ஹைக்கூ விமர்சனம் 3.75/5… பெண்கள் கல்லூரியில் ஒரே ஒரு ராக்கி பாய்
ஹைக்கூ விமர்சனம்… பெண்கள் கல்லூரியில் ஒரே ஒரு ராக்கி பாய்
ஸ்டோரி…
கோவையில் தான் படித்த ஒரு கல்லூரியில் பிரச்சனை காரணமாக பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் இறுதியாண்டு சேர்கிறார் ஏகன்.. அங்கு தன்னுடன் படிக்கும் நாயகி ஸ்ரீதேவிக்கு உதவ இருவருக்கும் காதல் மலர்கிறது…
ஆனால் சில ஆண்டுகளில் அந்த காதல் முடிவுக்கு வருகிறது.. அதன் பிறகு சென்னையில் பணிபுரிகிறார் ஏகன்.. தன்னுடன் பணிபுரியும் ஹீரோயின் ஃபெமினாவை காதலிக்கிறார்..
முன்னாள் காதலில் செய்த தவறுகளை திரும்ப செய்துவிடக்கூடாது… இந்த காதல் முறிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்.. ஆனால் அவரின் இந்த பாசிட்டிவான எண்ணமே அவருக்கு பிரச்சனையாக மாறுகிறது..
ஏன் என்ன ஆனது.? இந்த காதல் நிறைவேறியதா.? பாசிட்டிவாக நினைத்த காதலனுக்கு இந்த காதலி மூலம் என்ன பிரச்சனை வந்தது என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
சீனு ராமசாமி இயக்கிய கோழி பண்ணை செல்லதுரை என்ற படத்தில் கிராமத்து நாயகனாக நடித்தவர் ஏகன்.. இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட ஒரு சிட்டி பையனாக ஸ்மார்ட் ஆக வருகிறார்.. காலேஜ் லுக் ஆபீஸ் லுக் என பாடி லாங்குவேஜில் கூட வித்தியாசம் காட்டியிருக்கிறார் ஏகன்..
எக்ஸ் லவ்வரிடம் வந்த பிரச்சனை அடுத்த லவ்வரிடம் வந்துவிடக் கூடாது என நினைத்து நினைத்து ஏகன் செய்யும் ஒவ்வொன்றும் ஆண்களுக்கே உரித்தான உணர்வுகளை காட்டும்.. இந்தப் பொண்ணுங்கள புரிஞ்சிக்கவே முடியலப்பா என்ற மைண்ட் வாய்ஸ் அழகாக காட்சிப்படுத்தி இருக்கிறார் ஹீரோ ஏகன்..
(ராக்கி பாய் என்ற தலைப்பு கேஜிஎப் ராக்கிபாய் நினைவுபடுத்தலாம்.. ஆனால் இதில் வேறு ஒரு காமெடியான விஷயம் இருக்கு. பார்த்து ரசியுங்கள் மக்களே.. )

நாயகிகளாக ஸ்ரீதேவி அப்பல்லா மற்றும் ஃபெமினா ஜார்ஜ்.. இருவரும் நடிப்பில் ஸ்கோர் செய்கின்றனர்… ஆனால் அழகில்..? ஹீரோயின் லுக் இல்லை..
இந்த மூவர்களை சுற்றியே படத்தின் முழு கதையும் அமைக்கப்பட்டு இருக்கிறது.. மற்ற கதாபாத்திரங்கள் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை…
அதிர்ச்சி அருண், சுப்பிரமணிய சேது, அதியமான், மைம் கோபி ஆகியோரும் உண்டு..

டெக்னீசியன்ஸ்…
இசை அமைப்பாளர் சித்த குமார் இந்த அழகான காதல் படத்திற்கு அருமையான பாடல்களை கொடுத்து பின்னணி இசையிலும் கவர்கிறார்.. மோகன் ராஜா எழுதிய பாடல் வரிகளும் அருமை… காதல் கண்களில் கலவரம் செய்கிறாள் என்ற வரிகள் கவர்கின்றன…
கோவை சென்னை என இரண்டு அழகான நகரங்களை சுற்றிப் பார்க்கும் உணர்வை ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமி கொடுத்திருக்கிறார்..
ஹைக்கூ படத்தின் வெளியிட்டு விநியோ உரிமையை சக்திவேல் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பாக சக்திவேலன் செய்திருக்கிறார்.. ப்ரொமோஷன் பணிகளில் சிறப்பு..
யுவராஜ் சின்னச்சாமி இயக்கி இருக்கிறார்… ஆக்சன் படங்களுக்கு மத்தியில் ஒரு அழகான ரொமாண்டிக் பீல் குட் மூவி கொடுத்திருக்கிறார்.. காதல் ஒன்று தான் காதலிகள் வேறு அவர்களின் உணர்வுகள் வேறு பெண் என்பவள் ஒரே மாதிரி இருக்க மாட்டார் ஆனால் அவர்களுக்கு ஏற்ப ஆண்கள் வளைந்து கொடுத்தால் காதலில் ஜெயிக்கலாம் என்ற சோசியல் மெசேஜ் கொடுத்திருக்கிறார்..

முன்னாள் காதலியை வைத்து இந்நாள் காதலியை மதிப்பிட முடியாது.. ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மதிப்-பெண் உண்டு என்பதை மனதுக்கு நிறைவாக ஏகன் கேரக்டர் மூலம் சொல்லி இருக்கிறார் டைரக்டர் யுவராஜ் சின்னச்சாமி..
Haiku movie review

