கெணத்த காணோம் விமர்சனம்…

கெணத்த காணோம் விமர்சனம்…

கெணத்த காணோம் விமர்சனம்…

 

ஒரு படத்தில் கிணத்த காணோம் என வடிவேலு வசனம் பேசுவார்.. அதையே யோகி பாபு நடிக்கும் படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளனர்.. ஆனால் கதைக்கும் பொருத்தமான தலைப்பு தான் இது..

ஸ்டோரி…

நாயகன் யோகி பாபு.. சிலை செய்பவர்.. இவர் கோயில் பூசாரி.. இவரும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த லவ்லின் காதலிக்கிறார்கள்.. இவர்கள் காதலுக்கு குடிநீர் பிரச்சினையாக இருக்கிறது..

யோகி பாபுவின் கிராமத்தில் தண்ணீர் பஞ்சம் இருப்பதால் பெண் கொடுக்க மறுக்கின்றனர்.. அந்த சூழ்நிலையில் தான் யோகிபாபு வசிக்கும் நிலத்தில் நீர் நிறைந்திருப்பதாக ஒருவர் குறி சொல்லவே அங்கு கிணறு வெட்ட கிராமத்து மக்கள் வேண்டுகோள் வைக்கின்றனர்..

தனக்கு இருப்பது ஒரே நிலம் என்பதால் யோகி பாபு குழப்பத்தில் தவிக்கிறார்.. ஒரு கட்டத்தில் அவர் ஊர் மக்களிடம் ஒரு நிபந்தனை விதிக்கிறார். அது என்ன.? யோகி பாபு ஆசைப்பட்டபடி திருமணம் நடைபெற்றதா ள்.? ஊர் மக்களின் பிரச்சினை தீர்ந்ததா என்பதெல்லாம் மீதிக்கதை..

கேரக்டர்ஸ்…

வழக்கமாக கவுண்டமணி பாணியில் எவருக்கும் மரியாதை கொடுக்காமல் பேசும் பழக்கம் கொண்டவர் யோகி பாபு.. ஆனால் கோயில் பூசாரி கேரக்டருக்கு இது பொருந்தவில்லை.. அவரின் எதார்த்தமான நடிப்பும் கிளைமாக்ஸ் காட்சியில் அவரின் நிபந்தனையும் ரசிக்க வைக்கிறது..

யோகி பாபு லவ்லின் காதல் கதைக்கு ஒட்டவில்லை..

லவ்லின் கண்ணழகில் கவர்ந்தாலும் போதுமான ஸ்கோப் இல்லை..

ரேச்சல், ஜார்ஜ் மரியான், ஹலோ கந்தசாமி, ராமகிருஷ்ணன் & பலர்.. அனுபவ நடிப்பில் படத்திற்கு உறுதுணையாக இருந்துள்ளனர்..

டெக்னீசியன்ஸ் …

ஒளிப்பதிவு: தியாகராஜன்
இசை: நிவாஸ் கே பிரசன்னா

தயாரிப்பு: ஆர்.ரமேஷ்பாபு
இயக்கம்: சுரேஷ் சங்கய்யா

நிவாஸ் கே பிரசன்னாவின் இசை நேர்த்தி.. கிராமத்து மண் மணக்க இசை தந்திருக்கிறார்.. தியாகராஜன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்..

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வறட்சி பகுதிகளை தன்னுடைய கேமராவில் அழகாக இருக்கிறார். அதே சமயம் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக அதில் டைனோசர்ஸ் கூடு வரும் லாங் சாட் ட்ரோன் காட்சி ரசிக்க வைக்கிறது..

ஒரு கிடாயின் கருணை மனு மற்றும் சத்திய சோதனை ஆகிய படங்களை இயக்கிய சுரேஷ் சங்கையா இந்த படத்தையே இயக்கி இருக்கிறார்.. ஊர் நன்மைக்காக தன் நிலத்தை கொடுத்து கிணறு வெட்ட சொல்லி ஆனால் அதற்குள் ஒரு பிரச்சனையை எதிர்பார்க்காத யோகி பாபு கேரக்டர் ரசிக்க வைக்கிறது..

வெறும் சிரிப்பு மட்டுமில்லாமல் சிந்தனை தூண்டும் சில காட்சிகளையும் வைத்திருக்கிறார் சுரேஷ் சங்கையா..

மக்கள் அலட்சியத்தால் 100 நாள் வேலை திட்டம் எப்படியெல்லாம் வீணாகிறது.? ஊர் தலைவர் மக்கள் பணத்தை சுரண்டுவதையும் அப்பட்டமாக காட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தியிருக்கிறார்

மண்வளம்.. தொல்பொருள் ஆராய்ச்சி என பேசும் அதிகாரிகள் மக்கள் நலன் சார்ந்த விஷயங்களிலும் ஈடுபட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறார் சுரேஷ் சங்கையா.. இவர் தற்போது காலமாகிவிட்டார் என்பது கூடுதல் தகவல்..

 

Kenatha Kanom movie review