கான் சிட்டி விமர்சனம்…
கான் சிட்டி விமர்சனம்…
ஸ்டோரி…
1990 காலகட்டங்களில் நடக்கும் கதை இது.. தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரிகிறார் நாயகன் அர்ஜுன் தாஸ்.. கரண்ட் பில் கட்டணங்கள் செலுத்தும் கவுண்டரில் பணிபுரிகிறார்.. இவருக்கு மேல் அதிகாரி அருள் தாஸ் & வி டி வி கணேஷ்..
கடன் பிரச்சனையால் சிக்கித் தவிக்கிறார் அர்ஜுன் தாஸ்.. கரண்ட் பில் கட்ட வருபவர்களின் பணத்தை வசூல் செய்து அதற்கு கம்ப்யூட்டர் பில் ஏதும் கொடுக்காமல் கைப்பட எழுதி கொடுத்து விடுகிறார்.. அந்த பெரும் தொகையை வைத்து இரண்டு வாரங்களுக்கு ரொட்டேஷன் செய்து அதன் மூலம் வட்டி எடுத்து அதை வைத்து தன்னுடைய கடன் பிரச்சினை சமாளிக்கிறார்.. ஒரு கட்டத்தில் இன்னும் பெரிதாக பிசினஸ் செய்ய ஆசைப்படுகிறார்..
அதுபோல நாயகி அன்னா பென்… வீடு வாடகை எடுத்து தருவதாக சொல்லி அதன் மூலம் பல லட்சங்களை சுருட்டி தன்னுடைய கடன் பிரச்சனையை சமாளிக்கிறார்..
மற்றொருபுறம் வடிவுக்கரசி மற்றும் அவரது மகன் யோகி பாபு இருவரும் டிரஸ்ட் மூலம் பணத்தை சம்பாதித்து சொகுசாக வாழ நினைக்கின்றனர்… ஒரு கட்டத்தில் இவர்களின் சதி திட்டங்கள் மக்களுக்கு தெரிய வர நால்வரும் கைதாகின்றனர்..
உங்கள் நால்வரின் பிரச்சினையை தீர்த்து வைக்கிறேன்… நீங்கள் 10 கோடி தந்தால் இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என அன்னா பெண்ணுவின் மகனை பிடித்து வைத்துக் கொண்டு மிரட்டுகிறார் போலீஸ் அதிகாரி.
அதன் பிறகு நடந்தது என்ன.? இவர்கள் நால்வரும் அவர் சொன்னது போல செய்தார்களா? அந்த சதி திட்டத்திற்கு உடன்பட்டார்களா? குழந்தையை எப்படி மீட்டனர்.. இறுதியில் என்ன ஆனது என்பது தான் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…
கதாநாயகனாக கதையின் நாயகனாக அசத்தியிருக்கிறார் அர்ஜுன் தாஸ்.. ஒரு பிரச்சனை தீர்க்க அடுத்த பிரச்சினையில் சிக்கி.. அதில் இருந்து மீள அடுத்த பிரச்சனை செய்து என பலே கில்லாடியாக வருகிறார்..
யோகி பாபுவின் ஒன்லைன் காமெடி ரசிக்க வைக்கிறது.. பெரும்பாலும் பிளாக் காமெடி போன்ற ஒன்லைன் ரியாக்ஷன் ரசிக்க வைக்கிறது..
எல்லாக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே.. அவன் தீயவராவது… அவர் தீயவராவது அன்னை வளர்ப்பினிலே என்ற பாடல் வடிவுக்கரசி யோகி பாபுவுக்கு மிகப் பொருத்தம்..
இதுவரை ஏற்காத வேடத்தில் வடிவுக்கரசி.. பல படங்களில் பாவப்பட்ட பெண்மணியாக வரும் வடிவுக்கரசி இதில் காமெடியில் புது வடிவம் கொடுத்திருக்கிறார்.
நாயகி அன்னா பென்.. மலையாள திரை உலகில் முன்னணி நடிகையான இவர் சூரியின் கொட்டுக்காளி படத்தில் நாயகியாக நடித்திருந்தார்.. தற்போது தமிழில் இவருக்கு இரண்டாவது படம்..
அப்பாவியான முகத்தை வைத்துக்கொண்டு அசால்டாக பணத்தை கொள்ளை அடிக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கிறார்.. உங்கள நம்பாமல் இருப்பேனா என நம்பிக்கை குரல் கொடுத்து நம்பிக்கை துரோகம் செய்யும் கேரக்டரில் நடித்திருக்கிறார்..
அரசு சம்பளம் வாங்கி ஒழுங்காக வேலை செய்யாத அலட்சிய அரசு அதிகாரியாக விடிவி கணேஷ்.. சந்தேகப்படும் மேல் அதிகாரியாக அருள்தாஸ்.. கல்யாணசுந்தரம் போலீஸ் கேரக்டர் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார்..

டெக்னீசியன்ஸ்…
2000 காலகட்டத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட படம் ஓகே தான்… ஆனால் அதற்காக ஒரு மங்கலான ஒளிப்பதிவை ஒழிப்பதிவாளர் கொடுத்திருப்பது ஏனோ.? முக்கியமாக மின்சாரத் துறையில் கரண்ட் இல்லாதது போலவே காட்சிகள் இருக்கிறது..
ஹரிஷ் துரைசாமி என்பவர் இயக்கி இருக்கிறார்.. அவருக்கு இது முதல் படம் என்றாலும் நல்ல ஒரு மெச்சூரிட்டியான மேக்கிங் கொடுத்துள்ளார்.. ஆனால் படத்தில் ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள்..
அசால்டாக கரண்ட் பில் தொகையை அட்டை போடுவது… போலியான டோல்கேட் அமைப்பது அதற்கு மந்திரி எம்எல்ஏ வை பேச வைப்பது.. என எதுவும் நம்பும் படியாக இல்லை…
முக்கியமாக டிவி சேனலில் வரும் அருவி மதன் ஆபீஸ் உள்ளே புகுந்து அர்ஜுன் தாஸ் அவரது பெயரில் செய்தித்தாளில் செய்தி போடுவதெல்லாம் கொஞ்சம் கூட ஏற்புடையதாக இல்லை..
ஒரு செய்தி பதிவிடும்போது.. அதை பலர் சரி பார்ப்பார்கள்… எடிட்டரின் அனுமதி தேவை இப்படி பல விதிமுறைகள் இருக்கும் போது ஒரு செய்தியை பிரசுரிப்பதெல்லாம் நம்பும் படியான காட்சிகள் இல்லை..
படத்தில் தான் ஃபிராடு என்று நினைத்தால் திரைக்கதை அமைத்தலிலும் ஏகப்பட்ட பிராடு போல.. அனைத்தும் லாஜிக் மீறல் ஓவர் லிமிட்டை தாண்டி இருக்கிறது..
ஆக லாஜிக் பார்க்காமல் காமெடி மேஜிக் பார்க்க சென்றால் இந்த கான் சிட்டியை (மங்களூர்) சிட்டியை ரசித்து வரலாம்.
Con City movie review

