மொத ராத்திரி விமர்சனம் 3.75/5.. பார்ட்னர் இல்லாத பர்ஸ்ட் நைட்
மொத ராத்திரி விமர்சனம் 3.75/5.. பார்ட்னர் இல்லாத பர்ஸ்ட் நைட்
ஸ்டோரி…
நாயகன் ரிஷிகாந்த்.. நாயகி அனிஷ்கா அனில்குமார்..
இவர்கள் திருமணம் முடிந்த முதல் இரவு அன்று நாயகனை விட்டு நாயகி ஓடி விடுகிறார்.. முதல் ராத்திரி அன்று மனைவி ஓடி விட்டால் கணவனின் நிலை என்ன.? என்பதுதான் சுவாரஸ்யமான திரைக்கதை..
கேரக்டர்ஸ்…
மருது ஆக ரிஷிகாந்த்.. அலட்டிக் கொள்ளாத நடிப்பில் கவர்கிறார்.. ஏமாற்றப்பட்டதின் வலியை முகபாவனைகளை முடிந்தவரை எதார்த்தமாக கடத்தியிருக்கிறார்..
ஏற்கனவே இளைஞர்கள் நெஞ்சில் ஆழமாக பதிந்து விட்டவர் அனிஷ்மா… சிறை மற்றும் யூத் படங்களில் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு மொத ராத்திரி படத்திலும் அழுத்தமான வேடம்.. அழகாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்
இவர்களுடன் சேத்தன், பக்ஸ், சங்கீதா பாலன், பானுப்பிரியா, வர்ஷினி கார்மேகம், அப்துல் லீ, ஏ.வெங்கடேஷ் ஆகியோர்களின் கேரக்டர் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது..
டெக்னீசியன்ஸ்…
ஒளிப்பதிவாளர் சுரேந்தரன் பரஞ்சோதி.. கல்யாண வீடு.. முதல் இரவு கலாட்டா என அனைத்தையும் சுவாரசியமாக ரசிக்கும்படி படமாக்கி இருக்கிறார்..
பரத் சங்கரின் இசையில் பாடல்கள் சிறப்பு.. பின்னணி இசை கதையுடன் ஒன்றி பயணிக்கிறது.
இயக்குநர் ராஜா கருப்புசாமி.. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து இருக்கிறார்.. மனித வாழ்வில் திருமணம் முக்கியமானது.. அதை ஜோடிகள் கையாளும் விதம்.. அதில் ஏற்படும் சிக்கல்கள் அதிலிருந்து மீள நினைக்கும் சிலர் என அழகாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் ராஜா கருப்புசாமி..
Modha Rathri movie review

