்லாடி கிழவி

 

கதை…

வயதான பெண்மணி ராதிகா.. இவருக்கு மூன்று மகன்கள் & ஒரு மகள்.. பிள்ளைகள் அனைவருக்கும் திருமணம் ஆகி விட்ட நிலையிலும் யாரிடமும் உதவி கேட்காமல் தன்னந்தனியாக பணத்தை வட்டிக்கு விட்டு சம்பாதித்து செல்வ செழிப்பாக வாழ்ந்து வருகிறார் பவுனுதாயி ராதிகா..

இவரிடம் வட்டிக்கு பணம் வாங்கிக் கொண்டு பணத்தை கட்ட முடியாதவர்கள் இவள் செத்தால் நிம்மதி என்று நினைப்பில் வாழ்கின்றனர்.. இந்த சூழ்நிலையில் இவர் உடல்நிலை முடியாமல் திடீரென கை கால்கள் அசைக்க முடியாமல் படுத்த படுக்கையாகி விடுகிறார்.

அப்போதுதான் 160 பவுன் நகைகளை ராதிகா சமீபத்தில் வாங்கினார் என்ற விவரத்தை இளவரசு மூலம் பிள்ளைகள் அறிந்து கொள்கின்றனர்..

பேச முடியாமல் இருக்கும் ராதிகாவிடம் இருந்து உண்மையான விவரங்களை பிள்ளைகள் எப்படி பெற்றார்கள்.? நகைகள் என்ன ஆனது என்பதெல்லாம் மீதிக்கதை..

நடிகர்கள்…

பவுனுத்தாயி கேரக்டருக்கு பக்காவாக பொருந்தி இருக்கிறார் ராதிகா.. தான் சினிமாவில் பெற்ற நடிப்பு அனுபவங்களை ஒவ்வொரு ஃப்ரேமிகளும் அழகாக எதிரொலிக்கிறார்.. வட்டிக்கு விடும் அடவாடி பெண்ணாக திமிராக தன் கேரக்டரை பவுனு போல ஜொலிக்க விட்டிருக்கிறார்..

ராதிகாவின் மகன்களாக சிங்கம்புலி, அருள்தாஸ், பாலசரவணன், மகளாக ரேச்சல் ரபேக்கா, மருமகனாக முத்துக்குமார், உறவினராக முனீஷ்காந்த், நகைக்கடை முதலாளியாக இளவரசு ஆகியோர் காமெடி கலந்த நடிப்பில் கலக்கி இருக்கின்றனர்..

கமல் ரசிகராக சிங்கம் புலி நடித்திருக்கிறார்.. எனவே நிறைய கமல் பாடல்களை கேட்க முடிகிறது.. ஒருவேளை தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் அடுத்தது கமல் தயாரிப்பில் நடிப்பதால் நிறைய பாடல்களை பயன்படுத்த அனுமதித்து விட்டாரோ.?

தொழில்நுட்ப கலைஞர்கள்…

நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கும் ரகம்.. ராதிகாவின் கேரக்டரை தன் வரிகளில் அழகாக செதுக்கியிருக்கிறார் பாடல் ஆசிரியர் ஜெகன் கவிராஜ்..

விவேக் விஜயகுமார் ஒளிப்பதிவு.. மண் சார்ந்த கிராமத்து மக்களின் வாழ்வியலை அழகாக படம் பிடித்திருக்கிறார்..

இயக்குனர் சிவக்குமார் முருகேசன்.. முதல் படம் என்றாலும் தன்னுடைய இயக்கத்தில் முத்திரை பதித்திருக்கிறார் இயக்குனர்..

பெரும்பாலும் கிராமத்து பெண்கள் அமைதியானவர்கள் சாந்தமானவர்கள் என்ற கருத்து நிலவும் சூழ்நிலையில் அவர்கள் சாதிக்க பிறந்தவர்கள் என்பதை இந்த பவுனு தாய்கேரக்டர் மூலம் ஆணித்தரமாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர் சிவக்குமார் முருகேசன்..

 

Thaai Kizhavi movie review