29 திரைப்பட விமர்சனம்

29 திரைப்பட விமர்சனம்

29 திரைப்பட விமர்சனம்

 

கதை…

ஒவ்வொரு ஆண்மகனுக்கும் 30 வயது என்பது ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்தும்.. ஒரு சிலருக்கு திருமணம் ஆகி இருக்கலாம்.. ஒரு சிலருக்கு திருமணம் தள்ளி போகலாம்.. பொருளாதாரம் வாழ்க்கை முறை இந்த காரணங்களால் தள்ளி போகவும் வாய்ப்பு உண்டு..

இப்படியாக சூழ்நிலையில் 29 வயது நிரம்பிய ஒருவன் 21 வயது நிறைந்த ஒரு பெண்ணை சந்திக்கிறார். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே இவர்களின் கவித்துவமான காதல் கதை சொல்லும்..

சென்னைக்கு வேலை தேடி வருகிறார் நாயகன் விது.. வந்த இடத்தில் நாயகி ப்ரீத்தியை சந்தித்த பின் காதல் கொள்கிறார்.. இதன் பின்னர் இருவருக்கும் ஏற்படும் வாழ்க்கை மாற்றங்கள் மனநிலை மாற்றங்கள் ஆகியவற்றை சுவாரசியமாக எதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் ரத்னகுமார்..

நடிகர்கள்…

விது, பிரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் பாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..

வாழ்க்கை போன போக்கில் எந்த ஒரு லட்சியமும் இல்லாமல் தான் உண்டு தன் வாழ்க்கை உண்டு என்று கடந்து போகிறார் நாயகன் விது.. சமூகத்தில் மிகப்பெரிய பொறுப்பில் உயர வேண்டும் என இலட்சியத்தோடு வாழ்கிறார் பிரீத்தி அஸ்ராணி..

இவர்களின் வாழ்வியலை யதார்த்தம் கலந்து கவிதை குடை மழை எதார்த்தம் என அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்..

அயோத்தி-யில் கண் கலங்க வைக்கும் அருமையான நடிப்பை கொடுத்த பிரீத்தி தான் இந்த படத்தின் நாயகி.. இதிலும் அழகாகவே ஸ்கோர் செய்து ரசிகர்களை ஈர்த்து விடுகிறார்.

கல்லூரி கால வில்லனாக மாஸ்டர் மகேந்திரன்.. மன நிறைவான நடிப்பை கொடுத்திருக்கிறார்..

நாயகனின் அம்மாவாக ஆதிரா, நாயகியின் அம்மாவாக சிந்து ஷியாம் மற்றும் நாயகனின் அறையில் தங்கி இருக்கும் நண்பர் உள்ளிட்ட கதாபாத்திரங்களும் சிறப்பு.

தொழில்நுட்ப கலைஞர்கள்…

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்..

பின்னணி இசையை இதமாக கொடுத்திருக்கிறார் ஷான் ரோல்டன்.. ‘பொல்லாத ஆசைகள்…’ வரிகளும் இசையும் மனதில் இடம் பிடிக்கும்..

பெரும்பாலும் காட்சிகளில் எதார்த்தத்தை பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்..

இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ மற்றும் ஜீ ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்பராஜ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்..

தமிழகம் முழுவதும் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் மே 8ம் தேதி வெளியிடுகிறது..

மேயாதமான், ஆடை, குலுகுலு ஆகிய படங்களை இயக்கியவர் ரத்னகுமார் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்..

வழக்கமான காதல் கதை தானே… நாயகன் நாயகி சந்திக்கிறார்கள் என்று நாம் ஈசியாக சொல்லிவிட்டாலும் அதை ஒரு கவித்துமான வாழ்வியலோடு கலந்து இயக்குநர் ரத்னகுமார் சிறப்பு சேர்த்திருக்கிறார்..

இன்று… லவ் எந்த வேகத்தில் வருகிறதோ.. அதைவிட பிரேக் அப் அதிகரித்து விட்டன.. ஆனால் இன்றைய காலகட்டத்தை சாராமல் அழகாக இரு மனங்களின் வாழ்வியலை 29 இல் சொல்லி காதல் படங்களுக்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார் இயக்குனர் ரத்னகுமார்..

29 movie review