ஜெகதீஷ் – ஏஜிஎஸ் அர்ச்சனா – வேல்முருகன்..; நண்பர்களுக்கு அரசு பதவி கொடுக்கும் முதல்வர் விஜய்
ஜெகதீஷ் – ஏஜிஎஸ் அர்ச்சனா – வேல்முருகன்..; நண்பர்களுக்கு அரசு பதவி கொடுக்கும் முதல்வர் விஜய்
தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற பிறகு, அவரது நெருங்கிய நட்பு வட்டாரங்களுக்கு அரசுப் பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது..
விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ்க்கு தமிழக அரசு நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது..
மேலும் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் கே. வெங்கட நாராயணாவுக்கு தமிழ்நாட்டின் தில்லி சிறப்பு பிரதிநிதி பதவி வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது விஜய் பட தயாரிப்பாளர் ஏஜிஎஸ் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் பாடகர் வேல்முருகன் உள்ளிட்டோருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது..
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆண்டுக்கு ரூ. 10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டும் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தெரிவு செய்து உரிய பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் குழுவை மாநில அரசு இன்று அறிவித்துள்ளது.
அந்த குழுவின் தலைவராக மயிலம், பொம்மபுரம் ஆதினம், சிவஞான பாலய சுவாமிகளும், துணைத் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி கே. இராமநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குழுவின் உறுப்பினராக திரைப்படத் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் பின்னணிப் பாடகர் வேல்முருகன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, விஜய் நடித்துள்ள பிகில், கோட் உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது… நாட்டுப்புற பாடல்கள் மூலம் பிரபலமான வேல்முருகன் பல திரைப்படங்களில் பாடியுள்ளார்..
மேலும் தமிழக வெற்றி கழகத்தின் மூன்றாம் ஆண்டு விழாவில் விஜய வாழ்த்தி பாடகர் வேல்முருகன் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
AGS Archana Kalpathi and Singer Velmurugan got placed in Tamilnadu arangavalar kuzhu

