சம்பாரிக்கிறதும் சமாளிக்கிறதும்..; ‘கட்டா குஸ்தி 2’ பட ரிலீஸ் அப்டேட்
சம்பாரிக்கிறதும் சமாளிக்கிறதும்..; ‘கட்டா குஸ்தி 2’ பட ரிலீஸ் அப்டேட்
செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ‘கட்டா குஸ்தி’.
2022ல் இப்படம் வெளியானது.. இதன் வெற்றியைத் தொடர்ந்து அப்போதே படத்தின் பார்ட் 2 குறித்த கேள்விகள் ரசிகர்கள் மனதில் எழுந்தன..
தற்போது இதன் 2ம் பாகத்தை வேல்ஸ் நிறுவனம் மற்றும் விஷ்ணு விஷாலின் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.
இதிலும் விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், காளி வெங்கட், முனீஷ்காந்த், கஜராஜ், ஸ்ரீஜா ரவி உள்ளிட்டோருடன் கருணாகரனும் இந்த படத்தில் இணைந்துள்ளார்..
இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் ரிலீஸ் அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. ‘சம்பாரிக்கிறது மட்டும் வேலை இல்ல.. வீட்டை சமாளிக்கிறதும் புல்டைம் வேலை தான்..’ எனக் குறிப்பிட்டு ஜூலை 3ம் தேதி 2026 படம் ரிலீசாகும் என அறிவித்துள்ளனர்..
Gatta Kusthi 2 movie release date update

