எந்தா ரஜினி சாரே… விஜய்க்கு கமல் வாய்ஸ் கொடுக்கிறாரு..; ஸ்டாலினை சந்திச்சீங்க.. ஆளுநர் பத்தி பேசலையே.?

எந்தா ரஜினி சாரே… விஜய்க்கு கமல் வாய்ஸ் கொடுக்கிறாரு..; ஸ்டாலினை சந்திச்சீங்க.. ஆளுநர் பத்தி பேசலையே.?

எந்தா ரஜினி சாரே… விஜய்க்கு கமல் வாய்ஸ் கொடுக்கிறாரு..; ஸ்டாலினை சந்திச்சீங்க.. ஆளுநர் பத்தி பேசலையே.?

 

 

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தல் 234 தொகுதிகளில் 108 தொகுதிகளில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சி மாபெரும் வெற்றி பெற்றது.. இந்த 108 தொகுதிகளில் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சியில் வெற்றி பெற்றுள்ளார்.

விஜய் முதலமைச்சராக அவரது கட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு இன்னும் 11 இடங்கள் தேவைப்படுகிறது.

விஜய் வெற்றி பெற்றதும் உடனடியாக காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி தொடர்பு கொண்டு ஐந்து எம்எல்ஏக்களின் ஆதரவு அளிப்பதாக உறுதிப்படுத்தி உள்ளார்.

தற்போது வரை இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் 2+2 எம்எல்ஏக்களின் ஆதரவை அளிப்பதாக உறுதிப்படுத்தியுள்ளது..

இன்னும் விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் முழுமையான ஆதரவு கொடுக்கப்படவில்லை.. ஆனால் அதற்கான காட்சிகள் தமிழக அரசியலில் அரங்கேறி வருகிறது..

பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய இடம் ஆளுநர் மாளிகை அல்ல.. அது சட்டசபையில் தான்.. விஜய் சட்டசபையில் தனது மெஜாரிட்டியை நிரூபிப்பார்.. அதற்கு முன்பு அவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என திமுக கூட்டணியில் இருக்கும் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார்..

மேலும் தமிழகத் திரையுலக சேர்ந்த பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர்.. மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களும் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் மேற்கொள்ள வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.. ஆனால் ரஜினிகாந்த் ஆளுநரை பற்றி இதுவரை எதுவும் பேசவில்லை..

ரஜினிகாந்த் அரசியல் சார்ந்து செயல்படவில்லை என்றாலும் ரஜினியின் அரசியல் எப்போதும் மிகப்பெரிய தாக்கத்தை தமிழக அளவில் ஏற்படுத்தி வருவதை 30 ஆண்டுகளாக கண்டு வருகிறோம்..

இந்த நிலையில் ஆளுநரை பற்றியோ அல்லது நாட்டு நடப்புகளை பற்றிய ரஜினிகாந்த் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்த முன்னாள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆறுதல் சொல்லி இருக்கிறார் ரஜினிகாந்த்..

அப்போது இக்கட்டான சூழ்நிலையில் உங்களுடன் இருப்பேன் என்று அவர் வாக்குறுதி அளித்ததாகவும் தெரிகிறது.

 

TN peoples reaction about Rajini meet with Stalin

 

 

 

Related articles