என் வழி தனி வழி.. அப்பா (சிவக்குமார்) படங்களை பார்ப்பதில்லை..; சூர்யா

என் வழி தனி வழி.. அப்பா (சிவக்குமார்) படங்களை பார்ப்பதில்லை..; சூர்யா

 

என் வழி தனி வழி.. அப்பா சிவக்குமார் படங்களை பார்ப்பதில்லை..; சூர்யா ஓபன் டாக்

 

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ்.. இந்தப் படத்தில் மமீதா பைஜூ மற்றும் ராதிகா சரத்குமார் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தத் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது..

நிமிஷ்ரவி ஒளிப்பதிவு செய்ய சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது..

இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது..

எனவே படக்குழுவினர் தீவிரமாக புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாவதால் தெலுங்கிலும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் சூர்யா… சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் பேசும்போது…

நான் அப்போது சினிமாவில் நடிக்க தொடங்கிய காலகட்டம்.. ஓரிரு படங்களில் நடித்துக் கொண்டிருந்தேன்.. அப்போது என் நண்பருடன் திருமண அழைப்பிதழ் கொடுக்க ஒருவரை சந்திக்க சென்றோம்.. அவர் ஒரு மினிஸ்டர்.. அந்த மினிஸ்டரிடம் என் நண்பர் இவர் சிவக்குமாரின் மகன் என அறிமுகம் செய்தார்.. அப்போது என்ன செய்கிறீர்கள் என்று கேட்டார்..

நான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னேன் அப்போது நீங்கள் உங்கள் தந்தையைப் போல அந்த உடல் மொழியில் நடிக்க போகிறீர்கள் அப்படி தானே என்று கேட்டார்..

அப்போதுதான் எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது.. அவர் சாயலில் நாம் நடிக்க கூடாது.. அப்பா படங்களை பார்ப்பதை நிறுத்தி விட்டேன்… அப்பா படங்களை பார்ப்பதால் எனக்கும் அவர் சாயல் வந்துவிடும் என்பதால் பார்ப்பதை குறைத்துக் கொண்டேன்..

எனக்கான ஒரு பாதையை அமைத்துக் கொண்டேன்.. எனக்கான ஒரு உடல் மொழியும் உருவாக்கிக் கொண்டேன் என்று அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா..

 

Suriya open talk about his father movies and his cinema formula

 

 

 

 

 

Related articles