லிட்டில் விங்ஸ் விமர்சனம்.. – ஆணாதிக்கத்தை வென்றதா பெண்ணின் பேரன்பு.?
லிட்டில் விங்ஸ் விமர்சனம்.. – ஆணாதிக்கத்தை வென்றதா பெண்ணின் பேரன்பு.?
பக்கவாத நோயால் படுத்த படுக்கையாக கிடக்கும் ஒருவன்.. அவனுக்கு என்றென்றும் பேரன்புடன் சேவை செய்யும் பெண்மணி.
‘லிட்டில் விங்ஸ்’ – ஆணாதிக்கச் சமூகத்தின் அமைதியான வேதனையை பதிவு செய்யும் சக்திவாய்ந்த குறும்படம் என்று சொன்னால் அது மிகையல்ல..
சமூகப் பொறுப்புணர்வுடன் பேசப்படும் படைப்பாக ‘லிட்டில் விங்ஸ்’ உருவெடுத்துள்ளது.
இயக்குநர் நவீன் இயக்கியுள்ள இந்த 21 நிமிடக் குறும்படம், ஒரு பெண்ணின் அமைதியான எதிர்ப்பையும், அவளது உள்ளார்ந்த மனப்போராட்டத்தையும் மிக இயல்பாக சித்தரிக்கிறது.
கிராமத்தை பின்னணியாகக் கொண்டது இந்தக் கதை.. மேலும் ஆணாதிக்கம் வறுமை ஆகியவற்றையும் பதிவு செய்கிறது..
வேலை ஒன்றும் செய்யாமல் படுத்த படுக்கையாக கிடக்கும் கணவனைப் பார்த்துக் கொள்ளும் அந்தப் பெண்மணிக்கு ஒரே ஆறுதல் அவள் வளர்க்கும் கோழி தான்.. ஆனால் நாட்டுக்கோழி ருசி கண்ட அந்த கணவனோ அந்த சேவலை வெட்டி சமைக்க சொல்கிறார்.. இதனால் உச்சகட்ட மன அழுத்தத்திற்கு செல்கிறார் அந்த பெண்மணி..
பெண்கள் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அவர்களின் விருப்பங்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகின்றன..
தன்னால் எதுவும் முடியாமல் படுத்து கிடந்தாலும் ஆணாதிக்கத்தை கொண்டு ஒரு ஆண் மனநிலையை சொல்கிறது..
மணிமேகலை மற்றும் நிதர்சனா சி. கலிடாஸ் ஆகியோரின் கேரக்டர்கள் மிகவும் எதார்த்தமாக உடலுறவு பூர்வமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது..
ஒரு குடும்பத்திற்கு நம்மை அழைத்துச் சென்ற உணர்வை இந்த குறும்படத்தின் மூலம் இயக்குனர் பதிவு செய்திருக்கிறார்..
ஒளிப்பதிவு, பின்னணி இசை, தொகுப்பு ஆகியவை அழகாக தொகுக்கப்பட்டுள்ளது..
இயக்குநர் நவீன், பெண்களின் மனவலிமை மற்றும் தாங்கும் திறனை மென்மையாகவும் நுணுக்கமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்.

சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்தக் குறும்படம், 53வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) கவனம் பெற்றதுடன், 71வது தேசிய விருதையும் வென்றுள்ளது.
மேலும் பல முன்னணி திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளது..
ஆக, ‘லிட்டில் விங்ஸ்’ ஒரு பெண்ணின் மௌனக் குரலை திரையில் கேட்கச் செய்யும், யதார்த்தமும் உணர்ச்சியும் கலந்த சமூக நோக்குடைய குறும்படமாக திகழ்கிறது.
இந்தக் குறும்படம் ட்ரீம் வாரியர்ஸ் youtube சேனலில் நாம் அனைவரும் பார்க்கலாம்.. இதோ இந்த குறும்படத்தில் youtube லிங்க்.
Little Wings short film review

